Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (14 செப்டம்பர் 2022) செடிகளை தானமாக வழங்கவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (14 செப்டம்பர் 2022) செடிகளை தானமாக வழங்கவும்.!

Numerology

Numerology

Numerology | செப்டம்பர் 14-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் வணிகத்தில் அனைவரையும் காந்தம் போல ஈர்ப்பீர்கள், கண்மூடித்தனமாக மக்கள் உங்கள் பின்தொடர்ந்து நம்புவார்கள். உங்கள் வசீகரம் எல்லோரையும் ஈர்க்கக் கூடியதாக இருப்பதால் நீங்கள் தலைவராக தொடர்ந்து நீடிப்பீர்கள். வணிகத்தை விரிவாக்கம் செய்ய அல்லது பணியில் உயர் பதவியை அடைய உங்களுக்கு நம்பிக்கை உண்டு. தனிப்பட்ட விஷயங்களில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சோலார் வணிகம், நகை வியாபாரிகள், பொறியாளர்கள், மின்னணு, தானியங்கள், துணி வணிகம் உள்ளிட்ட துறைகளில் ஈடுபடுபவர்கள் லாபம் அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 1 மற்றும் 5
தானம் - கோவிலில் சூரியகாந்தி விதைகள் தானமாக வழங்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதலிப்பவர்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கிறது. குழந்தைகளிடம் தன்னம்பிக்கை தென்பட்டாலும், முயற்சிகளுக்கான வெற்றி உடனே கிடைக்காது. பெற்றோர்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு திட்டமிட வேண்டும். தம்பதிகளின் அன்பும் பிணைப்பும் அதிகரிக்கும். கடல் பச்சை நிற உடைகளை அணிந்தால் மீட்டிங் அல்லது நேர்காணல்களில் அதிர்ஷ்டம் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் – கடல் பச்சை மற்றும் வெள்ளை
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6
தானம் - ஏழைகளுக்கு உப்பு தானமாக வழங்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வணிகம் மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் உங்களுக்கான அங்கீகாரம் மற்றும் வளர்ச்சி ஆகியவை கிடைக்க இருக்கிறது. இன்று நீங்கள் மனம் விட்டு பேசினால் உறவுகள் வலுப்படும். கிரியேட்டிவ் நபர்கள் தங்களுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு முயற்சி செய்யலாம். புதிய வணிக வாய்ப்பு இன்று வெற்றிகரமாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் – பீச்
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1
தானம் - ஆசிரமங்களில் மஞ்சள் சாதம் தானம் செய்யவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணியிடத்தில் நேர்மறையான சூழலும், நிலைத்தன்மையும் நீடிக்கும். மார்க்கெட்டிங் உத்திகளை தொடர்ந்து செயல்படுத்துங்கள். அதன் மூலமாக அதிர்ஷ்டம் கிடைக்கும். இன்றைய நாள் குழப்பமாக இருந்தாலும் கூட மாலை நேரத்தில் உங்களுக்கு சாதகமாக கிடைக்கும். இளைஞர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும், உறவுகளை தவறாகப் பயன்படுத்தக்கூடாது. மது மற்றும் மாமிசத்தைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - சிட்ரஸ் உணவுகளை ஏழைகளுக்கு கொடுக்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அதிர்ஷ்ட சக்கரம் உங்களுக்கு சாதகமாக சுழல்கிறது. உங்கள் இலக்கை அடைவதற்கான நல்ல நேரம் உங்களை நெருங்கி வருகிறது. திடீரென்று உங்கள் அதிர்ஷ்டம் அதிகரித்து கேரியரில் வளர்ச்சி காணப்படும். இன்று ஷாப்பிங் செய்ய, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய, விளையாட்டுகளில் பங்கேற்க சிறப்பான நாள் ஆகும். இன்று உங்களுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும். அனைத்து வசதிகளுடன் சிறிய பயணம் செல்லலாம். சொத்து அல்லது பங்குகளில் முதலீடு செய்வதற்கு ஏற்ற நாள். ஒரு சிறப்பான நண்பர் அல்லது வழிகாட்டியை இன்று சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - செடிகளை தானமாக வழங்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

திருமணமான தம்பதிகளின் பிணைப்பு அதிகரிக்கும், உறவுகள் வலுப்படும். இன்று நீங்கள் அனைத்து இலக்குகளையும் அடையலாம். ஒரு வெற்றியாளராக உங்களை உணர்வீர்கள். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வரும். சொத்து விவகாரங்களை எளிமையாக கையாளலாம். குடும்பத்தலைவிகளுக்கு உரிய மரியாதையும் ஆதரவும் கிடைக்கும், நிறைவாக உணர்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 2
தானம் – குழந்தைகளுக்கு நீல நிறப் பேனா அல்லது பென்சில்களை வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுடைய முதிர்ச்சி உங்கள் தனிப்பட்ட வாழ்வில் பெரிய அளவில் உதவும். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் அன்பு மற்றும் அரவணைப்பு மகிழ்ச்சியை தரும். மூத்தவர்களின் ஆசிர்வாதங்களை பெற்று இன்றைய தினத்தைத் தொடங்கவும். சிறிய பிராண்டுகள் அதிகம் பிரபலமடையும். சக நண்பர்களின் மீது நம்பிக்கை வைக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் – பீஜ்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7
தானம் – செம்பு பாத்திரம் தானமாக கொடுக்கவும்.

#எண் 8 (நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சூழல் எவ்வளவு கடினமாக இருந்தாலும், உங்களின் கடந்த கால உழைப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும், எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள உதவும். தம்பதியர்களுக்கு இடையிலான காதல் உறவு இனிமையாக இருக்கும். மன அழுத்தத்தைப் போக்குவதற்கு யோகா செய்யவும். உடல் ஃபிட்னஸ் மீது அக்கறை காட்டவும்.

அதிர்ஷ்ட நிறம் – நீலம் மற்றும் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் – துளசிச் செடியை ஒரு குழந்தைக்கு வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் உடமைகள் மீது எப்போதும் கவனம் செலுத்துங்கள். ஏற்கனவே தெரிந்த நபர் மூலமாக உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படலாம். பங்குச் சந்தை தவிர்த்த பிற வணிகளில் முதலீடு செய்வதற்கு சிறப்பான நாள் ஆகும். இளம் வயதினர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை ஈர்க்கலாம். நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மற்றும் பொதுக் கூட்டத்தில் பேசுவதற்கு சுமாரான நாள் ஆகும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6
தானம் - பெண் குழந்தைகளுக்கு சிவப்பு நிற கைக்குட்டைகள் வழங்கவும்.

செப்டம்பர்14 அன்று பிறந்த பிரபலங்கள்: ராம் ஜெத்மலானி, ஆயுஷ்மான் குரானா, ராபின் சிங், ஸ்ரீகாந்த் ஜிச்கர், லக்ஷ்மி பார்வதி, ராஜ்குமார் கோஹ்லி
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி