Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு சொத்து சம்பந்தமான முடிவுகள் இன்று (ஜூன் 11, 2022) சுமூகமாக முடியும்

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு சொத்து சம்பந்தமான முடிவுகள் இன்று (ஜூன் 11, 2022) சுமூகமாக முடியும்

Numerology | ஜூன் 11 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

Numerology | ஜூன் 11 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

Numerology | ஜூன் 11 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு சிறப்பாக அமையும். முதலீடுகள், புதிய சலுகைகள், ஒப்பந்தங்களில் நுழைவது, வழிகாட்டியின் வழிகாட்டுதல், உத்திகளை உருவாக்குதல், புதிய உறவுகளை ஏற்படுத்துதல் அல்லது நேர்காணலுக்குத் தயாராகுதல் என எல்லாமே உங்களுக்கு பெரிய வெற்றியை தேடி தரும். இன்று நீங்கள் அனைத்து பாராட்டுக்களையும் பெறுவீர்கள். சக நண்பர்களின் பொறாமையை எதிர்கொள்ள கூடும். வெற்றியை அடைய அலுவலகத்தில் உங்கள் மூத்தவர்களுடன் கைகோர்த்து செயல்படவும். இன்று நீங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இராஜ தந்திரமாக இருக்க வேண்டும். புதிய முதலீட்டிற்கு உங்கள் அறிவை சிறப்பாக செயல்படுத்துங்கள். இன்று சூரிய பகவானை வழிபடுவதை நினைவில் கொள்ள வேண்டும்

அதிர்ஷ்ட நிறங்கள்: கடல் பச்சை
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
அதிர்ஷ்ட எண்: 1
தானம்: இன்று மஞ்சள் நிற பழங்களை தானமாக வழங்கலாம்.

# எண் 2 ( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இன்று காதல் உணர்வுகளுக்கான நாள். இன்று ஒப்பந்தம் அல்லது டெண்டர்களில் கையெழுத்திட சிறந்த நாள். பணியிடத்தில் எதிரிகளை வெல்ல இராஜதந்திர தொடர்பு தேவை. அன்பானவர்களுடன் உணர்ச்சிப் பூர்வமான நேரத்தை செலவிட இது ஒரு சிறந்த நாள். இன்று உங்கள் கனவுகள் நிஜமாக மாறினாலும் உண்மையற்றதாகத் தெரியும். எனவே பொறுமையாக இருங்கள். இன்று வெள்ளை நிற ஆடையை அணிவது நல்லது. சிவபெருமானுக்கும் சந்திரனுக்கும் சிறப்பு வழிபாடுகள் இன்று செய்ய வேண்டும்

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை மற்றும் பச்சை
அதிர்ஷ்டமான நாள்:திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண்: 2
தானம்: இன்று பிச்சைக்காரர்கள் அல்லது கால்நடைகளுக்கு பாலை தானம் செய்யலாம்.

#எண் 3 (3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதால், சிறப்பான பல விஷயங்கள் இன்று உங்களுக்கு நடக்கும். இன்று சுற்றுப்புறத்திலிருந்து அறிவைக் கொடுக்கவும் அதை பெறவும் சிறந்த நாள். உங்கள் உடமைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். கடந்த கால சம்பவங்களை மறந்துவிட்டு, இன்றைய தினத்தை சிறப்பாக மாற்ற உங்கள் உள்ளத்தில் நல்ல எண்ணங்களை விதையுங்கள். உங்கள் நண்பர்களுடன் பழகவும், நேரத்தை செலவிடவும் இது ஒரு சிறந்த நாள். நடனம், சமையல், வடிவமைப்பு, நடிப்பு, கற்பித்தல் அல்லது தணிக்கை ஆகிய துறைகளில் இருந்தால் இன்று திறமையை வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. நிதி மற்றும் அரசு தேர்வுகளில் பயிலும் மாணவர்களுக்கு நல்ல செய்து விரைவில் வரும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: பீச் மற்றும் அக்வா
அதிர்ஷ்டமான நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்கள்: 3 மற்றும் 9
தானம்: கோவிலில் குங்குமத்தை தானமாக வழங்குங்கள்

# எண் 4 ( 4,13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):
பழைய பிரச்சினைகளைத் தீர்க்கவும் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தேகங்களைத் தீர்க்கவும் இது ஒரு நல்ல நாள் .இந்த நாள் வணிகத் திட்டங்களின் செயல்பாடுகளால் நிறைந்திருக்கும். வாடிக்கையாளர்களின் விளக்கக்காட்சிகள் அருமையாகவும் பாராட்டத்தக்கதாகவும் இருக்கும். பெரும்பாலான நேரத்தை சந்தைப்படுத்துதல், லாபம் ஈட்டுதல், சொத்துகளைப் பார்ப்பது, புதிய அல்லது பழைய ஒப்பந்தங்களை கவனிப்பது மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல் ஆகியவற்றில் செலவிட வேண்டும். பயணம் செய்தால் அல்லது இயந்திரங்களைக் கையாள்வதில் இன்று அதிக கவனமாக இருங்கள். தனிப்பட்ட உறவுகளும் குழப்பமில்லாமல் இயல்பாக இருக்கும். குங்குமப்பூ சேர்த்த இனிப்புகள் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்தை தரும். மன நிம்மதிக்கு பசுமை நிறைந்த இடத்தில் இருங்கள்.

முதன்மை நிறங்கள்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் செவ்வாய்
அதிர்ஷ்ட எண் 9
தானம்: ஏழைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

# எண் 5 ( 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
பதவி உயர்வு மற்றும் மதிப்பீடுகள் உங்களுக்கு விரைவில் நடக்கும். உங்கள் பணத்தையும் சக்தியையும் அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இன்று சக ஊழியர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். பங்குச் சந்தை வணிகங்கள், ஏலம், விளையாட்டு, ஃபேஷன், ஊடகம் மற்றும் அரசாங்க வேலைகளில் உள்ளவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். உங்கள் தைரியமான ஆளுமை தைரியமான முடிவுகளை எடுக்க உதவும். மேலும் அது பயனுள்ளதாகவும் இருக்கும். நேர்காணல் மற்றும் விழாக்களுக்கு மகிழ்ச்சியுடன் வெளியே செல்லுங்கள். சொத்து சம்பந்தமான முடிவுகள் இன்று சுமூகமாக முடியும். பயணப் பிரியர்கள் வெளியூர் பயணங்களை இன்று திட்டமிடலாம். உணவு மற்றும் பானங்களில் ஆரோக்கியம் இன்று அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் புதன்
அதிர்ஷ்ட எண் 5
தானம்: அனாதைகளுக்கு பச்சை பழங்களை தானம் செய்யுங்கள்

# எண் 6 (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
வாழ்க்கையின் அனைத்து தரப்பிலிருந்தும் ஆசீர்வாதங்கள் மற்றும் ஆதரவைப் பெறுவீர்கள். கட்டுப்பாடுகளை நிறைவேற்றி வெற்றியை அனுபவிக்கும் நாளாக இன்று அமையும். குழந்தைகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவை அதிகம் பெறுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி, துணி, ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் ஆடம்பர பொருட்கள் தொடர்பான வணிகம் கொண்டவர்களுக்கு பல நன்மைகள் இன்று நடக்கும். வாகனங்கள், வீடு, இயந்திரங்கள் அல்லது நகைகள் வாங்க இன்று சிறந்த நாள். பங்குச்சந்தை முதலீடு உங்களுக்கு சாதகமாக இருக்கும். செழிப்பு மற்றும் வாய்ப்பு இரண்டும் விரைவில் உங்களை வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: அக்வா
அதிர்ஷ்டமான நாள் : வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
தானம்: கோவிலில் அல்லது ஏழைகளுக்கு சர்க்கரையை தானம் செய்யுங்கள்

# எண் 7 (7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)
பழைய சமூக தொடர்புகளைப் பயன்படுத்தவும், ஒப்பந்தங்களில் வெற்றி பெறவும் இது ஒரு சிறந்த நாள். இன்று எடுக்கும் முடிவுகள் வியாபாரத்தில் பொறுப்புகளை குறைக்கும். உங்களை மதிக்கிறவர்களுக்கு உங்கள் நன்றியைத் தெரிவிக்க மறக்காதீர்கள். பங்குதாரர் அல்லது வாடிக்கையாளர்களுடன் எந்த சமரசத்தையும் செய்து கொள்ளாதீர்கள். வக்கீல்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்க வேண்டும். திருமண யோசனைகள் இன்று நிறைவேறும். சிவன் கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்வது வெற்றிக்கு தேவையான அம்சங்களை வலுப்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள்: திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் 7
தானம்: ஏழைகளுக்கு உப்பை தானம் செய்யுங்கள்

# எண் 8 (8, 17 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இலக்குகளை அடைய உங்கள் விருப்பத்திற்கு எதிராக இன்று நீங்கள் வளைந்து கொடுக்க வேண்டியிருக்கும். எனவே தயங்குவதை விட்டுவிட்டு முன்னேறி செல்லுங்கள். இன்று நெகிழ்வான அணுகுமுறையையும் புன்னகையையும் கொண்டிருக்க வேண்டும். அரசாங்க இணைப்புகளின் தொடர்புகளை பயன்படுத்துங்கள். இன்று உங்களின் இராஜதந்திர அணுகுமுறையைப் பயன்படுத்தி சட்ட வழக்குகள் தீர்க்கப்படும். வணிக ஒப்பந்தங்களை முறியவடைய வாய்ப்புள்ளது. மாணவர்கள் இன்று அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். பண பரிவர்த்தனைகளை கையாள்வதில் நீங்கள் நாள் முழுவதும் பிஸியாக இருப்பீர்கள். இருப்பினும் இன்றைய நாம் உங்களுக்கு மனநிறையுடன் இருக்கும். கால்நடைகளுக்கு தொண்டு செய்வது இன்று அவசியம்

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
தானம்: தேவைப்படுபவர்களுக்கு பாதணிகளை தானமாக வழங்குங்கள்

# எண் 9 ( 9, 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)
நீங்கள் ஒரு நடிகர், அரசியல்வாதிகள், சந்தைப்படுத்துபவர், பொது நபர் அல்லது ஊடகவியலாளர் எனில், இன்று உங்களுக்கு மிகப்பெரிய வெற்றி மற்றும் வளர்ச்சி கிடைக்க போகிறது. பழைய சச்சரவுகளைத் தீர்க்கக் முயற்சி செய்யுங்கள். காதலில் உள்ளவர்கள் முன்னோக்கிச் சென்று தங்கள் துணையை அணுகுங்கள். அதிக அதிர்ஷ்டம் காரணமாக வணிக உறவுகள் மற்றும் ஒப்பந்தங்கள் நல்லபடியாக முடியும். அரசியல், மருந்துகள், டிசைனிங், மீடியா, நிதி அல்லது கல்வித் துறையில் உள்ளவர்கள் நல்ல வளர்ச்சியைப் பெறுவார்கள். தொந்தரவாக இருந்தவர்கள் இனி உங்களை விட்டு வெகுதூரம் செல்வார்கள். சச்சரவுகளை பேசி முடிக்க பாருங்கள். விளையாட்டு வீரரின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமைப்படுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9
தானம் : கோவிலில் சிவப்பு துணியை தானமாக வழங்குங்கள்

ஜூன் 11ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: லாலு பிரசாத் யாதவ், மகாபலி ஷேரா, ஜூலியா மார்கரேட், ராம் பிரசாத் பிஸ்மில், ராஜாமோகன் ரெட்டி
Published by:Elakiya J
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி