ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்: இந்த எண்ணில் பிறந்தவர்கள் இன்று திடீர் பண வரவை எதிர்பார்க்கலாம்... (மே 22, 2022)

எண் கணித பலன்: இந்த எண்ணில் பிறந்தவர்கள் இன்று திடீர் பண வரவை எதிர்பார்க்கலாம்... (மே 22, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

மே 22 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் பெர்சனாலிட்டியின் பலத்தை உபயோகிப்பதற்கு அழகிய தருணம் இது. முற்றிலும் உங்களுக்கு சாதகமான விஷயம் நடக்க இருக்கிறது. சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலமாக பணம் சேர்க்க சிறப்பான நாளாகும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆசிரியர்கள் அல்லது பயிற்சியாளர்களிடம் இருந்து சிறுவர்கள் பாராட்டு பெற இருக்கின்றனர்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 1

தானம் - பிச்சைக்காரர்களுக்கு ப்ளூ நிறத்தில் துணி தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக இருக்காமல், தாராள சிந்தனை போக்குடன் இருங்கள். உங்களுக்கு எந்தெந்த இடங்களில் லாபம் கிடைக்கும் என்பதை கண்டறியவும். உங்கள் உணர்வுகளையும், இலக்குகளையும் மட்டுப்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். உங்களை அவமதிக்கும் ஒருவரை நீங்கள் சந்திக்க நேரிடும். ஆகவே கவனமுடன் இருங்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழில்களில் புதிய வளர்ச்சி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவிலில் வெள்ளை நிற இனிப்புகள் வழங்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நடிகர்கள் தங்கள் நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதற்கு சிறந்த நாளாகும். பணியிடங்களில் உங்களுக்கான நியமனங்கள் காத்திருக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் தங்கள் பேச்சின் மூலமாக பிறரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். காதல் செய்பவர்கள் திறந்த மனதுடன் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். அரசு அதிகாரிகள் தன்னை சுற்றியிருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - பணிப்பெண்ணுக்கு குங்குமப்பூ தானமாக கொடுக்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு உங்கள் ஆற்றல் உயர்வாக இருக்கும். ஒற்றைப் பாதையை நோக்கி கவனம் செலுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் சொத்து வாங்கும் முடிவை ஒத்திவைக்க வேண்டும். அரசியலில் இருப்பவர்கள் மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் இருப்பவர்கள் பயணம் செய்வதற்கு சிறப்பான நாளாகும். சைவ உணவு மற்றும் தியானம் ஆகியவற்றை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சைக்காரர்களுக்கு கட்டாயம் சிட்ரஸ் பழங்களை தானம் செய்யவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எந்த அளவுக்கு கடினமாக உழைக்கக் கூடியவர், இலக்கில் எந்த அளவுக்கு தீவிரமாக உள்ளீர்கள் என்பதற்கு உங்கள் செயல்பாடுகளே சாட்சியாக இருக்கும். தனிப்பட்ட வாழ்வில் ரொமாண்டிக் வாய்ப்புகள் நிகழ இருக்கின்றன. பழைய நண்பர் அல்லது உறவினர் உங்களிடம் உதவி கேட்கக் கூடும். அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பான திறனை வெளிப்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - பச்சை நிற காய்கறிகளை தானமாக கொடுக்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களை தவறாகப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. ஆகவே உங்கள் புத்திக்கூர்மையை பயன்படுத்தி அத்தகைய நபர்களை புறக்கணிக்கவும். குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுங்கள். புதிய வீடு வாங்க அல்லது புதிய வேலை தேடுவோருக்கு, அந்தக் கனவு நனவாகக் கூடும். நடிகர்கள் மற்றும் ஊடகத்துறையினருக்கு வெற்றி கிடைக்க இருக்கிறது. சந்தேகங்களுக்கு தெளிவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு இனிப்புகள் கொடுக்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அரசியலில் உள்ள இளைஞர்கள், நிர்வாக அதிகாரிகள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு துறை சார்ந்த வளர்ச்சி காணப்படும். புதிய உறவுகள் மலரும். எதிர் பாலினத்தவர் உங்கள் அதிர்ஷ்டத்திற்கு காரணமாக அமைவர். இன்று கனிவாக பேசினால் அனைத்திலும் வெற்றி நிச்சயம். பெண்களுக்கு பங்குச் சந்தையில் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவிலில் குங்குமம் தானமாக வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பெரும் முடிவுகளை எடுக்கும்போது மன உறுதியுடன் செயல்படுங்கள். பணப் பலன்கள் நிச்சயமாக கிடைக்கும். உங்கள் கடந்த கால கர்மவினைப் பலன்கள் இப்போது நன்மையை தரும். சமூகத்தில் உள்ள விரிவான பழக்கத்தின் உதவியோடு இன்றைக்கு வெற்றி கிடைக்கும். அறிவை வளர்த்துக் கொள்வதில் நேரம் செலவிடுவீர்கள். பொது வாழ்க்கையில் இருப்பவர்களின் புகழ் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - பிச்சைக்காரர்களுக்கு சிவப்பு நிற பழங்களை தானம் செய்யவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பங்குச் சந்தை தரகர்கள், நகை விற்பனையாளர்கள், கல்வியாளர்கள், நடிகர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள், சொத்து தரகர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பான அங்கீகாரம் மற்றும் உயர்வு கிடைக்க இருக்கிறது. காதலில் இருக்கும் நபர்கள், உங்களுக்கு தூது செல்லும் நபர்களின் நோக்கம் குறித்து கவனமாக இருக்க வேண்டும். திடீர் பண வரவை எதிர்பார்க்கலாம். நாள் முழுவதும் வாழ்த்து மழை இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - வீட்டு உதவியாளர்களுக்கு மாதுளம்பழம் தானமாக கொடுக்கவும்.

மே 22 அன்று பிறந்த பிரபலங்கள் : ராஜா ராம் மோகன் ராய், பத்மநாப சிங், நெடுமுடி வேணு, மெஹபூபா முஃப்தி, ரஜீத் சிங்

First published:

Tags: Numerology