Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் நிதி சார்ந்த விஷயங்களை யாரிடமும் பகீராதீர்கள்... (ஏப்ரல் 25, 2022)

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் நிதி சார்ந்த விஷயங்களை யாரிடமும் பகீராதீர்கள்... (ஏப்ரல் 25, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | இன்று உங்கள் விருப்பப்படி எல்லாம் அண்டைக்கும், பண வரவு இருக்கும். நடிப்பு, ஊடகம், ஆங்கரிங், விளையாட்டு, கட்டுமானம், மருத்துவம், அரசியல் உள்ளிட்ட துறையைச் சேர்ந்தவர்கள் புதிய உயரங்களைக் காண்பார்கள்...

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் எடுத்த முடிவு சரியானதா என்பதை தெரிந்து கொள்ள தியானம் சிறந்த வழியாகும். சட்டப்பூர்வ அல்லது உத்தியோகபூர்வ சிக்கல்களைத் தீர்க்க உங்களுக்கு உதவக்கூடிய ஒரு தொடர்பை நீங்கள் சந்திப்பீர்கள். ஆசிரியர்கள், மருத்துவர்கள், உலோக உற்பத்தியாளர்கள், நிதியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு சிறந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம்: டீல்

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

அதிர்ஷ்ட எண்: 3

நன்கொடைகள்: கால்நடைகளுக்கு சூரியகாந்தி விதிகளை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குடும்பப் பழைய பிரச்னைகளில் இருந்து உங்களை விலக்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளுணர்வு உங்களுக்கு சிறந்த முறையில் துணைபுரியும். உங்கள் இதயம் சொல்வதை மட்டும் கேளுங்கள். இன்று உணர்ச்சிகள் நிறைந்த ஒரு காதல் நாளாக இருக்கும். ஆனால் பிடிவாதத்தைக் குறைத்து உண்மையான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் சுமுகமாக நிறைவேறும். பெரிய நிறுவனத்துடன் கூட்டு சேரும் நேரம் இது. அரசியல்வாதிகள், ஊடகங்கள், விவசாயிகள், வங்கியாளர்கள். மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 2

தானம்: ஏழைகளுக்கு வெள்ளை அரிசியை தானம் வழங்குங்கள்

#எண் 3(நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆசீர்வாதம் இன்று உங்கள் அதிர்ஷ்டத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும். நண்பர்களுடன் நிதி விஷயங்களைப் பகிர வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இசையமைப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள், மாணவர்கள், செய்தி தொகுப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், இல்லத்தரசிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தொழில் வளர்ச்சிக்கு சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

நன்கொடைகள்: பிரவுன் அரிசியை பெண்களுக்கு தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் தீவிர அதிர்ஷ்டம் அல்லது கஷ்டத்தை அனுபவிக்கும் நாளாக இருக்கும். உங்களின் தற்போதைய திட்டங்களை மதிப்பாய்வு செய்ய வேண்டும். நீங்கள் அனைத்து பணிகளையும் சரியாக முடிப்பீர்கள், ஆனால் வருமானம் வர காத்திருக்க வேண்டும். கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் மற்றும் தரகர்கள் போன்ற வணிகங்கள் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: பிச்சைகாரர்களுக்கு தானியங்கள் மற்றும் போர்வையை வழங்குங்கள்

#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இலக்குகளை நிர்ணயித்து அதை அடையும் அளவுக்கு நீங்கள் புத்திசாலியாக இருக்கிறீர்கள். விளையாட்டு வீரர், செய்தி அறிவிப்பாளர்கள், நகைக்கடைக்காரர்கள், மாணவர்கள் மற்றும் பயணிகள் ஆகியோருக்கு அதிர்ஷ்டமான நாள். அதிர்ஷ்டத்தை அதிகரிக்க பச்சை நிற ஆடையை அணியுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்ட நாள்: புதன்கிழமை

அதிர்ஷ்ட எண்: 5

நன்கொடைகள்: கால்நடைகளுக்கு தண்ணீர் வழங்கவும்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களின் நேர்மை தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். சுறுசுறுப்பாக செயல்பட்டு பல பணிகளை ஒரே நேரத்தல் முடிப்பீர்கள். உங்கள் தோளில் அதிகமான வீட்டுப் பொறுப்புகளை சும்மா வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஹோட்டல் வியாபாரிகள், பயணிகள், நகைக்கடைக்காரர்கள், நடிகர்கள், ஜாக்கிகள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருக்கு அதிர்ஷ்டமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: வெள்ளி நாணயம் தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் சிந்தனைகளை உங்கள் துணையுடன் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். உங்களின் தலைமைத்துவமும் பகுப்பாய்வுத் திறனும் உங்களின் ஆளுமையின் சக்தி ஆகும். ஊழியர்களை நம்புவதைத் தவிர்க்கவும், அது தீங்கு விளைவிக்கலாம். ஹீலிங், கோர்ட்டுகள், ஸ்டேஷனரி தியேட்டர், டெக்னாலஜி, அரசு டெண்டர்கள், ரியல் எஸ்டேட், பள்ளிகள், உள்துறை மற்றும் தானியங்கள் சார்ந்த துறைகளில் பணிபுரிபவர்களுக்கு இன்று சிறந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்

அதிர்ஷ்ட நாள்: தங்கள்

அதிர்ஷ்ட எண்: 7

நன்கொடைகள்: மஞ்சள் துணியை கோவிலில் தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கடினமான எண்ணங்களை விட்டுவிட்டு, வாய்ப்பை ஏற்றுக்கொள்வது சிறந்தது. பணியாளர்களுடன் மென்மையாக பேசுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கான நேரம். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதும் அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: கால்நடைகளுக்கு பச்சை தானியங்களை வழங்குங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் விருப்பப்படி எல்லாம் அண்டைக்கும், பண வரவு இருக்கும். நடிப்பு, ஊடகம், ஆங்கரிங், விளையாட்டு, கட்டுமானம், மருத்துவம், அரசியல் உள்ளிட்ட துறையைச் சேர்ந்தவர்கள் புதிய உயரங்களைக் காண்பார்கள். கல்வி அல்லது படைப்புத் துறையில் இருப்பவர்கள் சிறந்து விளங்குவார்கள். நாளை நேர்மறையாகத் தொடங்க மாதுளை சாப்பிட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

நன்கொடைகள்: வசதியற்றவர்களுக்கு சிவப்பு தானியங்களை வழங்குங்கள்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி