Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (6 ஆகஸ்ட் 2022) ஆதரவற்றோர் இல்லத்தில் பால் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (6 ஆகஸ்ட் 2022) ஆதரவற்றோர் இல்லத்தில் பால் தானம் செய்யுங்கள்.!

Numerology

Numerology

Numerology | ஆகஸ்ட் 6-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கோபத்தை இன்று நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும், பொறுமையைக் கடைப்பிடிக்க மறக்காதீர்கள். வீட்டிலிருந்து வேலை செய்யும் விருப்பம் இருப்பின் அதை செய்யுங்கள். சட்ட அல்லது உத்தியோகபூர்வ சிக்கல்களைத் தீர்க்க உங்களுக்கு உதவக்கூடிய உறவினரின் மூலம் ஒரு புதிய நபரை இன்று நீங்கள் சந்திப்பீர்கள். நடிகர்கள், நகை வியாபாரிகள், விஞ்ஞானிகள், வடிவமைப்பாளர்கள் மற்றும் வன்பொருள் வர்த்தகர்களுக்கு நல்ல நாள். தனிப்பட்ட வாழ்க்கையும் திருப்திகரமாக இருக்காது.

அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ மற்றும் ஆஃப் ஒயிட்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 2
தானம் - ஆசிரமங்களில் சூரியகாந்தி எண்ணெயை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அலுவலகத்தில் புதிய பொறுப்பேற்க, நிச்சயதார்த்தம் செய்ய, புதிய தொழில் தொடங்க, அழகுபடுத்தி கொள்ள பணம் செலவழிக்க இன்று நல்ல நாள். உங்கள் உணர்வுகளை யதார்த்தமாக மாற்றும் ஒரு காதல் நாளாக இன்று இருக்கும். அரசியல்வாதிகள் போட்டியாளர்களிடம் கவனமாக இருக்கவும், பயணங்களைத் தவிர்க்கவும். உங்களால் முடிந்தவரை பிறரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6
தானம் - ஏழைகளுக்கு இனிப்புகள் மற்றும் தயிர் தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஈர்ப்புக்காக உங்கள் உணவில் இன்று மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். அனைத்து துறையைச் சேர்ந்த கலைஞருக்கும் இன்று சிறந்த நாள். அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும், ஆனால் உறவுகளில் சின்சியராக இருக்க நினைவில் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், இசைக்கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், மாணவர்கள், செய்தி தொகுப்பாளர், நடிகர்கள், உணவக உரிமையாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அடுத்த கட்ட வளர்ச்சியை காணலாம்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் பீச்
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1
தானம் - தேவைப்படுபவர்களுக்கு பச்சை மஞ்சளை தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் மற்றும் தரகர்கள் போன்றவற்றில் உள்ளோர் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். சமுதாயத்திற்காக உழைக்க வேண்டும், தொண்டு செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். நீங்கள் அறிவு மற்றும் கருணையின் பெருங்கடல், இந்த குணமே உங்களை தனித்துவமாக்குகிறது.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - ஏழைகளுக்கு உணவு மற்றும் உடைகளை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இன்று முழுமையை அடையும் நாள். உங்கள் பார்ட்னரின் உணர்ச்சிகளை நீங்கள் மதிக்க வேண்டும். சொத்து அல்லது பங்கு முதலீடுகள் செய்ய இன்று சிறந்த நாள். விளையாட்டு வீரர்கள், திரைப்பட இயக்குநர்கள், நகைக்கடைக்காரர்கள், ஏற்றுமதியாளர்கள், சில்லறை வணிகர்களுக்கு சிறந்த பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - ஆதரவற்றோர் இல்லத்தில் பால் தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் வேலையில் நீங்கள் ஆதிக்கம் செலுத்துவீர்கள். வாய்ப்புகள், ஆடம்பரம், செழிப்பு, மரியாதை மற்றும் அதிகாரத்தை அனுபவிக்கும் நாள். நீங்கள் இன்று வலிய சென்று அதிக பொறுப்புகளை எடுக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் நீங்கள் அனைத்தையும் மகிழ்ச்சியாக செய்ய முடியாது. நீங்கள் இன்று உணர்ச்சிவசப்பட நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - ஏழைப் பெண்ணுக்கு வளையல்களை தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பண விஷயங்களில் இன்று நீங்கள் சுறுசுறுப்பாக அதே சமயம் கவனமாக இருக்க வேண்டிய நாள். பணியிடத்தில் மேலதிகாரி அல்லது சீனியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். அரசு டெண்டர்கள், ரியல் எஸ்டேட், பள்ளிகள், உள்துறை உள்ளிட்டவற்றில் பணிபுரிபவர்களுக்கும் இன்று ஒரு சிறந்த நாள். நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் இருக்கும் வரை வணிக உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - கோவிலில் காப்பர் காயின்களை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் நீங்கள் உங்கள் பொறுப்புகளை பகிர்ந்தளிப்பதற்கான நாள் இன்று. வணிகத்தில் பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சியை தரும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - கால்நடைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுக்கு சாதனைகள் நிறைந்த நாள், குறிப்பாக மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் இன்று புதிய வெற்றியை காண்பார்கள். பழைய நண்பர்களையோ அல்லது சக நண்பர்களையோ அணுகி உதவி கேட்டால் சிறந்த பதில்கள் உங்களுக்காக காத்திருக்கிறது. உலோகத்தை கையாளும் வேலையில் இருப்பவர்கள் தேடி வரும் புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6
தானம் - கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்

ஆகஸ்ட் 6ம் தேதி பிறந்த பிரபலங்கள்: தீபிகா கக்கர், ஆதித்ய நாராயண், அபிஷேக் கபூர், தன்யா பாலகிருஷ்ணா, சைரஸ் சாஹுகர், ராஜேந்திர சிங், ஜி பரமேஸ்வரா
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி