ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

வைத்தீஸ்வரன் கோயிலில் குலதெய்வக் வழிபாடு செய்ய குவிந்த மக்கள்...

வைத்தீஸ்வரன் கோயிலில் குலதெய்வக் வழிபாடு செய்ய குவிந்த மக்கள்...

வைத்தீஸ்வரன் கோயில்

வைத்தீஸ்வரன் கோயில்

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் 2ஆண்டுக்கு பிறகு குலதெய்வக் வழிபாடு செய்ய குவிந்த நகரத்தார் மக்கள் . நீர் மோர் கொடுத்தும் அன்னதானம் வழங்கியும் உற்சாகமாய் வரவேற்கும் வைத்தீஸ்வரன் கோவில் பொதுமக்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. உலக புகழ்பெற்ற இக்கோவிலில் செல்வமுத்துக்குமார சுவாமி செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.

இவ்வளவு சிறப்புமிக்க இந்த கோயிலில் அருள்பாலிக்கும் தையல் நாயகி அம்மனை தங்களது குலதெய்வமாக கொண்டு வழிபடும் நகரத்தார் மக்கள் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 2ஆவது செவ்வாய்கிழமை தங்கள் பகுதியில் இருந்து 100கிமீட்டர் தூரம் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வருகை தந்து சுவாமிகளை வழிபாடு செய்து செல்வது வழக்கம்.

பூம்புகார் பகுதியில் இருந்து குடியேறிய நகரத்தார் மக்கள் காரைக்குடி, கீழச்சிவல்பட்டி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர். பல தலைமுறைகளாக தொடரும் இந்த வழக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக  பாதயாத்திரை  யாரும் வரஇயலவில்லை. இந்தாண்டு கொரோனா தொற்று குறைந்து அரசு கொரோனா கட்டுபாடுகளை முழுமையாக தளர்த்தியுள்ளதால் நகரத்தார் வழிபாடு செய்வதற்காக நேற்று மாலை முதல் வைத்தீஸ்வரன் கோவில் நகரில் குவிந்து வருகின்றனர்.

மேலும் படிக்க... இன்று சர்வ ஏகாதசி விரதம்... எவ்வாறு அனுஷ்டிப்பது?

தங்கள் குலதெய்வமான தையல்நாயகி அம்மனுக்கு சீர்வரிசை பொருட்களை எடுத்துக்கொண்டு பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோவில் வந்தடைந்துள்ள மக்கள் சித்திரை 2ஆம் செவ்வாய் தினமான இன்று காலை அம்மனை வழிபட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி திரும்பிச் செல்வார்கள். குல தெய்வ வழிபாட்டிற்காக பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு வழி நெடுகிலும் ஆங்காங்கே நீர்மோர் அன்னதானம், வழங்கி உற்சாகமாய் வைத்தீஸ்வரன் கோயில் நகர மக்கள் வரவேற்று வருகின்றனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Sirkazhi