ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் நிதி சார்ந்த விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும்

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் நிதி சார்ந்த விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும்

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | மே 16 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் இன்று அக்கவுண்ட் திறக்கலாம் மற்றும் பரிவர்த்தனை பட்டியலை சரிபார்க்கலாம். இன்றைக்கு அரசு ஒப்பந்தங்கள், ஸ்பான்சர் செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றில் பங்கேற்கலாம். உங்கள் நண்பர் அல்லது உறவினர்களுக்கு உங்கள் முயற்சியில் அலுவலகப் பிரச்சினைகள் அல்லது சட்ட சிக்கல்களை தீர்த்து வைக்க வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - ஆசிரமங்களில் மஞ்சள் அரிசி தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பிறர் மீது இன்று நம்பிக்கை வைக்கக் கூடாது. அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது. தனிப்பட்ட பிரச்சினைகளை புறம்தள்ளி விட்டு, பணி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்கள் காதல் உணர்வுகளை நனவாக்குவதற்கான நாள் ஆகும். வணிகம் சார்ந்த ஒப்பந்தங்கள் சுமூகமாக நிறைவேறும். எதிர்கால திட்டங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம் மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6

தானம் - கோவிலில் சர்க்கரை தானமாக கொடுக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் நோக்கம் இன்று உயர்வானதாகவும், தெளிவானதாகவும் இருக்கிறது. ஆகவே, அதை கடைப்பிடியுங்கள். மேடையில் உங்களின் பங்களிப்பு குதூகலத்தை ஏற்படுத்துவதாக அமையும். கலைஞர்களுக்கு பணியிடத்தில் புதிய வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இன்றைக்கு உங்களுக்கு புதிய உறவு ஏற்படும். பொது வாழ்வில் உள்ளவர்கள் மற்றும் வழிக்கறிஞர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - தேவை உள்ளவர்களுக்கு மஞ்சள் தானமாக வழங்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பழைய மற்றும் புதிய பொறுப்புகள் காரணமாக பணியாளர்களுக்கு அதிக சுமை உணர்வு ஏற்படும். பச்சை நிற காய்கறிகள் மற்றும் சிட்ரஸ் பழங்களை உட்கொண்டால் உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். கட்டுமானம், இயந்திரம், மெட்டல், சாஃப்ட்வேர், இடைத்தரகர் போன்ற தொழில்களை செய்பவர்கள் இன்று எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடக் கூடாது.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு சிட்ரஸ் பழங்களை தானம் செய்யவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் அனைத்து வாய்ப்புகள் மற்றும் வளங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் செயல்பாட்டுக்கு தகுந்த அங்கீகாரம் மற்றும் பாராட்டு ஆகியவை இன்று கிடைக்கும். நிதி சார்ந்த லாபம் நிச்சயம் என்பதால் சொத்து அல்லது பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். இன்றைக்கு உங்கள் காதலை வெளிப்படுத்துவதற்கு உகந்த நாளாகும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வாழ்க்கை அமைய இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஏழைகளுக்கு வெள்ளை மாவு தானமாக கொடுக்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று காதல் உணர்வு மேலோங்கும். வாக்குறுதிகளை கொடுக்க நினைப்பீர்கள். அதே சமயம், ஏமாற்றுதல் மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகியவை குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணி சார்ந்த வளர்ச்சி கிடைக்க இருக்கிறது. ஆனால், தனிவாழ்க்கையில் உள்ள பிரச்சினைகள் சிக்கலுக்கு உரியதாக இருக்கும். விளையாட்டு வீரர்கள் தங்கள் பயிற்சியாளர்களின் அறிவுரைப்படி நடக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - வெள்ளி நாணயம் தானமாக வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வழக்கறிஞர்கள், சாஃப்ட்வேர் பொறியாளர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், கணக்கு தணிக்கையாளர்கள் போன்றோருக்கு சிறப்பான நாளாகும். உங்கள் தலைமைத்துவ பண்பு மற்றும் சிந்தனை திறன் ஆகியவையே உங்கள் பலம். பணம் சார்ந்த விஷயங்களில் அறிவு மற்றும் புத்திக்கூர்மையுடன் செயல்பட வேண்டும். உறவுகளில் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் நேர்மைக்கு மரியாதை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - மஞ்சள் துணி தானம் செய்யவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தினசரி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் விறுவிறுப்பாக செயல்படுவீர்கள். குறுகிய கால இலக்குகள் நிறைவேறும். ஆனால், நீண்டகால இலக்குகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும். உடல்நலன் மீது அக்கறை செலுத்த வேண்டிய தருணம் இது. ஆரோக்கியமான வாழ்வியலை கடைப்பிடிக்க வேண்டும். குடும்ப விழாக்கள், அரசு நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கால்நடைகளுக்கு பச்சை நிற தானியங்களை வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் செய்யும் வேலைக்கு எப்போதுமே விளம்பரம் முக்கியம். ஆகவே, பொதுதளத்தில் தொடர்ந்து உத்வேகத்துடன் இருங்கள். ஊடகம், விளையாட்டு, கட்டுமானம், மருத்துவம், அரசியல் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வளர்ச்சி கிடைக்க இருக்கிறது. குடும்ப உறவுகளை பலப்படுத்துவதற்கான நாள் இது. வணிகம் அல்லது பணி சார்ந்த விஷயத்தில் எதிர்பார்த்த பதில் கிடைக்க இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

தானம் - பெண்களுக்கு ஆரஞ்சு நிற துணி தானமாக கொடுக்கவும்.

மே 16 அன்று பிறந்த பிரபலங்கள் : விக்கி கௌஷல், நட்வர் சிங், சோனல் சௌஹான், தர்மேஷ் தர்ஷன்,

Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology