Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று அலுவலகத்தில் பாராட்டு பெறுவீர்கள்... (மே 19, 2022)

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று அலுவலகத்தில் பாராட்டு பெறுவீர்கள்... (மே 19, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | மே 19ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் ஆற்றல் அறிவு, மேலாண்மை திறன் வெளிப்படும் நாள். தேர்வு அல்லது நேர்காணலுக்கு செல்பவர்களுக்கு முடிவுகள் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் இலக்கை அடைவார்கள் மற்றும் சீனியர்களிடம் பாராட்டு பெறுவார்கள். சக ஊழியர்களின் பொறாமையை எதிர்கொள்ள நேரிடும். பிறரிடம் உங்கள் எதிர்கால திட்டங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இன்று நாளை உங்கள் தாயிடம் ஆசி பெற்று துவங்கினால் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு

அதிர்ஷ்ட எண் - 1

தானம் - சூரியகாந்தி விதைகளை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உறவுகளிடம் கோபத்தை காட்டாமல் கட்டுப்படுத்த வேண்டிய நாள். தகராறுகளுக்கு வழிவகுக்கும் தருணங்கள் மற்றும் நபர்களை தவிர்க்கவும். ஒப்பந்தம் மற்றும் பார்ட்னர்ஷிப் அமைக்க இன்று நல்ல நாள். வாழ்க்கை துணை மீது ஆதிக்கம் செலுத்தாதீர்கள். மருத்துவ பொருட்கள், வைரம், ரப்பர், விளையாட்டு பொருட்கள், திரவங்கள், புத்தகங்கள், எழுதுபொருட்கள் வணிகங்களில் இன்று வரவு அதிகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - பிச்சைக்காரர்கள் அல்லது கால்நடைகளுக்கு பால் கொடுக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எதிர்காலத்தை திட்டமிட மற்றும் செயல்படுத்த இன்றைய நாள் சிறந்தது. மேலும் சுற்றுப்புறத்திலிருந்து அறிவை பெறுவதற்கான நாள் இது. கடந்தகால கசப்பான சம்பவங்களை மறந்துவிட்டு, நாளை சிறப்பாக கொண்டு செல்ல அமைதியை கடைபிடியுங்கள். டீச்சிங், டான்ஸ், குக்கிங், ஆக்டிங் அல்லது ஆடிட்டிங் துறைகளில் இருப்பவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் நாள் இன்று.

அதிர்ஷ்ட நிறம் - பீச்

அதிர்ஷ்டமான நாள் - வியாழன்

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - பெண்களுக்கு மஞ்சள் நன்கொடையாக வழங்குங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இயந்திரங்கள், கட்டுமானம், ஆலோசனை, நடிப்பு அல்லது ஊடகங்களைக் கையாள்வதில் மற்றும் எழுத்துப்பூர்வ தகவல்தொடர்புகளில் கவனமாக இருக்க வேண்டிய நாள் இன்று. பசுமையான சூழலில் சிறிது நேரம் செலவிட்டு மன அமைதி அடையும் நாள். உங்களது இன்றைய பெரும்பாலான நேரத்தை ஆலோசனை மற்றும் மார்க்கெட்டிங்கில் செலவிடும்படி இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு பச்சை தானியங்கள் நன்கொடை கொடுங்கள்

#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் திட்டமிட்டபடி ஒருசில விஷயங்கள் நடக்காது. எனவே சோர்ந்துவிட வேண்டாம். உங்கள் துணிச்சலான அணுகுமுறை உங்கள் முடிவுகளை அதிக ஆபத்தில் ஆழ்த்த கூடும். முதலீட்டுத் திட்டங்கள் லாபகரமாக இருக்கும். சொத்து சம்பந்தமான முடிவுகள் இன்று நல்லபடியாக வரும்.பயணப் பிரியர்கள் லாங் டிரைவ்கள் செல்வது பற்றி யோசிக்கலாம். அலுவலகத்தில் சக நண்பர்களிடம் கோபத்தை காட்டி விடாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஆதரவற்றோருக்கு பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் வசீகரம் அதிகமாக மற்றும் பலருக்கு பிடித்ததாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கடவுளுக்கு நன்றி சொல்லி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய அழகான நாள். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவை பெறுவீர்கள். நடிகர்கள், மருத்துவர்கள் பயிற்சி, ஏற்றுமதி இறக்குமதி, துணி, ரியல் எஸ்டேட் மற்றும் ஆடம்பர பொருட்கள் தொடர்பான வணிகங்களில் ஈடுபட்டுள்ளோர் இன்று அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள். வாகனங்கள், வீடு, இயந்திரங்கள் அல்லது நகைகள் வாங்க சிறந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - வெள்ளை நாணயத்தை நன்கொடையாக கொடுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் வாழ்வில் புதிய நபர் அல்லது புதிய வாய்ப்புகள் உள்ளே நுழையும் நாள். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் வியாபாரத்தில் பொறுப்புகளை குறைக்கும். எதிர் பாலினத்தவரின் ஆலோசனைகளை ஏற்க முயற்சி செய்யுங்கள், ஏனெனில் அவை உங்களுக்கு பயனளிக்கும். திருமண யோசனைகள் நிறைவேற கூடும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவிலில் செம்பு அல்லது வெண்கல நாணயத்தை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சேல்ஸ் அல்லது பங்குச் சந்தை, மருத்துவம், அரசியல் மற்றும் பெட்டிங் போன்றவற்றில் உள்ளவர்களுக்கு இன்று கடினமான நாள். பகுத்தறிவு சிந்தனையும், உங்கள் மென்மையான பேச்சும்தான் இன்று வெற்றியை தேடி தரும். வெளிநாட்டிற்கு சென்று படிக்க முயற்சிக்கும் மாணவர்களின் கனவுகளை நிறைவேற்ற அவர்கள் இன்று அதிக கட்டணம் கட்டுவது போன்ற சில விஷயங்களை செய்ய வேண்டியிருக்கும். நாள் முழுவதும் திட்டங்களை செயல்படுத்துவதில் பிஸியாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - சனி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - காலில் செருப்பு இல்லாமல் நடப்பவர்களுக்கு செருப்புகளை வாங்கி கொடுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதலில் உள்ளவர்கள் இன்று முன்னோக்கிச் சென்று தங்கள் துணையை முன்மொழிய வேண்டும். விளையாட்டு வீரரின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமைப்படும் அளவிற்கு இன்று சில நிகழ்வுகள் நடக்கும். வணிக உறவுகள், ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் ஆவணங்கள், நிகழ்வுகளை நடத்துதல் அல்லது அறுவை சிகிச்சை மற்றும் ஒப்பந்தங்கள் இன்று தாமதமாக கூடிய வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக நீடித்து வரும் சச்சரவுகளை பேசி முடிக்க வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - கோவிலில் ஆரஞ்சு கலர் துணியை தானம் செய்யுங்கள்

மே 20 அன்று பிறந்த பிரபலங்கள்: என்.டி.ராமராவ், அஞ்சும் சோப்ரா, விஜய் மவுரியா, அனந்த் குமார் ஹெக்டே, மஞ்சு மனோஜ்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி