Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (9 செப்டம்பர் 2022) ஏழைகளுக்கு உப்பு வழங்கவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (9 செப்டம்பர் 2022) ஏழைகளுக்கு உப்பு வழங்கவும்.!

Numerology

Numerology

Numerology | செப்டம்பர் 9-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு ஹீரோவைப் போல அனைத்திலும் வெற்றி காணும் வாய்ப்பு இருக்கிறது. போட்டிகளில் ஒரு போராளியைப் போல வெற்றி பெறுவீர்கள். புத்தாக்க சிந்தனை மிகுந்த உங்களின் பேச்சாற்றல் பிறரின் கவனத்தை ஈர்க்கும். அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், இசையமைப்பாளர்கள் போன்றோருக்கு பெரும் புகழ் காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - பீச்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 1 மற்றும் 9
தானம் - ஏழைகளுக்கு சிவப்பு நிற பழங்களை தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு உறவுகள் பலப்படும். காதல் உணர்வுகள் உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கும். ஆக வெளியிடங்களுக்கு சென்று இன்றைய தினம் மகிழ்ச்சியாக இருக்கலாம். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது ஆழ்மனம் சொல்வதை கேளுங்கள். காதல் உறவுகளில் அன்யோன்யம் மேலோங்க இருக்கிறது. இருப்பினும் கண்மூடித்தனமாக நம்பிக்கை வைக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் - பிங்க்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2
தானம் - பிச்சைக்காரர்களுக்கு பால் வழங்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாள் சிறப்பானதாக அமைய துளசிச் செடியின் கீழ் தீப விளக்கு ஏற்றவும். முதலீடுகளை செய்து லாபம் பெறுவதற்கு சிறப்பான நாளாகும். பெயரும், புகழும் வந்து சேரும். அதே சமயம், குருவுக்கு நன்றி சொல்ல மறக்க வேண்டாம். அரசியல் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு உயர்வான நாளாகும். இன்று மஞ்சள் நிற சாதம் சாப்பிடவும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9
தானம் - கோவிலில் சந்தனம் வழங்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அதிகாலையில் ராகு மந்திரம் உச்சரிக்கவும். உங்கள் தனிப்பட்ட தொடர்புகளை பயன்படுத்தி வேலைகளை சுமூகமாக முடிக்கவும். வணிகம் சார்ந்த ஒப்பந்தங்கள் தாமதமின்றி கிடைக்கும். நிதி சார்ந்து எடுக்கப்படும் பெரிய முடிவுகள் மூலமாக லாபம் கிடைக்கும். பச்சை நிற கீரை மற்றும் சைவ உணவுகளை சாப்பிடவும்.

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - குழந்தைகளுக்கு துளசிச் செடி வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று விலங்குகளுக்கு உணவு அளிக்கவும். பசுமையான சூழலில் கொஞ்சம் பொழுது கழிப்பது மனதுக்கு புத்துணர்ச்சி தருவதாக அமையும். நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் போன்றவற்றில் பங்கேற்க சிறப்பு வாய்ந்த நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் வெள்ளை
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - ஏழைகளுக்கு உப்பு வழங்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இடது கையில் சில்வர் நிற மெட்டல் வாட்ச் அணிய வேண்டும். இன்றைக்கு உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும். வாழ்வில் இன்றைக்கு ஒரு முழுமையான திருப்தி கிடைக்கும். வாழ்க்கைத் துணை உடனான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு ஷாப்பிங் செல்வதற்கான நாளாகும். காதல் உறவுகளால் வீட்டில் மகிழ்ச்சி திரும்பும்.

அதிர்ஷ்ட நிறம் - வயலெட்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - ஆதரவற்ற குழந்தைகளுக்கு பால் வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து சிறப்பான ஆதரவு கிடைக்கும். வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், பொறியாளர்கள், தொழில் அதிபர்கள் போன்ற சாதுர்யம் மிகுந்த நபர்களுக்கு சமூகத்தில் பெரிய அந்தஸ்து கிடைக்கும். பணியிடத்தில் எதிர் பாலினத்தவர் முன்வைக்கும் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளவும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7 மற்றும் 9
தானம் - தெருவோர விலங்குகளுக்கு உணவளிக்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காலைப் பொழுதில் புல் தரையில் வெறும் காலுடன் நடந்து செல்லவும். இது உங்கள் மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். நிதி சார்ந்த பலன்கள் உயர்வாக இருக்கும். சொத்து சார்ந்த முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சட்ட வழக்குகளுக்கு தீர்வு காண பணம் தேவைப்படும். பார்ட்னர்களுடன் தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - தேவை உள்ளவர்களுக்கு உடை தானம் செய்யவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பிறருக்கு மரியாதை கொடுத்து, மரியாதை பெற கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பார்ட்னரிடம் இருந்து பெரிய அளவுக்கு பலன் கிடைக்கும். அதே அளவுக்கு திருப்பிச் செலுத்தவும். இன்று பெயரும், புகழும் நிலைத்து நிற்கும். பணியிடத்தில் நீங்கள் பிறருக்கு முன்னுதாரணமாக இருபீர்கள். காதல் உணர்வுகளை வெளிப்படுத்த சிறப்பான நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - பெண்களுக்கு சிவப்பு நிற வளையல்களை வழங்கவும்.

செப்டம்பர் 09 அன்று பிறந்த பிரபலங்கள் : பரம வீர சக்ரா, அக்‌ஷய் குமார், ரஞ்சிதா கௌதம் சிங்கானியா, கல்கி கிருஷ்ணமூர்த்தி,
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி