Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (13 செப்டம்பர் 2022) ஏழைகளுக்கு இனிப்புகளை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (13 செப்டம்பர் 2022) ஏழைகளுக்கு இனிப்புகளை தானம் செய்யுங்கள்.!

Numerology

Numerology

Numerology | செப்டம்பர் 13-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எதிர்கால வளர்ச்சிக்கு அலுவலகம் மற்றும் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களின் ஆலோசனையை நீங்கள் இன்று பெற வேண்டும். வணிக பரிவர்த்தனைகளில் இருந்து பண பலன்களைப் பெற இன்று கடினமான நாள். சொத்துக்களை வாங்க திட்டமிட்டல் அதில் தாமதம் ஏற்படும். விவசாயம், டீலர்ஷிப்கள், கட்டுமானம், உள்கட்டமைப்பு, புத்தகங்கள், மருந்து உள்ளிட்ட வணிகங்கள் இன்று சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் டீல்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு
அதிர்ஷ்ட எண் -3
தானம் - கோவிலில் மஞ்சள் கடுகு விதைகளை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் யோசனைகளை நிறுவன உயரதிகாரிகளிடம் பகிர வேண்டாம். உங்கள் மனதை புண்படுத்த கூடிய நபரை இன்று சந்திக்க கூடும். கவனம் தேவை. ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் உள்ளவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் புதிய உயரங்களை இன்று காண்பார்கள். உங்கள் மீது சுமையாக ஏறி இருக்கும் பண பொறுப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட நிறம் - நீல வானம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - ஏழைகளுக்கு இனிப்புகளை தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பெற்றோர் அல்லது பெரியவர்களிடம் நீங்கள் இன்று பெரும் வாழ்த்தும், ஆசீர்வாதமும் இன்று அதிக வெற்றி மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் குறிப்பாக மாணவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு. இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அரசு உத்தியோகஸ்த்தர்கள் இன்று நல்ல அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1
தானம் - பசியோடு உள்ளவர்களுக்கு வாழைப்பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உறவுகளில் இன்று கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் இன்று ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம். பணவரவு அதிகமாக இருந்தாலும் புதிய முதலீடுகளை இன்று திட்டமிடாதீர்கள். அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளவர்கள் இன்று பயணம் செய்ய சாதகமற்ற நாள். கட்டுமானம் அல்லது பங்கு சந்தை வணிகம் இன்று மெதுவான இயக்கத்தை எதிர்கொள்ளும் அதே நேரம் மருத்துவம் மற்றும் விவசாயம் வளர்ச்சியை எதிர் கொள்ளும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் கிரே
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - ஆதரவற்றோருக்கு போர்வை தானம் செயுங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கடந்த காலத்தை நினைத்து நீங்கள் விரக்தியடைந்தால் இன்று அவற்றை மறந்துவிட்டு உற்சகமாக இருக்கலாம். மார்க்கெட்டிங் மற்றும் ஸ்போர்ட்ஸ் துறையில் இருப்பவர்களுக்கு இன்று சிறப்பான நாள். கடந்தகால உழைப்பின் பலனை இன்று அறுவடை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - ஆசிரமங்களில் பால் தானம் செய்ய வேண்டும்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று குறிப்பாக நீங்கள் தனிப்பட்ட விஷயங்கள் தொடர்பான விவாதங்களை தவிர்க்கவும். ஆடம்பர செலவுகள், வீடு மற்றும் பங்குகளை வாங்க, பயணம் செய்ய, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, ஆடிஷன்களில் பங்கேற்க, ஊடகங்களை எதிர்கொள்ள நல்ல நாள். குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - ஏழைகளுக்கு இனிப்புகளை தானம் செய்யவும்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று சிலர் உங்களை ஏமாற்ற நினைக்கலாம். நீங்கள் உஷாராக இருந்தால் அவர்கள் முயற்சி பலிக்காது. எதிர் பாலினத்தவர் மூலம் இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். வார்த்தைகளில் கடுமை மற்றும் கோபம் காட்டாமல் மென்மை மற்றும் கனிவு காட்டுவது வெற்றியை தேடி தரும். அரசியல்வாதிகள் தங்கள் கட்சி சீனியர்கள் மனதில் இடம் பிடிக்க அழகான நாள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - கோவிலில் ஆரஞ்சு பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குடும்ப வாழ்க்கையில் நல்லிணக்கத்தை பேண இன்று முன்னுரிமை கொடுங்கள். இன்று முழுவதும் நீங்கள் காட்டும் பொறுமை நாளின் முடிவில் உங்களுக்கு வெகுமதியை அளிக்கும். மருத்துவர்கள், அரசியல்வாதிகள் பாராட்டுகளைப் பெறுவார்கள். மாலைக்குள் பண பலன்களை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - பிச்சைக்காரருக்கு சிட்ரஸ் பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். இன்று பணியிடங்களில் வழக்கத்தை விட சற்று நெகிழ்வாக இருங்கள். அரசு உத்தரவுகளை அணுக ஒரு அழகான நாள். நடிகர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் பெரும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க கூடும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9
தானம் - குழந்தைகளுக்கு சிவப்பு பேனா தானம் செய்யுங்கள்

செப்டம்பர் 13-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: கார்த்திக், மஹிமா சவுத்ரி, குருசரண் கவுர், மஹந்த் சுவாமி மகராஜ், ராஜீவ் சுக்லா
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி