Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (10-09-2022) பிச்சைகாரர்களுக்கு எலுமிச்சை சாதம் தானம் செய்யவும்

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (10-09-2022) பிச்சைகாரர்களுக்கு எலுமிச்சை சாதம் தானம் செய்யவும்

எண்கணித பலன்கள்

எண்கணித பலன்கள்

Numerology | செப்டம்பர் 10 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • Trending Desk
  • 4 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)  :

இன்றைய காரியங்களை நிறைவேற்றுவதில் தன்னம்பிக்கை பெரிய அளவில் உதவி செய்யும். இன்று உங்களுக்கு அனைத்து சௌகரியங்களும் கிடைக்கும். ஆனால் பண வரவு அல்லது இலக்கை அடைவது கடினமாக இருக்கும். விளையாட்டு வீரர்கள் வெற்றியுடன் வீடு திரும்புவீர்கள். பெண்கள் தங்கள் சமையல் மூலமாக பிறர் மனதை வெல்லக் கூடும். சூரிய பகவானுக்கு தண்ணீர் வழங்கி வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு

அதிர்ஷ்ட எண் - 3

தானம் - சூரியகாந்தி எண்ணெய் தானம் செய்யவும்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்) :

ஏற்றத்தாழ்வான உணர்ச்சிகள் உங்கள் சிந்தனையை பாதிக்கும். பணி மற்றும் பெர்சனல் வாழ்க்கையில் சீராக பயணிக்க எமோஷனல் பேலன்சை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவழிக்க சரியான நாள் ஆகும். முதலீடுகள் மீதான லாபங்களும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் – நீலம் மற்றும் பீச்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 2

தானம் – கோவிலில் இரண்டு தேங்காய்கள் தானம் செய்யவும்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்) :

நீங்கள் புகழ் பெறுவதற்கு நல்ல தளம் கிடைக்கும். உங்கள் திறமை மற்றும் அறிவை பொது இடத்தில் வெளிப்படுத்துங்கள். மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் முயற்சிகளை அனைவரும் புரிந்து கொள்வார்கள், அதற்கும் வெகுமதியும் கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்ல மறக்க வேண்டாம். கனிவான, இனிமையான சொற்களைப் பேசுவதன் மூலமாக உங்கள் பார்ட்னரின் மனதை கவரலாம். காதலை வெளிப்படுத்த சரியான நாள் ஆகும். மஞ்சள் நிற உணவை சமைத்து சாப்பிடுவது, குடும்பத்தில் குரு கிரகத்தின் ஆற்றலை அதிகப்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்ச் மற்றும் சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் – வியாழன்

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் – பிச்சைகாரர்களுக்கு எலுமிச்சை சாதம் தானம் செய்யவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்) :

முதலீடு செய்ய இன்று சாதகமான நாள். இன்றைய நாளில் அனைத்தும் கனக்கச்சிதமாக நடக்கும். ஆனால், இன்று மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு லாபம் கிடைக்க சிறிது காலம் ஆகும். பங்குச்சந்தை முதலீட்டில் கவனமாக இருப்பது நல்லது. திட்டமிடுவதில் பெரும்பாலான நேரத்தை செலவிட வேண்டி வரும். மூத்தவர்களிடம் இதுதொடர்பாக அறிவுரையை கேட்கலாம். உடலை குளுமையாக வைத்திருக்க சிட்ரஸ் பழங்களை சாப்பிட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு பச்சை தானியங்களை தானமாக வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14 , 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்) :

பணி மேசையில் அதிர்ஷ்டம் அதிகரிக்க, கிரிஸ்டலால் செய்த ஒரு தாமரையை வைக்கவும். எல்லாம் நல்லபடியாக நடக்கும். தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு சிறப்பான நாள் ஆகும். சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களிடத்தில் ரகசியம் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இன்றைக்கு விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் அசைவம் ஆகியவற்றை தவிர்க்கவும். சொத்து சார்ந்த முடிவுகள் சாதகமான பலனை தரும். விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்

அதிர்ஷ்ட எண் - 5

தானம் – ஏழைகளுக்கு சர்க்கரையை தானமாக கொடுக்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்) :

தனிப்பட்ட விஷயங்களில் உங்கள் மீது மற்றவர்கள் பெரிய அளவுக்கு பொறாமை கொள்ளலாம். நீங்கள் குழப்பமாக உணர்வீர்கள், அதே நேரத்தில் இறைவனுக்கு நன்றி சொல்லும் சாதகமான சூழலும் ஏற்படும். குழந்தைகளைப் பற்றி பெற்றோர்கள் பெருமை கொள்வார்கள். குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். வாகனம், மொபைல் மற்றும் வீடு வாங்குவதற்கு சிறந்த நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம் மற்றும் பீச்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - வெள்ளை நாணயத்தை தானம் செய்யவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்) :

இன்று நிறைய ஏற்ற, இறக்கங்கள் காணப்படும். ஆகவே வணிகம் சார்ந்த விஷயங்களில் சாதூர்யமாக செயல்படவும். மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர் பாலினத்தவர் சொல்லும் அறிவுரைகளை ஏற்க தயாராக இருங்கள். வழக்கறிஞரின் அறிவுரையைப் பெறுவது பணத்தை சேமிக்க உதவியாக இருக்கும். திருமணத்திற்கு பொருத்தமான வரன் இன்று கிடைக்கும். சிவன் கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்வது நிம்மதியைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 7

தானம் – கோவிலில் பசு மஞ்சளை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்) :

விலங்குகளுக்கு உணவளியுங்கள். எந்தவொரு சூழலையும் அனுசரித்து பணி செய்யவும். உங்களுக்கான அங்கீகாரம் கட்டாயமாகக் கிடைக்கும். இன்று சில விஷயங்களில் இருந்து தப்பிக்க உங்கள் அறிவு மற்றும் பணத்தை பயன்படுத்தவும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் மீது புகார் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் அடர்த்தியான நிறம் கொண்ட ஆடைகளை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

அதிர்ஷ்டமான நாள் - சனி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவையானவர்களுக்கு காலணி தானம் செய்யவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்) :

நேர்மையாகவும், நடுநிலையோடும் இருப்பது நல்லது. தம்பதியர் எதிர்காலத்திற்கு திட்டமிட இன்று உகந்த நாளாகும். அரசாங்க ஒப்பந்தங்கள் இன்று எந்த சிக்கலும் இன்றி கையெழுத்தாகும். எதிர்கால அரசியல் தலைவர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொதுக்கூட்ட பேச்சு வாய்ப்பு, நேர்காணல் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளவும். மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - சிவப்பு பருப்பை தானம் செய்யவும்.

செப்டம்பர் 10 அன்று பிறந்த பிரபலங்கள் : அனுராஜ் காஷ்யாப், மஞ்சு வாரியர், அதுல் குல்கர்னி, மனிஷ் பாண்டே, கோவிந்த் வல்லப் பண்ட்
Published by:Ramprasath H
First published:

Tags: Numerology, Rasi Palan

அடுத்த செய்தி