Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (28 ஜூன் 2022) கால்நடைகளுக்கு வாழைப்பழம் தானமாக கொடுக்கவும்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (28 ஜூன் 2022) கால்நடைகளுக்கு வாழைப்பழம் தானமாக கொடுக்கவும்..!

Numerology

Numerology

Numerology | ஜூன் 28 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று சூரிய பகவானை வழிபட்டு ஆசிர்வாதம் பெறுங்கள். உங்களுக்கு ஏற்படும் சிறு தடைகள் நீங்கும். தலைவர்கள் தங்கள் தகவல் தொடர்பு திறன்களை வெளிப்படுத்தி உலகை வெல்லலாம். இன்றைக்கு குடும்ப விழாக்களில் பங்கேற்க அல்லது நேர்காணலுக்கு செல்ல சிறப்பான நாளாகும். நண்பர்களுடன் பொழுது கொண்டாட்டமாக கழியும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 1
தானம் - ஏழைகளுக்கு மஞ்சள் நிற பழங்களை வழங்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் நிரந்தரமான உறவை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் அதற்கு இன்னும் சற்று காலம் பொருத்திருக்க வேண்டும். அலுவலகப் பணி மற்றும் தனி வாழ்க்கை இடையே சீரான நிலையை கடைப்பிடிக்கும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும். சிவனை வழிபட்டால் நல்லது. நீங்கள் வேளாண்மை, சூரிய மின்சக்தி போன்ற துறைகளில் இருந்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2
தானம் - பிச்சைக்காரர்களுக்கு தயிர் தானம் செய்யவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தலைவர், கேப்டன், பயிற்சியாளர், ஆசிரியர், நிதிநிறுவன அதிபர் போன்ற பணிகளில் இருப்பவர் என்றால் எதிர்காலத்தில் நீண்ட கால வெற்றியை பெற வேண்டும் என்றால் இப்போதே திட்டமிட வேண்டும். மாணவர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கும். உங்கள் பார்ட்னரை ஈர்க்க இன்று சரியான நாளாகும். உங்கள் திருமணத்திற்கான ஆசையை நீங்கள் வெளிப்படுத்தலாம்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1
தானம் - கோவிலில் சந்தனக் கட்டையை தானமாக கொடுக்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பண பரிவர்த்தனைகள் மற்றும் புதிய வாய்ப்பு ஆகிய இரண்டையுமே ஆடிட்டரை வைத்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும். நிதி சார்ந்த விஷயங்களில் மேலாண்மை செய்யலாம். இன்றைக்கு முதலீடு செய்யும் பணம் குறித்து ரகசியம் காக்க வேண்டும். தனிப்பட்ட உறவுகளில் சில திடீர் திருப்பங்கள் ஏற்படும். அது பிறரை காயப்படுத்தக் கூடும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - குழந்தைகளுக்கு பச்சை நிற திராட்சை வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களை வளமாக வைத்திருக்கும் தனி வாழ்க்கை மற்றும் அலுவலகப் பணிகள் இடையே சீரான நிலையை கடைப்பிடிப்பது எப்படி என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். அதே சமயம், உங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அதிக செலவினங்களை தவிர்த்து எதிர்காலத்திற்கு சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை கொடுக்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

லெட்சுமியை வழிபட்டீர்கள் என்றால் வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு ஆசிர்வாதங்கள் கிடைக்கும். குழந்தைகளுக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். அரசு டெண்டர்களை எடுப்பதற்கான அதிர்ஷ்டம் உங்களுக்கு இருக்கிறது. ஆடைகள், நகைகள், வாகனங்கள், மொபைல் மற்றும் வீடுகளை வாங்குவதற்கு சிறப்பான நாள் ஆகும்.

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - கோவிலில் சர்க்கரை தானம் செய்ய வேண்டும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணியில் இன்று சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் குளிக்கும் நீரில் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொள்ளவும். புதிய வாய்ப்புகளை ஏற்பதற்கான மனநிலையை தயாராக வைத்துக் கொள்ளவும். வீட்டில் மூத்தவர்களின் அறிவுரையை கேட்டால் பணத்தை சேமிக்க முடியும். சிவன் கோவிலில் வழிபாடு செய்தால் மனதில் அமைதி நிலவும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - கால்நடைகளுக்கு வாழைப்பழம் தானமாக கொடுக்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களின் பழைய மற்றும் புதிய பொறுப்புகளை நிறைவு செய்ய இன்று உகந்த நாளாகும். உங்கள் குடும்பத்தின் நல்லெண்ணம், அறிவு மற்றும் பணம் ஆகியவற்றை பயன்படுத்தி சிறப்பான முடிவை பெறுங்கள். சட்ட வழக்குகளில் சரியான தீர்வுகள் கிடைக்கும். இலக்கு அருகாமையில் இருப்பதால் மாணவர்கள் முழு கவனத்துடன் முயற்சி செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் -கால்நடைகளுக்கு பாலக்கீரை தானமாக வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வங்கி சேவை, கட்டுமானம், மருத்துவம், மருந்து விற்பனை, செய்திவாசிப்பாளர், தொகுப்பாளர் போன்ற தொழில்களில் இருப்பவர்களுக்கு பழைய தொடர்புகளில் இருந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். இளம் அரசியல் தலைவர்கள் மற்றும் இளம் கலைஞர்களுக்கு இன்று புதிய பொறுப்புகள் கிடைக்கும். போட்டித் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு செல்ல சிறப்பான நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - ஏழைகளுக்கு தர்பூசணி தானம் செய்யவும்.

ஜூன் 28 அன்று பிறந்த பிரபலங்கள் : ராஜ் கன்வார், பி.வி.நரசிம்ம ராவ், பிரகலாத் சிங் படேல், ஆனந்த் எல் ராய்,
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி