Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (24 ஆகஸ்ட் 2022) கால்நடைகளுக்கு குடிநீர் வையுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (24 ஆகஸ்ட் 2022) கால்நடைகளுக்கு குடிநீர் வையுங்கள்.!

Numerology

Numerology

Numerology | ஆகஸ்ட் 24-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஆக்கப்பூர்வமான பெண்களுக்கு இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். புதிய வாய்ப்புகளுக்கு ஏற்ப உங்கள் எண்ணங்களை மாற்றி கொள்ள நீங்கள் ரெடியாக இருந்தால் தான் எதிர்காலத்தில் வளர முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இன்று பார்ட்னர்ஷிப்களை தவிர்க்கவும். டிசைனர்கள், ஸ்போர்ட்ஸ்மேன் நடிகர்கள், கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் புதிய திட்டங்களை ஏற்கும் முன் நன்கு யோசிக்க வேண்டும். தோல் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு
அதிர்ஷ்ட எண் - 3
தானம் - கோவிலில் சூரியகாந்தி விதைகளை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இது சொத்து மற்றும் ஆடம்பரம் நிறைந்த ஆதரவான நாள். இன்று உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வரலாம், அவர்களை வரவேற்க தயாராக இருங்கள். இன்று வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு முன்னுரிமை கொடுங்கள். காதல் உணர்வுகளை நிரந்தர உறவாக மாற்ற இன்று நல்ல நாள். இன்று பயணத்தைத் தவிர்க்கவும். அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், சில்லறை விற்பனையாளர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6
தானம் - கோவிலில் தயிர் தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் ஆளுமை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், வசீகரமாகவும் இருக்கும், இன்று நீங்கள் அதிர்ஷ்டசாலியாக உணர்வீர்கள். யோகா பயிற்சியாளர்கள், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனையாளர்கள், இசைக்கலைஞர்கள், செய்தி அறிவிப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள் இன்று தங்களது தொழிலில் சிறப்பான லாபம் பெறுவார்கள். உங்கள் படைப்பாற்றல், கல்வி அறிவு, தோற்றம் உங்கள் மீது பிறருக்கு ஈர்ப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1
தானம் - கோவிலில் மஞ்சள் அரிசியை தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். அரசு அல்லது பெரிய பிராண்டுகளுடன் பணிபுரியும் வாய்ப்புகள் ஏற்படும். புதிய ஆதாரங்கள் அல்லது புதிய யோசனை மூலம் இன்று பணம் சம்பாதிப்பீர்கள். உங்களிடம் இருக்கும் சிறந்த பண மேலாண்மையால், உங்கள் வாழ்க்கையில் குறைந்த இழப்பு அபாயத்தை மட்டுமே எதிர்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் கிரே
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - கோவிலில் தேங்காய் தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று புகழ் மற்றும் தொழில் வளர்ச்சி உங்களது நாளை இனிமையாக்கும். குழப்பத்தை தவிர்த்து சொத்து முதலீட்டில் தீர்க்கமாக முக்கிய முடிவுகளை எடுங்கள். சிறந்த வாய்ப்புகளை பெறுவதற்கு விளையாட்டு வீரர்கள் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். இன்று சோம்பலை தவிர்க்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் வெள்ளை
அதிர்ஷ்டமான நாள் - புதன்
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - கோயிலிலோ அல்லது நண்பருக்கோ துளசி செடியை தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று அனைவரிடமிருந்தும் அக்கறை மற்றும் பாராட்டுகளை பெறுவதன் மூலம் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்வீர்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்திறனை கண்டு பெருமைப்படுவார்கள். விளையாட்டு வீரர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், நடிகர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம் மற்றும் மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - ஆசிரமங்களுக்கு ஸ்டீல் பாத்திரங்களை நன்கொடையாக கொடுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மற்றவர்களின் உணர்வுகளை இன்று புரிந்து கொள்ள முயற்சியுங்கள், மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு கொள்வது இன்று அவசியம். பேச்சில் நீங்கள் மென்மையை கடைபிடிக்கும் வரை வியாபார உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும். தம்பதிகளிடையே நம்பிக்கை மற்றும் மரியாதை அதிகரித்து உறவு இன்னும் வலுவாகும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - ஆசிரமங்களுக்கு புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களை நன்கொடையாக வழங்குங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று புதிய வாய்ப்புகள் மற்றும் புதிய உறவுகளில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று குடும்ப நிகழ்வுகள் அல்லது நண்பர்கள் விருந்தில் கலந்து கொள்ள நேரம் செலவிடும் வாய்ப்பு உள்ளது. அசைவம் மற்றும் மது பானங்களை இன்று தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - கால்நடைகளுக்கு குடிநீர் வையுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

செவ்வாய் கிரகத்தின் பார்வையைபெற உங்கள் வீட்டு உதவியாளருக்கு இன்று உங்கள் வீட்டிலேயே உணவளிக்கவும். உங்களை தொந்தரவு செய்து வந்த பல பிரச்சனைகள் இன்றோடு முடிவுக்கு வரும் என்பதால் நீங்கள் நிதானமாக இருக்க வேண்டும். உங்கள் திருமணத் திட்டத்தை குடும்பத்தினரிடம் வெளிப்படுத்த இன்று ஏற்ற நாள். அதே போல இன்று செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6
தானம் - ஏழைகளுக்கு தர்பூசணி பழங்களை தானம் செய்யுங்கள்

ஆகஸ்ட் 24-ல் பிறந்த பிரபலங்கள்: வராம் ராஜு, பினா தாஸ், பூனம் யாதவ், கேஜே ஜார்ஜ், பி. ஜி. கெர்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி