Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (3 ஆகஸ்ட் 2022) பச்சை நிற காய்கறிகளை தானமாக கொடுக்கவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (3 ஆகஸ்ட் 2022) பச்சை நிற காய்கறிகளை தானமாக கொடுக்கவும்.!

Numerology

Numerology

Numerology | ஆகஸ்ட் 3-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் ஆற்றல் மற்றும் அறிவுக்கு பெரும் அளவிலான ஈர்ப்பு காணப்படும். போட்டியில் பங்கேற்பதற்கு முன்பாக ஆசிரியர் அல்லது பயிற்சியாளரின் அறிவுரையை பின்பற்ற வேண்டும். சொத்து வாங்குவது மற்றும் விற்பனை செய்வது இரண்டிலும் போட்டி காணப்படும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நிறம் - பெய்கே
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3

தானம் - பள்ளிகளில் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காகிதங்களில் உங்கள் அறிவை செயல்படுத்த வேண்டிய தருணம் இது. ஆகவே, போட்டித் தேர்வுகளில் கட்டாயம் பங்கேற்கவும். சட்ட ரீதியான விஷயங்கள் சுமூகமாக செல்லும். உங்களை அவமரியாதை செய்யக் கூடிய ஒருவரை சந்திக்க நேரிடலாம். பெண்கள் அலுவலகத்தில் மூத்த ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவிலில் எண்ணெய் அல்லது பால் வழங்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களால் முடிந்த அளவுக்கு தொடர்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். தொழில் துறையில் உங்களை தனி பிராண்டாக நிலைநிறுத்திக் கொள்ள அது உதவியாக இருக்கும். புதிய பணி நியமனத்தை எதிர்பார்க்கலாம். நிதி ரீதியாக இன்று எடுக்கும் அனைத்து முடிவுகளிலும் திருத்தம் தேவைப்படலாம். காதலை திறந்த மனதுடன் வெளிப்படுத்தலாம்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - பெண் பணியாளருக்கு சிவப்பு நூல் கொடுக்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வலிகளை துடைத்துவிட்டு நகர்ந்து செல்ல வேண்டிய தேவை இன்று ஏற்படும். நேர மேலாண்மை இன்று மிக முக்கியமானது. எதிர்காலத்திற்கு தேவையான விதைகளை இன்றே தூவ வேண்டும். அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் இருப்பவர்கள் இன்று பயணங்களை தவிர்க்க வேண்டும். இன்றைக்கு அசைவ உணவுகளை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சைக்காரர்களுக்கு கோதுமை தானமாக வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லவும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் அதிக வாய்ப்பு உண்டு. வங்கிப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டு. மாணவர்கள் கல்வி சார்ந்த சாதனைகளை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5

தானம் - பச்சை நிற காய்கறிகளை தானமாக கொடுக்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வெகு விரைவில் பரிசுகள் அல்லது பாராட்டுகள் கிடைக்க இருக்கின்றன. ஆகவே, இப்போதைய சூழல் குறித்து அதிகம் சிந்திக்க வேண்டாம். உங்களுக்கு பணம் நிறைவாக கிடைக்கும். அதை வைத்து மகிழ்ச்சியாக இருக்கவும். உங்கள் தோள்களில் உள்ள சுமைகளை பிறருடன் பகிர்ந்து கொள்ளவும். சொந்த ஊரில் நண்பர்கள் மற்றும் உறவுகளை சந்திப்பது மகிழ்ச்சி தரும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஆசிரமங்களில் வெள்ளை மாவு அல்லது உப்பு வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று எடுக்கும் முடிவுகள் அனைத்தும் கனக்கச்சிதமாக இருக்கும். எதிர்காலத்தில் அதிர்ஷ்டம் நிறைந்து காணப்படும். பணியிடத்தில் முதலாளி அல்லது மூத்த பணியாளர்களுடன் விவாதங்கள் செய்வதை தவிர்க்கவும். இடைத்தரகர்களை கண்ணை மூடிக் கொண்டு நம்ப வேண்டாம். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7

தானம் - வீட்டுப் பணியாளருக்கு உலோகப் பாத்திரம் வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் மூர்க்க குணத்தை விட்டுவிட்டு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கோரி அலுவலகத்தின் மூத்த பணியாளர்களை அணுக வேண்டிய நேரம் இது. வணிகத்தில் செய்யப்படும் பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக அமையும். குடும்பத்துடன் நேரம் செலவிடுவது மகிழ்ச்சியை தரும். காதல் உறவுகளில் நம்பிக்கை அதிகரிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் பிரவுண்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கால்நடைகளுக்கு பச்சை நிற உணவுகளை கொடுக்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கற்பனைத் திறன் நிறைந்த கலைஞர்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் வாய்ப்பு கிடைக்கும். இன்றைய நாள் முழுவதும் நம்பிக்கை நிறைந்திருக்கும். வணிகத்தில் கூடுதல் பலம் கிடைக்க பழைய நண்பர்களை சந்திக்கலாம். திருமண ஆசையை வீட்டில் வெளிப்படுத்த நல்ல நேரம். கோபத்தை கட்டுப்படுத்தவும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

தானம் - ஏழைகளுக்கு தர்பூசணி தானமாக கொடுக்கவும்.

ஆகஸ்ட் 3 அன்று பிறந்த பிரபலங்கள் : மனிஷ் பால் , சுனில் குரோவர், பரிகா சிங், சுனில் சஹேட்ரி, பொங்கலூர் என் பழனிசாமி
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி