Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (20 செப்டம்பர் 2022) விலங்குகளுக்கு உணவு வைக்கவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (20 செப்டம்பர் 2022) விலங்குகளுக்கு உணவு வைக்கவும்.!

Numerology

Numerology

Numerology | செப்டம்பர் 20-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் பணி செய்யும் நிறுவனத்தில் இலக்குகளை நிறைவேற்றி அனைத்து விதமான பாராட்டு மற்றும் புகழ் ஆகியவற்றை பெறுவீர்கள். மற்றவர்களுக்கு இது பொறாமையை ஏற்படுத்தும். அதைத் தவிர்க்க வேண்டும் என்றால் சந்திர பகவானுக்கு மாலையில் பால் படையல் வைக்கவும். தனி வாழ்க்கையில் மனம் புண்படுவதை தவிர்க்க ராஜீய ரீதியில் நடந்து கொள்ள வேண்டும். பணியிடத்தில் தலைமையேற்கும் வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை மற்றும் ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2
தானம் - ஏழைகளுக்கு சூரியகாந்தி எண்ணெய் தானமாக வழங்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாளில் பால் குளியல் மேற்கொள்ளவும். பார்ட்னர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும். இல்லை என்றால் பிரச்சினைகள் உருவாகக் கூடும். ஒப்பந்தங்கள் செய்து கொள்ள மிக சிறப்பான நாளாகும். பார்ட்னர்களை ஆதிக்கம் செய்ய நினைத்தால் எதிர்காலத்தில் இடைவெளி உண்டாகலாம். சந்திர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யவும். மருத்துவ உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள் விற்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை மற்றும் வான் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2
தானம் - கால்நடைகளுக்கு பால் வைக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வெற்றியும், புகழும் இணைந்து உங்களை தேடி வருகிறது. உங்கள் திறமை மற்றும் திறன்களை வெளிக்காட்ட தவறாதீர்கள். சுற்றியிருப்பவர்களிடம் இருந்து அறிவை உள்வாங்கவும், மீண்டும் திருப்பிச் செலுத்தவும் இன்று சிறப்பான நாளாகும். கடந்த கால கசப்புகளை மறந்துவிட்டு, மனம் விட்டு பேசினால் இன்றைய நாள் சிறப்பாக அமையும். உள்விளையாட்டுப் போட்டி வீரர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பீச்
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9
தானம் - கோவிலில் சந்தனம் வழங்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாளின் முதல் பொழுது சற்று மந்தமாக தோன்றும். ஆனால், மதிய வேளைக்குப் பிறகு அதிர்ஷ்டம் கை கூடி வரும். கவுன்சிலிங் மற்றும் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் பெரும்பாலான நேரத்தை செலவிடுவீர்கள். கட்டுமானம், மீடியா, சினிமா போன்ற துறைகளில் இருப்பவர்கள் எழுத்துப்பூர்வமான தகவல் தொடர்பில் கவனமுடன் இருக்க வேண்டும். தனிப்பட்ட உறவுகள் குழப்பங்கள் எதுவும் இன்றி சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - விலங்குகளுக்கு உணவு வைக்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணத்தை பெருக்கவும், காதல் உறவுகளை வளர்த்துக் கொள்ளவும் மிக சிறப்பான நாளாகும். உங்களின் தைரியம் மிகுந்த குணத்தால் நீங்கள் எடுக்கும் ரிஸ்க்களுக்கு வெற்றி கிடைக்கும். இன்று நேர்காணல்களுக்கு செல்லலாம். பயணம் செய்பவர்களுக்கு குதூகலமான நேரம் இது. சொத்து தொடர்பான முடிவுகள் கனக்கச்சிதமாக இருக்கும். சக பணியாளர்களிடம் மிகுந்த அமைதியுடன் நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - ஆதரவற்றவர்களுக்கு பச்சை காய்கறிகள் தானமாக கொடுக்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களிடம் இருக்கும் காந்தத்தன்மை மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதால் நேர்காணல்களில் வெற்றி நிச்சயம். புதிய வாய்ப்புகளை தேடுவதற்கு, பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு, காதலை வெளிப்படுத்துவதற்கு மிக சிறப்பான நாளாகும். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி போன்ற தொழில்களில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. வாகனங்கள், வீடு வாங்குவதற்கு சிறப்பான நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - ஏழைகளுக்கு தயிர் வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் வணிகத்தை நீங்களே சுயமாக ஆய்வு செய்து, அதில் உள்ள பாதகங்களை சரி செய்ய வேண்டிய நேரமிது. தோராயமாக எடுக்கப்படும் முடிவுகள் வணிகத்தில் உங்கள் கடன்களை குறைக்கும். எதிர்பாலினத்தவரின் ஆலோசனைகள் பலன் அளிக்கக் கூடும் என்பதை அதை ஏற்றுக் கொள்ள முயற்சி செய்யவும். திருமண ஏற்பாடுகள் நடக்க இருக்கின்றன. விநாயகர் கோவிலுக்கு சென்று சிறப்பு ஆராதணை செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - கோவிலில் காப்பர் நாணயம் தானமாக கொடுக்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

விற்பனை அல்லது பங்குச் சந்தை போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் மிக வேகமாக நகரும். தாராள சிந்தனை மற்றும் கனிவான பேச்சு ஆகியவைதான் இன்றைய நாளில் வெற்றி ஈட்டுவதற்கான மந்திரங்கள் ஆகும். பணம் மற்றும் தொடர்புகளைப் பயன்படுத்தி சட்ட ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். வணிகத்தை மேம்படுத்துவதற்கும், குடும்ப உறவுகளை பலப்படுத்துவதற்கும் தகவல் தொடர்பு சரியாக அமைய வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - தேவை உள்ளவர்களுக்கு காலணி வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வெற்றி வேண்டும் என்றால் பரஸ்பர நம்பிக்கை தேவை. காதலில் இருக்கும் நபர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தலாம். மேலும் காதலர்கள் தங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு பேசித் தீர்வு காண வேண்டும். விளையாட்டு வீரர்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகளை நினைத்து பெருமை கொள்ளும் தருணம் இது. ஆவணங்கள் கையெழுத்து, அறுவை சிகிச்சை போன்ற விஷயங்கள் தாமதம் அடையக் கூடும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - வீட்டுப் பணியாளருக்கு கர்சிஃப் வழங்கவும்.

செப்டம்பர் 20 அன்று பிறந்த பிரபலங்கள் : அகினேனி நாகஸ்வர ராவ், மகேஷ் பட், சௌந்தர்யா ரஜினிகாந்த், மார்க்கண்டேய கட்ஜு, பிராண்டன் பெர்ணாண்டஸ், அபிமன்யு சிங்,
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி