Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த எண்ணில் பிறந்தவர்கள் இன்று மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்... (மே 21, 2022)

எண் கணித பலன்: இந்த எண்ணில் பிறந்தவர்கள் இன்று மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்... (மே 21, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | மே 21 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்...

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஒரு சொத்தை வாங்குவதை விட ஒரு சொத்தை விற்பனை செய்வதற்கான சிறந்த நாள் இன்று. பழைய சொத்து அல்லது பழைய தகராறு தொடர்பான பிரச்னைகளை பேசி தீர்க்கவும் இன்று நல்ல நாள். கேம் மற்றும் ஸ்போர்ட்ஸ்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். கட்டுமானப் பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ், புத்தகங்கள், மருந்துகள் மற்றும் நிதி உள்ளிட்டவை சார்ந்த வணிகம் இன்று இருக்கும். இன்று சூரிய அஸ்தமனத்திற்கு முன் முக்கியமான பணிகளை முடிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு

அதிர்ஷ்ட எண் - 1

தானம் - பிச்சை கேட்டு வருவோருக்கு மஞ்சள் பருப்புகளை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் எப்போதும் உறுதி மற்றும் நேர்மையுடன் இருப்பீர்கள் ஆனால் உங்கள் இந்த நலன் குணமே பல சந்தர்ப்பங்களில் மனவேதனைக்கு காரணமாக இருக்கும். எனவே உணர்ச்சி ஏற்றத்தாழ்வை எதிர்கொள்ள இன்று உறுதியான மனநிலையில் இருங்கள். இன்று எவரேனும் உங்களை மரியாதை குறைவாக நடத்தலாம். எனவே கவனமாக இருங்கள். பொது மேடைகளில் கலந்து கொண்டு பெண்கள் பிரபலமாகலாம். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் உள்ளவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் புதிய உச்சத்தை இன்று காண்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - கோவிலில் பால் அல்லது எண்ணெய் தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். உங்களது திறமை வெளிப்படும். உங்களை சுற்றியுள்ளவர்கள் உங்களைப் பார்த்து பொறாமைப்படுவார்கள். பணியிடத்தில் இன்று உங்களது பதவி உயர்வு பற்றி பேச்சு எழலாம். உங்கள் பேச்சால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் பெரும்பாலும் உங்களுக்கு சாதகமான முடிவுகளை தரும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - வியாழன்

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - குழந்தைகளுக்கு மஞ்சள் பேனா அல்லது பென்சில் கொடுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் அர்ப்பணிப்புடன் ஈடுபடும் வேலைகளில் வெற்றி மிக அருகில் உள்ளது. இன்று உங்களுக்கான ஓய்வு நேரம் குறைவாகவே இருக்கும். எதிர்காலத்திற்காக இன்றே திட்டமிடும் நிலை காணப்படும். குறிப்பாக விளையாட்டு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளவர்களுக்கு இன்று சிறந்த நாள். முடிந்தவரை இன்று அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது நலம்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்டமான நாள் - சனி

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சைக்காரருக்கு இன்று ஆடை தானம் செய்தால் நல்லது

#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் எப்பொழுதும் அனைவருக்கும் பிடித்தவராக இருந்து வருகிறீர்கள். இன்றும் அப்படி தான் இருப்பீர்கள். மாணவர்கள் இன்று தங்கள் கல்வியில் சாதனை படைக்கலாம். ஒரு பழைய நண்பர் அல்லது உறவினர் இன்று உங்களின் உதவியை நாடலாம். பேங்கர்ஸ் , விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பான நாள். உங்களது கடந்தகால செயல்பாட்டிற்கான அங்கீகாரம் மற்றும் பலன்கள் இன்று உங்களுக்கு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - பிறருக்கு : பச்சை இலைக் காய்கறிகளை தானம் செய்ய வேண்டும்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் குடும்பத்தில் எப்போதும் ஸ்டாராக இருக்கும் நீங்கள், இன்று பணியிடத்தில் பலரின் பொறாமையை எதிர்கொள்ள நேரிடும். நிச்சயதார்த்தம், பிறந்தநாள் விழாபோன்ற குடும்ப விழாக்களில் கலந்து கொள்வீர்கள். குறிப்பாக நீண்ட நாட்களாக உங்களுடன் வெளியே செல்ல ஏங்கி கொண்டிருக்கும் உங்கள் குழந்தைகள் மற்றும் மனைவியுடன் நேரத்தை செலவிட இன்று சிறந்த நாள். நடிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இன்று வெற்றியை அனுபவிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - பிறருக்கு : ஏழைகளுக்கு இனிப்பு தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தொட்டதெல்லாம் துலங்கும், வெற்றியை மட்டுமே இன்று நீங்கள் ருசிப்பீர்கள் என்பதால் எதிலும் தயங்காமல் ரிஸ்க் எடுக்கலாம். .அரசியல்வாதிகளுக்கு ஒரு அழகான நாள் ஆனால் சாஃப்டாக பேசுவது இன்று முக்கிய பங்கு வகிக்கும். பெற்றோரின் ஆசிகளைப் பெற்று அவர்களுக்கு உங்கள் சேவைகளை செய்தால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். எதிர்பாலினத்தவரின் உறவு இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடி கொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - பிறருக்கு : கோவிலில் எண்ணெய் தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் என்ன தான் இன்று கடினமாக உழைத்தாலும் அதற்கான பலனை பெற சிறிது அதிர்ஷ்டம் தேவைப்படும். இன்று பண வரவு இருந்தாலும், அதற்கேற்ப சில செலவுகளும் வந்து சேரும். நாள் முடிவில் உங்களுக்கு வெகுமதி கிடைக்க கூடும். சில விஷயங்களில் தெளிவு பெற இன்று நேரத்தை செலவிடுவீர்கள். குறிப்பாக மருத்துவர்கள் இன்று பாராட்டுகளை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - பிறருக்கு : பிறருக்கு சிட்ரஸ் பழங்களை சாப்பிட கொடுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வேலை செய்யும் பெண்களாக இருந்தாலும் சரி, இல்லத்தரசிகளாக இருந்தாலும் சரி இன்று உங்களுக்கு சிறப்பான நாள் மற்றும் அனைவரின் பாராட்டையும் பெற கூடிய நாளாக அமையும். வளர்ச்சி மற்றும் வெற்றி மட்டுமே இன்று உங்களுக்கு இருக்கும். அரசாங்க உத்தரவுகளை அணுக இன்று சிறந்த நாள். விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், சமையல் கலைஞர்கள், பெண் நடிகர்கள், பாடகர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - பிறருக்கு : வீட்டு வேலை செய்பவர் அல்லது பிச்சைக்காரர்களுக்கு மாதுளையை தானம் செய்யுங்கள்

மே 21-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: மோகன் லால், ஆதித்யா சோப்ரா, முகேஷ் திவாரி, சுஜோய் கோஷ், ஆதித்யா கோவித்ரிகர்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி