Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று ஏழைகளுக்கு உப்பை தானம் செய்யுங்கள்..

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று ஏழைகளுக்கு உப்பை தானம் செய்யுங்கள்..

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | மே 25 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் எடுக்கும் பெரும்பாலான முடிவுகள் நேர்மறையானதாகவும், சிறந்ததாகவும் இருக்கும். உங்களின் செயல்திறம் இன்று மேம்படும். பணியிடங்களில் புதிய ஆதரவைப் பெறுவீர்கள். நடிகர்கள் மற்றும் பொது பேச்சாளர்கள் தங்களது தொழில் வாழ்க்கையில் வளர்ச்சியை எதிர்கொள்வார்கள். ஆசிரியர்கள், மருத்துவர்கள், உலோக உற்பத்தியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சில சலுகைகளைப் பெறுவார்கள், இன்று தோல் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு

அதிர்ஷ்ட எண் - 3

தானம் - கோவிலில் சூரியகாந்தி விதைகளை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தேவையற்ற அல்லது குடும்ப பிரச்சனைகளில் இருந்து இன்று நீங்கள் சற்று விலகியே இருங்கள். குறிப்பாக உங்கள் உள்ளுணர்வு சிறந்த முறையில் துணைபுரியும். எனவே உங்கள் இதயம் சொல்வதை மட்டும் கேளுங்கள். இன்று பிடிவாதத்தை குறைத்து உங்கள் உண்மை உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் சுமுகமாக நிறைவேறும். அரசியல்வாதிகள், ஊடகங்கள், விவசாயிகள், வங்கியாளர்கள். மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6

தானம் - ஏழைகளுக்கு உப்பை தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மீடியா துறையில் பணிபுரிபவர்களுக்கு இன்று சிறப்பான நாள். உங்களுக்கு இன்று அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். நண்பர்களுடன் இருக்கும் போது குறிப்பாக இன்று நிதி பற்றிய விஷயங்களை பகிர வேண்டாம். இசையமைப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள், மாணவர்கள், செய்தி தொகுப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், இல்லத்தரசிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உள்ளிட்டோரின் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்

அதிர்ஷ்டமான நாள் - வியாழன்

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - தேவைப்படுபவர்களுக்கு பிரவுன் அரிசியை தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து பணிகளையும் நீங்கள் இன்று சரியாக முடிப்பீர்கள். தானியங்களை தானம் செய்வது சிறப்பான பலன்களை கொண்டு வரும் மந்திரமாக இருக்கும். கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் மற்றும் தரகர்கள் போன்ற வணிகங்களில் உள்ளோர் இன்று முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். விளையாட்டு வீரர்களின் பெற்றோர்கள் பெருமிதமும் உற்சாகமும் கொள்ளும் நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - புறாவுக்கு தானியங்கள் வையுங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாளில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் மூலம் வெற்றி பெறுவீர்கள். இன்று வெகுமதிகளை பெறுவீர்கள் மற்றும் உங்கள் செயல்திறனுக்கு அங்கீகாரம் கிடைக்கும். விளையாட்டு வீரர், அறிவிப்பாளர்கள், நகைக்கடைக்காரர்கள், மாணவர்கள் சிறந்த முடிவைப் பெறுவார்கள். இன்று வாழ்க்கை உங்களுக்கு விருப்பமான பரிசுகளை வழங்கும் என்பதால் உங்கள் காதலை வெளிப்படுத்தவும் இன்று சிறந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - கால்நடைகளுக்கு குடிநீர் வழங்கவும்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்களை தவறாக பயன்படுத்த கூடும் என்பதால் எச்சரிக்கையாகவும், ராஜதந்திரத்துடனும் இருங்கள். உங்களால் அனைத்தையும் நிறைவேற்ற முடியாது என்பதால் இன்று பல பொறுப்புகளை எடுத்து கொள்ள வேண்டாம். ஹோட்டல் வியாபாரிகள், நகைக்கடைக்காரர்கள், நடிகர்கள், ஜாக்கிகள் மற்றும் மருத்துவர்களுக்கு இன்று அதிர்ஷ்ட நாள். மாணவர்கள் தங்கள் எதிர்காலத்திற்கான கல்வியில் பெற்றோரின் வழிகாட்டுதலைப் பெற வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - வெள்ளி நாணயங்களை தானமாக கொடுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் ஊழியர்களை நம்புவதை தவிர்க்க வேண்டும். கிடைத்தால் ஒன்று அதிக லாபம் அல்லது அதிக நஷ்டம் கிடைக்கும். எனவே பெரியவர்கள் மற்றும் குருவின் ஆசீர்வாதங்களை பெற்று லாபம் எடுக்க பாருங்கள். ஆளுமை மற்றும் பகுப்பாய்வு திறன் தான் உங்கள் ஆளுமையின் சொத்து. ஸ்டேஷனரி, தியேட்டர், டெக்னாலஜி, அரசு டெண்டர்கள், ரியல் எஸ்டேட், பள்ளிகள், உள்துறை ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு இது ஒரு சிறந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - ஏழைகளுக்கு சூரியகாந்தி எண்ணெயை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களின் பிடிவாதத்தை விட்டு கிடைக்கும் வாய்ப்பை ஏற்று கொள்வது இன்று சிறந்தது. உடன் பணிபுரிபவர்களிடம் கோபத்தை காட்டி விட வேண்டாம். இன்று உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து கொள்ள மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கான நேரம். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது இன்று அவசியம். செழிப்பைக் கொண்டு வர சிவபெருமான் மற்றும் சனி பகவானை வணங்குங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கால்நடைகளுக்கு பச்சை தானியங்களை வழங்குங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுக்கு அதிகாரம், பணம், அங்கீகாரம், ஆடம்பரம் மற்றும் புகழை பெறுவதற்கான நாள். நடிப்பு, ஊடகம், ஆங்கரிங், விளையாட்டு, கட்டுமானம், மருத்துவம், அரசியல் மற்றும் கவர்ச்சி துறையைச் சேர்ந்தவர்கள் புதிய உச்சத்தை காண்பார்கள். இன்றைய நாளை நேர்மறையாகத் தொடங்க மாதுளை சாப்பிடலாம்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

தானம் - ஏழைகளுக்கு சிவப்பு நிற தானியங்களை தானம் செய்யுங்கள்

மே 25-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்:கரண் ஜோஹர், குணால் கேமு, உத்தம் சிங், ராஷ் பிஹாரி போஸ், நடிகர் கார்த்தி
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி