ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தை அமாவாசை... தாமிரபரணி கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்...!

தை அமாவாசை... தாமிரபரணி கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்...!

தாமிரபரணி ஆறு

தாமிரபரணி ஆறு

Thai Amavasai Tirunelveli | தை அமாவாசை தினம் குடும்பத்தில் நீத்த முன்னோர்களுக்கு மக்கள் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர். தாமிரபரணி உள்ளிட்ட நீர் நிலைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

அமாவாசை தினம் என்றாலே வழிபாடு நடத்துவதற்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்துவதற்கு ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை காலங்கள் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது . உயிர் நீத்தவர்களை திதி காலங்களில் அவர்களை நினைத்து வழிபாடு நடத்த முடியாதவர்கள் கூட இந்த தை அமாவாசை காலத்தில் வழிபாடு நடத்தலாம்.

முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்துவது அனைத்து பகுதிகளிலும் நடக்கும் ஒன்றாக இருந்தாலும் நீர் நிலைகளில் வழிபாடு நடத்துவது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. இன்று தை அமாவாசை தினம் என்ற நிலையில் தாமிரபரணி பாய துவங்கும் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கும் புன்னக்காயில் பகுதி வரை பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தில் நீத்த முன்னோர்களை நினைத்து நீர் நிலைகளில் நீராடி, தண்ணீர் இறைத்து, வேத மந்திரங்கள் முழங்க வழிபாடு நடத்துகின்றனர்.

இன்று நடத்தும் வழிபாடு தங்கள் குடும்பத்தை சேர்ந்த நீத்த முன்னோர்களுக்கு நேரடியாக சென்றடையும் என்பது மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, திருநெல்வேலி மாநகரின் பகுதிகளான குறுக்குத்துறை, வண்ணாரப்பேட்டை, சீவலப்பேரி தூத்துக்குடி மாவட்டத்தின் முறப்பநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகாலையிலேயே வரத் துவங்கிய பொதுமக்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்துகின்றனர்.

இதே போல முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி இராமநாதபுரம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் வழிபாடுகள் சிறப்பானதாக உள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்திலும் அதிகாலையிலேயே குவிந்த பொதுமக்கள் அருவியல் புனித நீராடி எள் தண்ணீர் இரைத்து வழிபாடு நடத்துகின்றனர்.

தை அமாவாசை போன்ற அமாவாசை காலங்களில் குடும்பத்தில் நீத்த முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தினால் குடும்பம் சுபிட்சமாக இருக்கும். முன்னோர்களின் ஆசியில் சகல செல்வங்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் தை அமாவாசை சிறப்பானதாக அமைந்துள்ளது.

செய்தியாளர்: சிவமணி, நெல்லை

First published:

Tags: Nellai, Thai Amavasai