Home /News /spiritual /

எண் கணித பலன் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று பசுவிற்கு வாழைப்பழம் கொடுங்கள்...(26 ஜூன் 2022)

எண் கணித பலன் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று பசுவிற்கு வாழைப்பழம் கொடுங்கள்...(26 ஜூன் 2022)

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | ஜூன் 26ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று வரும் புதிய வாய்ப்பை ஏற்கலாம். சில சந்தர்ப்பங்களில் இன்று உங்கள் செயல்திறன் மற்றவர்களால் தடைபட்டாலும் இந்த அனுபவம் உங்களது எதிர்கால வளர்ச்சிக்கு உதவும். புதிய படிப்பு, புதிய வேலை அல்லது வியாபாரத்தில் புதிய முதலீடு, புதிய வீடு உள்ளிட்ட விவகாரங்களில் முடிவெடுக்க மூத்த குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையை கேளுங்கள். விவசாயம் மற்றும் கல்வித் தொழிலில் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு

அதிர்ஷ்ட எண் - 1

தானம் - ஆசிரமங்களில் கோதுமையை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் பலவீனத்தை எங்கு காட்டுவது, எங்கு காட்ட கூடாது என்பதை தெரிந்து நடந்து கொள்ள வேண்டும். உங்கள் நேர்மை வெற்றிக்கு காரணம் என்றாலும் உங்கள் அப்பாவித்தனத்தை சிலர் தவறாக பயன்படுத்த முயற்சிக்கலாம். உங்கள் பார்ட்னரால் நீங்கள் மனவேதனை அடைந்திருக்கலாம். புண்படுத்தலாம், ஆனால் அது முற்றிலும் தற்காலிகமானது எனபதை புரிந்து கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - கால்நடைகளுக்கு தண்ணீர் வையுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

லட்சியங்களை அடைய சட்டம் பற்றிய ஆலோசனைகளை பெற இன்று நல்ல நாள். நேரடித் தொடர்பு மூலம் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். வடிவமைப்பாளர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளர்கள் இன்று சிறப்பாக செயல்பட்டு பெயரையும் புகழையும் பெறுவார்கள். கட்டுமானம் மற்றும் விவசாயத்தில் முதலீடு செய்ய நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்

அதிர்ஷ்டமான நாள் - வியாழன்

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - கோவிலில் சந்தன தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். ஆனால் உங்கள் உடல்நலம் அல்லது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைக்காக அதிகம் செலவிட நேரிடும். இன்று அசைவ உணவுகள் மற்றும் மதுபானங்களை தவிர்க்கவும். இன்று ஆடை தானம் செய்வது உங்கள் அதிர்ஷ்டத்தை மேம்படுத்த உதவும். உங்களின் செயல்திறன் பிறரால் பாராட்டப்படும். இன்று நீங்கள் அவசியம் ஏதாவது தொண்டில் ஈடுபடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சைக்காரர்களுக்கு பாதணிகளை தானமாக வழங்குங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தொழில் அல்லது தனிப்பட்ட வாழ்வில் புதிய நிகழ்வுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள் என்றால், இந்த நாள் எதிர்பாராத மாற்றத்தை கொண்டு வரும். உங்கள் உணர்வுகளை துணையிடம் முன்மொழிய சிறந்த நாள். பங்குகள் வாங்கவும், நிலம் வாங்கவும், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, சொத்துக்களை விற்கவும், அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கையொப்பமிடவும் நல்ல நாள். இன்று பேச்சை கட்டுப்படுத்த நினைவில் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - புதன்

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு பச்சை பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

செழிப்பான, ஆடம்பரமான மற்றும் காதல் நிறைந்த நாள். இன்று உங்கள் செயலுக்கு ஆதரவாக நேரம் இருப்பதால் உங்கள் கனவுகள் நிறைவேறும். இன்று நீங்கள் அனைத்து நன்மைகளையும் அனுபவிப்பீர்கள். வடிவமைப்பாளர்கள், வழக்கறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் இன்று பாராட்டு மற்றும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க கூடும்.

அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 9

தானம் - ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று ஏதேனு, புதிய சலுகை வந்தால் அதை நிராகரித்து விடுங்கள். ஏனென்றால் இது குழப்பத்தை தவிர்க்க உதவும். பரபரப்பான நாளாக அமைந்தாலும் ஆரோக்கியமற்ற உணவுகளில் எச்சரிக்கையாக இருங்கள். மூத்த குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எதிர் பாலினத்தவர்கள் அல்லது பெரியவர்களின் ஆலோசனை இன்று உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க உதவும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 3

தானம் - குழந்தைகளுக்கு மஞ்சள் நிற பென்சில்களை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குறுக்குவழி யோசனைகளை தவிர்த்து எப்போதும் போல நேர் வழியை பின்பற்றவும். இன்று மிகவும் சுறுசுறுப்பாக உணருவீர்கள், ஆனால் கவனத்துடனும் இருங்கள். உங்களை சுற்றியுள்ள அனைவரும் விசுவாசமாக இருப்பதால் தலைமைத்துவத்தை அனுபவிப்பீர்கள். இன்று குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ஊதா

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு கருப்பு பருப்புகளை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மனதளவில் இன்று நீங்கள் வலுவாக இருக்க வேண்டும். இசை நிகழ்ச்சிகளை நேரில் சென்று ரசிக்க இது ஒரு நாள். நடிகர்கள், பயிற்சியாளர்கள், நகைக்கடைக்காரர்கள், ஆலோசகர், அறுவை சிகிச்சை நிபுணர், அரசியல்வாதிகளுக்கு வெகுமதிகள் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். நன்மைகள், வாய்ப்புகள் புகழ், வேடிக்கை, ஆற்றல் மற்றும் உற்சாகம் நிறைந்த நாள். இன்று நிதி ஆதாயம் சுமூகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - கைக்குட்டை தேவைப்படுவோருக்கு சிவப்பு நிற கைக்குட்டையை தானம் செய்யுங்கள்

ஜூன் 26-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: தருண் சாகர் ஜி, சுரேஷ் கோபி, குணால் கபூர், பங்கிம் சந்த் சட்டர்ஜி, அர்ஜுன் கபூர்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி