Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று திடீர் பண வரவு அல்லது வெற்றியை எதிர்பார்க்கலாம்... (மே 03, 2022)

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று திடீர் பண வரவு அல்லது வெற்றியை எதிர்பார்க்கலாம்... (மே 03, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | மே 05 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்...

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வார்த்தைகளை வைத்து பிழைப்பு நடத்தி வருபவர்களுக்கு இன்றைய நாள் சவால் மிகுந்ததாக இருக்கும். ஒரு போட்டியில் நுழைவதற்கு முன்பாக உங்கள் ஆசிரியர் அல்லது பயிற்சியாளரின் மீது நம்பிக்கை வைத்து அவர்களது அறிவுரையை கேட்டுக் கொள்ள வேண்டும். இன்று சொத்து வாங்குவது அல்லது விற்பனை செய்வது என இரண்டுமே சுமூகமாக நடைபெறும். கட்டுமானம், வேளாண்மை, புத்தக விற்பனை, மருந்து விற்பனை, நிதி நிறுவனம் ஆகிய தொழில்கள் மீண்டு வரும்.

அதிர்ஷ்ட நிறம் - பீச்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - பிச்சைக்காரர்களுக்கு வாழைப்பழம் தானமாக வழங்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஆவணங்களில் உங்கள் அறிவை செயல்படுத்துவதற்கான அழகிய நாள் இதுவாகும். ஆகவே போட்டிகளில் பங்கேற்கலாம். சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் முழுமை அடையும். உங்களை அவமதிக்கும் ஒருவரை நீங்கள் சந்திக்க நேரிடலாம். ஆகவே, கவனமுடன் இருக்கவும். கடந்த கால நட்புகளைப் பயன்படுத்தி அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்கான நாள் ஆகும்.

அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவிலில் பால் அல்லது எண்ணெய் தானம் செய்யவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் திறமை, அறிவு, திறன்கள் போன்றவற்றை வெளிப்படுத்துவதற்கு சிறந்த நாளாகும். பணி நியமனங்கள் உங்களை வரவேற்க தயாராக இருக்கும். உங்கள் அறிவு மற்றும் பேச்சை பார்த்து பிறர் ஈர்க்கப்படுவார்கள். இன்று எடுக்கக் கூடிய முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று செய்யும் முதலீடுகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - பணிப்பெண்ணுக்கு குங்குமப்பூ தானமாக கொடுக்க வேண்டும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நேர மேலாண்மை மிகச் சரியானதாக இருக்க வேண்டும். ஆகவே, யாரை சந்திப்பதாக இருந்தாலும் சரியான முறையில் தயாராக இருக்கவும். எதிர்கால பலன்களுக்கான விதைகளை இன்றைக்கு தூவ வேண்டும். அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் இருப்பவர்கள் பயணம் செய்வது நல்லதல்ல. இன்றைக்கு அசைவ உணவுகளை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சைக்காரர்களுக்கு கட்டாயம் போர்வை வழங்க வேண்டும்.

#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சுற்றியுள்ள அனைவரையும் உங்கள் சிரிப்பால் கவர்ந்து இழுப்பீர்கள். உங்கள் செயலுக்கு ஏற்ற அங்கீகாரம் மற்றும் பலன்களை பெறுவதற்கான நாளாகும். நண்பர் அல்லது உறவினர் யாரேனும் உங்களிடம் அவசர உதவி கேட்கக் கூடும். அவர்களுக்கு நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும். வங்கி சேவைகளில் இருப்பவர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5

தானம் - பச்சை நிற காய்கறிகளை தானம் செய்யவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பயணம் செய்வது, ஊடகத்தை எதிர்கொள்வது, வெற்றியை கொண்டாடுவது போன்றவற்றுக்கு சிறந்த நாள் ஆகும். குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள். விசாவுக்காக காத்திருக்கிறீர்கள் என்றால் நல்ல செய்தி வரும். தொழில் செய்வதற்காக புதிய இடத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு இனிப்புகள் வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வழக்கு சார்ந்த விஷயங்களில் புத்திக்கூர்மையுடன் செயல்பட வேண்டும். விளையாட்டு மற்றும் கல்வி சார்ந்த விஷயங்களில் வெற்றி கிடைக்க மூத்தவர்காளின் ஆசிர்வாதம் தேவை. எதிர் பாலினத்தவர் மூலமாக இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க கூடும். அமைதியாகவு, கனிவாகவும் பேசினால் வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - கோவிலில் குங்குமம் தானமாக கொடுக்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பெரும் முடிவுகளை எடுக்கும்போது சற்று நிதானத்துடன் செயல்படவும். வெற்றியை அடைவதற்கு சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதே சமயம், நல்ல நேரம் இருப்பதால் அதற்கான பலன் கிடைக்கும். பெரிய அளவில் அறிவை திரட்டிக் கொள்ள இன்று அதிக நேரம் செலவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - பிச்சைக்காரர்களுக்கு சிட்ரஸ் பழங்கள் வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நிறைய பாராட்டுக்கள் கிடைக்கும். வளர்ச்சி பெரிய அளவில் இருக்கும். திடீர் பண வரவு அல்லது வெற்றியை எதிர்பார்க்கலாம். விளையாட்டு வீரர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு இன்று நாள் உகந்ததாக இருப்பதால் ஆவண நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். நடிகர்கள், ஆடிட்டர், ஆசிரியர் போன்றவர்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - வீட்டு பணிப்பெண் அல்லது பிச்சைக்காரர்களுக்கு மாதுளம்பழம் தானம் செய்ய வேண்டும்.

மே 03 அன்று பிறந்த பிரபலங்கள் : வி.கே.கிருஷ்ணா மேனன், உமா பாரதி, அருணா இரானி, அசோக் கெலாட், ரகுவர் தாஸ்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி