Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (2 செப்டம்பர் 2022) மஞ்சள் நிற பருப்புகளை தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (2 செப்டம்பர் 2022) மஞ்சள் நிற பருப்புகளை தானம் செய்யவும்.!

Numerology

Numerology

Numerology | செப்டம்பர் 2-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் சூழ்ச்சி செய்கின்றனர். ஆகவே, பொறுமையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். இன்றைக்கு உங்களுக்கு அனைத்து சௌகரியங்களும் கிடைக்கும் என்றாலும் கூட பணம் ஈட்டுவது மற்றும் இலக்குகளை அடைவது கடினமானதாக இருக்கும். உங்கள் அறிவை பயன்படுத்தி புதிய முதலீடுகளை செய்யலாம். வாடிக்கையாளர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள சிறப்பான நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம் - பெய்ஜி

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 1

தானம் - மஞ்சள் நிற பருப்புகளை தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு உணர்ச்சிகளும், கருணையும் நிறைந்த நாளாகும். வீட்டில் பெரியவர்களின் ஆசிகளுக்கு நன்றி சொல்லுங்கள். இன்று உங்கள் அன்புக்குரியவர்களுடன் உணர்ச்சிகரமான நேரத்தை செலவிட இருக்கிறீர்கள். உங்கள் கனவுகள் அனைத்தும் இன்று நனவாக இருக்கிறது. இன்றைய நாளின் நிறைவில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடலாம். வெள்ளை நிற உடை அணிவது அதிர்ஷ்டத்தை தரும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - கால்நடைகளுக்கு பால் வழங்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தேவையற்ற பிரச்சினைகள் அனைத்தையும் மறந்துவிட்டு, இன்று உண்மை பேசுவது நன்மை தரும். இன்று சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். ஆவணங்கள் மீது கவனம் தேவை. கற்பித்தல், பொது மேடை பேச்சாளர், நடனம், சமையல், நடிப்பு, மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருப்பவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டலாம். நிதி சார்ந்த கல்வி பயிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பீச்

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - கோவிலில் குங்குமம் தானம் செய்ய வேண்டும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பிறர் மனதை புண்படுத்தாமல் மரியாதை கொடுக்கவும். இன்றைய நாள் என்பது பல உத்திகள் நிறைந்ததாக இருக்கும். பணம் ஈட்டும் நடவடிக்கைகள் குறித்து அதிகம் சிந்திப்பீர்கள். தனிப்பட்ட உறவுகளில் குழப்பங்கள் காரணமாக விரிசல் உண்டாகக் கூடும். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள காவி நிற இனிப்புகள் சாப்பிடுவது கட்டாயம் ஆகும். சுற்றியுள்ள நண்பர்களுடன் நேரம் செலவழிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு பச்சை நிற தானியங்களை தானமாக வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று யதார்த்தத்தை சிந்தித்து அதன்படி நடக்கவும். உங்கள் மீது பிறர் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க நீங்கள் வலிமையுடன் இருக்க வேண்டும். முதலீட்டுத் திட்டங்களில் பலன் கிடைக்க கூடிய நாளாகும். இன்று நேர்காணல்களுக்கு மகிழ்ச்சியுடன் சென்று வெற்றி காணலாம். சொத்து சார்ந்த முடிவுகளை சரியானதாக எடுப்பீர்கள். பயணம் மீது பிரியம் கொண்டவர்கள் வெளிநாடு செல்லலாம். பழைய நண்பரை சந்திக்க வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா மற்றும் கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஆசிரமங்களில் பச்சை நிற பழங்களை தானம் செய்யவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கடந்த கால நிகழ்வுகள் தொடர்பான உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும். அனைத்து பொறுப்புகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதற்கு மிக சரியான நாளாகும். ஏராளமான வாய்ப்புகள் உங்கள் கதவை தட்டும். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுபவர்களின் ஆதரவை பெறுவீர்கள். வணிகத்தில் வெற்றி சார்ந்த முடிவுகளை எடுப்பீர்கள். காதல் வாய்ப்புகள் உங்கள் உறவுகளை பலப்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - குழந்தைகளுக்கு வெள்ளை நிற இனிப்புகள் வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உணர்ச்சிகரமான நிகழ்வுகள் உங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும். உங்களுக்கான பொறுப்புகளை அதிகரித்துக் கொள்ள வேண்டாம். ஆனால், பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். எதிர் பாலினத்தவர் முன்வைக்கும் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். திருமண ஏற்பாடுகள் குறித்து பரிசீலனை செய்யலாம். சிவன் கோவிலில் சென்று வழிபாடு செய்தால் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவிலில் செப்பு பாத்திரம் தானமாக கொடுக்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வணிகத்தில் சவால்களை எதிர்கொள்ளும் உங்கள் திறன் அதிகமாக இருக்கிறது. ஆகவே, உங்கள் கனவுகளை நனவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். சட்ட வழக்குகளுக்கு பணம் மூலமாக சமரசத் தீர்வுகளை எட்ட முடியும். இன்றைய நாள் முழுவதும் குடும்ப நிகழ்ச்சிகள் அல்லது அலுவலக பணிகள் சார்ந்து மிகவும் பிஸியாக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தை நிலைநாட்ட அசைவத்தை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவை உள்ளவர்களுக்கு காலணி வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சமுதாய சேவை செய்ய இன்று சிறப்பான நாளாகும். அரசு அதிகாரிகளை நோக்கி கேள்விகள் வரும். ஆகவே, அனைத்திற்கும் நேர்மையாக பதில் அளிக்க தயாராக இருக்கவும். பெற்றோர் தங்கள் குழந்தைகளை நினைத்து பெருமை கொள்ளும் தருணம் இது. வணிகத்தில் உணர்வு ரீதியான நம்பிக்கை வைத்து, பெரும் பலன்களை அடைவதற்கு சிறப்பான நாள் இதுவாகும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

செப்டம்பர் 2 அன்று பிறந்த பிரபலங்கள் : தானம் - சுதீப், பவன் கல்யாண், ஸ்வரூபானந்த சரஸ்வதி, சாதனா சிவதாசணி, இஷாந்த் சர்மா, நந்தமுரி ஹரிகிருஷ்ணா,
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி