முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (7 செப்டம்பர் 2022) ஆசிரமத்திற்கு பச்சைக் காய்கறிகளை தானம் செய்யுங்கள் .!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (7 செப்டம்பர் 2022) ஆசிரமத்திற்கு பச்சைக் காய்கறிகளை தானம் செய்யுங்கள் .!

Numerology

Numerology

Numerology | செப்டம்பர் 7-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் வியாபாரம் அல்லது உறவில் துரோகம், ஏமாற்றத்தை சந்திக்க கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை. இக்கட்டிலிருந்து தப்பிக்க கோயிலுக்கு சென்று வழிபடுங்கள். எதிர் பாலினத்தவர்களால் உங்களுக்கு இன்று ஆதாயம் கிடைக்க கூடும். அரசியல்வாதிகள், நிதியாளர்கள், நடிகர்கள் மற்றும் மருத்துவர்கள் இன்று தங்களது துறையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு

அதிர்ஷ்ட எண் - 3

தானம் - சூரிய பகவான் கோவிலில் தானியங்களை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் விருப்பங்களை சமரசம் செய்து கொள்ள நேரிடும். எனினும் மாலைக்குள் நீங்கள் நினைத்த காரியங்களில் வெற்றியடைவீர்கள். உறவுகளை நேசியுங்கள் ஆனால் உங்கள் பார்ட்னரிடம் ஓவர் அட்வான்டேஜ் எடுத்து கொள்ள நினைக்காதீர்கள். சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை பூஜிப்பதன் மூலம் நல்ல பலன்களை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பீச்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - பிச்சைக்காரர்களுக்கு தேவையான உணவுகளை செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சிறந்த அறிவு மற்றும் உயர் கல்வித் தகுதி இருந்தால் நீங்கள் நிறைய செழிப்பு மற்றும் ஆடம்பரத்தை அனுபவிக்கலாம். உங்கள் சொந்த பந்தங்களிடம் இன்று உங்களுக்கு நல்ல வரவேற்பு மற்றும் மரியாதை கிடைக்கும். அறிவு திறமையை வெளிப்படுத்த வெகுமதிகளை வெல்ல இன்று சிறந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - வியாழன்

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - கோவிலில் சந்தனம் கொடுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று பேச்சில் கனிவை கடைப்பிடித்து அசைவம் மட்டும் மதுவை தவிர்க்கவும். உங்கள் பிரச்சனைகளுக்கு அண்டை வீட்டார் அல்லது நண்பர்கள் உதவுவார்கள். சோம்பேறியாக இருந்தால் வெற்றி மற்றும் மகிழ்ச்சி இரண்டையும் தவறவிடுவீர்கள். இன்று நீங்கள் திட்டமிட்டு செய்யும் வேலை எதிர்காலத்தில் நல்ல பலனை தரும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு பச்சை பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களின் ஈர்ப்பு மிக்க ஆளுமையால் மற்றவர்களின் மனதை வெல்வீர்கள். உங்களின் அக்கறை மனப்பான்மையால் இன்று எதையும் சாதிக்கலாம். விளையாட்டு வீரர், நடிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு அதிர்ஷ்டம் வேலை செய்யும். சிறிய பயண திட்டம் தம்பதிகளிடையே உறவை வளர்க்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை நன்கொடையாக வழங்குங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மற்றவர்கள் செய்யும் சிறிய தவறுகளை புறக்கணித்து விடுங்கள், அப்போது தான் உறவில் நம்பிக்கை அதிகரிக்கும். உங்களை சுற்றியுள்ளவர்கள் உங்களுக்கு மிகவும் விசுவாசமாக இருப்பார்கள். வீடு வாங்க, சொத்து ஒப்பந்தங்கள் மேற்கொள்ள, சட்டப்பூர்வ சம்பிரதாயங்கள் செய்ய, வேலைக்கு விண்ணப்பிக்க இன்று ஏற்ற நாள்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சைக்காரர்களுக்கு உணவு அல்லது உடைகளை தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

முதலீடு இல்லாமல் உங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடியாது. மேலும் இதனால் வெற்றி தடைபடும் என்பதை புரிந்து கொள்வீர்கள். வணிக அல்லது தனிப்பட்ட உறவுகளில் பிறரை எளிதில் நம்ப வேண்டாம். வாகனம் ஓட்டுவது மற்றும் இயந்திரங்களை இயக்குவதையும் இன்று தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - பிச்சைக்காரர்களுக்கு மஞ்சள் அரிசியை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுக்கு மிகவும் பிஸியான நாள் என்பதால் ஆற்றலை தக்க வைத்து கொள்ளுங்கள். பிறரால் மன அழுத்தம் ஏற்படும் என்பதால் கவனமாக இருங்கள். மருத்துவ துறையில் இருப்பவர்கள் பதவி உயர்வு அல்லது பண வெகுமதியை பெறுவார்கள். இன்று ஆரோக்கியத்தை மேம்படுத்த நேரத்தை செலவிடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஆசிரமத்திற்கு பச்சைக் காய்கறிகளை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் வணிக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வளர்ச்சியை அதிகரிக்க பணத்தை பயன்படுத்துங்கள். உலோகம் மற்றும் நிதித்துறை, வழக்கறிஞர்கள் மற்றும் நடிகர்களுக்கு இன்று சிறப்பான நாள். இன்றைய நாளில் அதிர்ஷ்டம் மற்றும் ஸ்திரத்தன்மையை அதிகரிக்க சிவப்பு இலை காய்கறிகளை பிறருக்கு நன்கொடையாக கொடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 3

தானம் - ஆசிரமத்தில் சிட்ரஸ் பழங்களை தானம் செய்யுங்கள்

செப்டம்பர் 7-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: மம்முட்டி, ராதிகா ஆப்தே, நீரஜா பானோட், ஜுவாலா குட்டா, சச்சின் பைலட், பிரேந்தர் சிங் தானு

First published:

Tags: Numerology