Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (10 ஜூன் 2022) ஏழைகளுக்கு சர்க்கரை அல்லது இனிப்புகளை தானம் செய்யுங்கள்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (10 ஜூன் 2022) ஏழைகளுக்கு சர்க்கரை அல்லது இனிப்புகளை தானம் செய்யுங்கள்..!

Numerology

Numerology

Numerology | ஜூன் 10 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

சிறிய சவால்களை எதிர்கொள்ள தயாராக நம்பிக்கையுடன் இருங்கள் மற்றும் மன அமைதிக்காக இன்று தியானத்தில் ஈடுபடுங்கள். இன்று நீங்கள் சகலவசதிகளையும் அனுபவிப்பீர்கள் என்றாலும் பணம் சம்பாதிப்பது அல்லது இலக்கை அடைவது சற்று சிக்கலானதாக இருக்கும். விளையாட்டு வீரர்கள் தங்கள் பயிற்சியாளர்களால் வெற்றியுடன் வீட்டிற்கு திரும்புவார்கள். பெண்கள் தங்கள் நெகிழ்வான அணுகுமுறை மூலம் இதயங்களை வெல்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு மற்றும் வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3

தானம் - சூரியகாந்தி எண்ணெயை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

நீங்கள் நினைக்கும் படி இன்றைய நாள் கடந்து செல்லாது. எனவே வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை அடைய, நீங்கள் ப்ராக்டிக்கலாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவழிக்க இன்று சிறந்த நாள். திரவங்கள், கல்வி, புத்தகங்கள், நிதி, மின்னணுவியல், மருந்துகள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதிகள், சூரிய ஆற்றல், விவசாயம், பெட்ரோல் மற்றும் ரசாயனங்கள் உள்ளிட்ட துறைகளில் உள்ளோர் நல்ல லாபம் ஈட்டுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம் மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 2

தானம் - பிச்சைக்காரர்கள் மற்றும் கால்நடைகளுக்கு இன்று குடிநீர் வழங்குங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

உங்கள் திறமையை வெளிப்படுத்தவும், வெகுமதிகளை பெறவும் இன்று சிறந்த நாள். இல்லத்தரசிகள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், பாடகர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நடனக் கலைஞர்களுக்கு இந்த நாள் வெற்றி நிறைந்த நாளாகும். நீங்கள் அரசியலில் இருந்தால் இன்று மக்களின் கவனத்தை ஈர்ப்பதில் சிரமப்படுவீர்கள். மாணவர்கள் தேர்வு எழுதும் முன் குரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - கோவிலில் சந்தனத்தை தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

இந்த நாள் உங்களுக்கு சாதகமானதாக மாறும். பாதுகாப்பு, சொத்து விற்பனையாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் தொலைத்தொடர்பு வணிகம், ஐடி ஊழியர்கள் எளிதாக பலன்களை பெறலாம். பங்குகளைக் கையாள்வதில் கவனம் தேவை. மூத்தவர்களின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள். நீங்கள் இன்று பிற்பகுதியை உங்கள் பொழுதுபோக்கிற்காக செலவிட கூடும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

அரசியல்வாதிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் இன்று வளர்ச்சி மற்றும் பண லாபத்தை காணலாம். சக ஊழியர்களிடம் இன்று ஜாக்கிரதையாக இருங்கள், உங்கள் ரகசியங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இன்றைக்கு பார்ட்டிகள் மற்றும் அசைவ உணவுகளை தவிர்க்கவும். சொத்து சம்பந்தமான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும். விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்
அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஏழைகளுக்கு சர்க்கரை அல்லது இனிப்புகளை தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

இன்று உங்களது தனிப்பட்ட விஷயங்களில் அதிர்ஷ்டம் பங்கு வகிக்கும். இன்று நீங்கள் செழிப்பாகவும், சிறந்த துணையை வழங்கிய கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாகவும் உணரும் நாள். உங்கள் பிள்ளைகளை நினைத்து பெருமிதம் கொள்வீர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவை பெறுவீர்கள். வாகனம், மொபைல், வீடு வாங்க அல்லது ஒரு சிறிய பயணத்தைத் திட்டமிட நல்ல நாள். நடிப்பு மற்றும் அரசியலில் உள்ளவர்கள் தங்களுக்கு இன்று கிடைக்கும் வாய்ப்பை ஏற்று கொள்ள வேண்டும். ஏனெனில் இது எதிர்கால வளர்ச்சிக்கு சிறந்தது.

அதிர்ஷ்ட நிறம் - நீலம் மற்றும் பீச்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - வெள்ளை நாணயத்தை நன்கொடையாக கொடுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

இன்று ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாள். எனவே வணிக ஒப்பந்தங்களில் குறிப்பாக உங்கள் அறிவை பயன்படுத்த வேண்டும். எதிர் பாலினத்தவர் ஆலோசனைகள் கூறினால் ஏற்று கொள்ளுங்கள். அது பணத்தை சரியான வழியில் சேமிக்க உதவும். மென்பொருள் மற்றும் அரசியல் தொடர்பான வணிக ஒப்பந்தங்கள் மிகவும் வெற்றிகரமாக இருக்கும். சிவன் கோவிலுக்கு சென்று இன்று வழிபடுவதன் மூலம் செல்வ செழிப்பைப் பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 7

தானம் - ஏழைகளுக்கு சமையலுக்கு தேவைப்படும் பருப்புகளை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

நீங்கள் ஒரு சிறந்த ஃபினிஷர் மற்றும் அதுவே உங்கள் பலம். எனவே இன்று நீங்கள் அனைத்து பணிகளையும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். அறிவு மற்றும் பணத்தின் பலத்தை இன்று பயன்படுத்துங்கள். போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் டார்க் நிறங்களை அணிவதை தவிர்க்க வேண்டும். இன்று உங்கள் எல்லா முடிவுகளும் சரியானதாக இருக்கும். குறிப்பாக விளையாட்டுகளில், வீரர் தனது கடின உழைப்பின் மூலம் உச்சத்தை தொடுவர்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை
அதிர்ஷ்டமான நாள் - சனி
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவைப்படுபவர்களுக்கு பாதணிகளை வழங்குங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

இன்று பார்ட்னர் மற்றும் சக ஊழியர்களுடன் பேசும் போது பேச்சில் கவனம் தேவை. இல்லையெனில் எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படும். மாணவர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் இன்று அழகான நாள். அரசு ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் சுமூகமாக கையெழுத்தாகும். இசைக்கலைஞர்களின் பெற்றோர்கள் இன்று தங்கள் குழந்தைகளால் பெருமைப்படுவார்கள். மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பாராட்டுகளை பெறுவார்கள். இன்று உங்களது பயணத் திட்டங்கள் சாதனைகள் நிறைந்ததாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9

தானம் - எந்த வடிவத்திலாவது சிவப்பு மசூரை தானம் செய்யுங்கள்

ஜூன் 10ம் தேதி பிறந்த பிரபலங்கள்: சுந்தர் பிச்சை, நந்தமுரி பாலகிருஷ்ணா, பிரகாஷ் படுகோன், மிகா சிங், ராகுல் பஜாஜ், சுப்ரதா ராய்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி