Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (6 செப்டம்பர் 2022) ஏழைகளுக்கு வெள்ளை அரிசியை வழங்குங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (6 செப்டம்பர் 2022) ஏழைகளுக்கு வெள்ளை அரிசியை வழங்குங்கள்.!

Numerology

Numerology

Numerology | செப்டம்பர் 6-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் பையில் எப்போதும் பச்சை மஞ்சளை வைத்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு நல்ல அதிர்ஷ்ட்டத்தை கொடுக்கும். நீங்கள் இன்று ஒரு பழைய நண்பரை சந்திப்பீர்கள், அவர் தனது வலுவான குடும்ப இணைப்புகள் மூலம் சட்டம் அல்லது உத்தியோகபூர்வ சிக்கல்களைத் தீர்க்க உங்களுக்கு உதவ முடியும். நடிகர்கள் நல்ல வாய்ப்புகளை பெற கூடிய நாள் இன்று. அதிக அளவில் தோல் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்களின் மனநிம்மதியை கவனம் செலுத்துவது பல வகையில் உங்களுக்கு நன்மை தரும்.

அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் பீச்
அதிர்ஷ்டமான நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்: 9
தானம்: ஆசிரமங்களுக்கு மஞ்சள் அரிசியை தானம் செய்யுங்கள்

#எண் 2: (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காலை நேரத்தில் நல்ல குளியலை எடுத்துக் கொள்ளுங்கள், இது உங்கள் நாளைப் புத்துயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். உங்கள் உணர்வுகளை யதார்த்தமாக மாற்ற கூடிய காதல் நிறைந்த நாள். வியாபாரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் சுமுகமாக நிறைவேறும். பெரிய நிறுவனத்துடன் கூட்டு சேரும் நேரம் வந்துவிட்டது. எனவே தைரியமாக முன்னேறி செல்லுங்கள். வாழ்க்கை உங்களுக்கான பாதைகளை தானாகவே வகுத்து கொடுக்கும். இன்று எந்த ஒரு திடீர் முடிவையும் எடுக்காதீர்கள். அரசியல்வாதிகள் இன்று ஆவணங்களில் கையெழுத்திடும் போதும் அல்லது கூட்டணி அமைக்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும்

அதிர்ஷ்டமான நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் திங்கள்
அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 6
நன்கொடைகள்: ஏழைகளுக்கு வெள்ளை அரிசியை வழங்குங்கள்

#எண் 3: ( நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

இன்று வாழை மரத்திற்கு சர்க்கரை நீர் வழங்கவும். கலைப் பின்னணியில் இருப்பவர்கள் பெரிய அதிர்ஷ்டத்தைப் பெறுவதற்கான நாள் இன்று. உங்களுக்கான புதிய வாய்ப்புகளை இன்று தேர்ந்தெடுக்க வேண்டும். பணியிடத்தில் ஒரு புதிய தொடக்கம் உங்களை வரவேற்கும். உங்கள் வழியில் ஒரு புதிய உறவும் வந்து சேரும். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும், ஆனால் நீங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்களின் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வடிவமைப்பாளர்கள், இல்லத்தரசிகள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள், நடனக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், கலைஞர்கள், இல்லத்தரசிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தொழில் வளர்ச்சிக்கான சிறப்பு அறிவிப்புகளை பெறலாம்.

அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் வியாழன்
அதிர்ஷ்ட எண் 3 மற்றும் 1
தானம்: தேவைப்படுபவர்களுக்கு பச்சை மஞ்சளை தானம் செய்யுங்கள்

#எண் 4: (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

விலங்குகளுக்கு உணவை வழங்குவதன் மூலம் உங்கள் நாளைத் தொடங்குங்கள். தற்போதைய திட்டங்கள் நல்லபடியாக செயல்படும். பச்சை தானியங்களை தானம் செய்வது பல்வேறு பலன்களை தரும். கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் போன்ற வணிகங்கள் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். சிறந்த காதல் வாழ்க்கை மற்றும் பெருமைமிக்க பெற்றோர் என்ற அழகான அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். இன்று மொத்தமாக முதலீடு செய்வதை தவிர்க்கவும். எதையும் யோசித்து செய்வது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது.

அதிர்ஷ்டமான நிறம்: நீலம்
அதிர்ஷ்டமான நாள் செவ்வாய்
அதிர்ஷ்ட எண் 9
தானம்: வீட்டு வேலை செய்பவர்களுக்கு பணம் கொடுத்து உதவுங்கள்

#எண் 5: (நீங்கள் 5, 14 , 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று விநாயகப் பெருமானின் மந்திரத்தை உச்சரித்து வழிபடவும். உங்கள் செயல்திறனுக்கான வெகுமதிகளையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்கான நாள் இன்று. பண பலன்கள் விரைவில் வந்து சேரும் என்பதால் பங்கு முதலீடுகளை சரியாக கையாளுங்கள். இன்று விளையாட்டு வீரர் மற்றும் பயணிகளுக்கு சிறந்த பலன் கிடைக்கும். கூட்டங்களில் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க பச்சை நிற உடையை அணியுங்கள். இன்று வாழ்க்கை உங்களுக்கு விருப்பமான பரிசுகளை வழங்குவதால் உங்கள் காதலை முன்மொழிய செல்ல வேண்டும்.

அதிர்ஷ்டமான நிறம்: கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் புதன்
அதிர்ஷ்ட எண் 5
தானம்: அனாதை இல்லத்தில் சர்க்கரையை தானம் செய்யுங்கள்

#எண் 6: (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

இன்று நிறைய வெற்றிகளை நீங்கள் அடையலாம். இன்று காதல் மற்றும் வாக்குறுதிகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் மனதை தெளிவாக வைத்து கொண்டு முடிவுகளை எடுங்கள். உங்களைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு அமைதியைத் தர முடியாது. எனவே மன நிம்மதியை கையாள கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அதிக பொறுப்புகளை எடுத்து கொள்ள வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் அனைத்தையும் மகிழ்ச்சியாக செய்ய முடியாது. நடிகர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக மாறும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு வழிகாட்ட தந்தைகள் சில முயற்சிகளை எடுத்தாக வேண்டும்.

அதிர்ஷ்டமான நிறம்: நீலம்
அதிர்ஷ்டமான நாள் வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் 6
நன்கொடைகள்: ஏழைகளுக்கு தயிரை தானம் செய்யுங்கள்

#எண் 7: (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று எல்லா விஷயங்களிலும் உங்கள் துணை உங்களுக்கு உதவுவார்கள். இன்றைய அனைத்து சாதனைகளுக்கும் உங்கள் பெற்றோரின் ஆசி இருக்கும். சட்ட வழக்குகளில் விளையாட உங்கள் ஞானமும் பகுப்பாய்வும் முக்கியம். உங்களின் காதல் உறவு மலர்ந்து திருமணத்தை நோக்கி செல்லும். இன்று குரு மந்திரத்தை சொல்லி கொள்ளுங்கள். நல்லதே நடக்கும். அரசியல்வாதிகளின் மென்மையான பேச்சு அவர்களின் உயரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும். இந்த நாள் இலக்கற்றதாகத் தெரிகிறது. பணியிடத்தில் மேலதிகாரியுடன் பேசுவதைத் தவிர்க்கவும். குழப்பத்தால் உறவுகள் சிக்கலில் முடியலாம். அரசு டெண்டர்கள், ரியல் எஸ்டேட், பள்ளிகள், உள்துறை, தானியங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு இது ஒரு சிறந்த நாளாக அமையும்.

அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் திங்கள்
அதிர்ஷ்ட எண் 7
தானம்: மஞ்சள் துணியை தானம் செய்யுங்கள்

#எண் 8: ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வணிகத்தில் பரிவர்த்தனைகள் தாமதமாகும், ஆனால் நாளின் இறுதியில் வெற்றிகரமாக இருக்கும். ஒப்பந்தங்கள் அல்லது நேர்காணல்களில் கலந்து கொள்ள வேண்டும். பணம் வரும் போகும், ஆனால் கடின உழைப்பை என்றும் மறவாதீர்கள். மேலும் உங்களின் உழைப்பை நல்ல விஷயங்களுக்கு செயல்படுத்துங்கள். உயர் மட்ட அறிவைப் பெறுவதற்கு நீங்கள் அதிக நேரத்தை செலவிட வேண்டும். சேவைகளை வழங்கும்போது மருத்துவர்கள் பாராட்டுகளைப் பெறுவார்கள். இன்று உங்களுக்கான பண பலன்களை மாலைக்குள் பெறுவீர்கள். செடிகளுடன் நேரத்தை செலவிடுவது இன்று அவசியம். தயவு செய்து இன்று பயணத்தை தவிர்க்கவும். காதல் உறவுகளில் காதலை அதிகரிக்க இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

முதன்மை நிறம்: கடல் நீலம்
அதிர்ஷ்டமான நாள் வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் 6
தானம்: கால்நடைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

#எண் 9: (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் சமூக வட்டம் மற்றும் குடும்ப வட்டம் இரண்டும் இன்று உங்களுக்கு ஆதரவாக இருக்கும். படைப்புக் கலையில் சாதனைகள் மற்றும் மதிப்பீடுகள் கிடைக்க கூடிய நாள். உங்களின் மன ஆரோக்கியத்தில் அதிக கவனத்தை செலுத்துங்கள். இல்லையேல் பல சிக்கல்கள் உருவாகலாம். வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்க இன்று முயற்சிகளை தொடங்குங்கள். நடிகர்கள் அதிக வெற்றி பெற பல வாய்ப்புகளை தேடி செல்லுங்கள். இன்று நாளைத் தொடங்க சிவப்பு நிற ஆடையை அணிய வேண்டும்.

முதன்மை நிறம்: சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் செவ்வாய்
அதிர்ஷ்ட எண் 9 மற்றும் 6
தானம்: பெண்களுக்கு ஆரஞ்சு நிற துணியை தானம் செய்யுங்கள்

செப்டம்பர் 6ம் தேதி பிறந்த பிரபலங்கள்: யாத் ஜோஹர், ராகேஷ் ரோஷன், துலீப் சிங், நவீன் ஜெயின், யஷ்வந்த் சின்ஹா
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி