Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (28 ஜூலை 2022) ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யலாம்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (28 ஜூலை 2022) ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யலாம்..!

Numerology

Numerology

Numerology | ஜூலை 28-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் சூரியனைப் போல் பிரகாசிப்பீர்கள். சிலர் தகவல் தொடர்புத் திறனை வெளிப்படுத்தி உலகை வெல்லும் நாள். அலுவலகத்தில் நீங்கள் மற்ற குழுக்களுடன் ஒத்துழைக்க முயற்சிக்க வேண்டும். இன்று சொத்துக்களில் முதலீடு செய்ய, நேர்காணல்களில் கலந்து கொள்ள நல்ல நாள். இன்று நீங்கள் சகல வசதிகளையும் அனுபவிப்பீர்கள், குறிப்பாக பணம் சம்பாதிப்பது அல்லது இலக்கை அடைவது எளிதாக இருக்கும். வெற்றியை அடைவதற்கு விநாயகப் பெருமான், சூரிய பகவானையும் வழிபடுங்கள். விளையாட்டு வீரர்கள் வெற்றியுடன் வீட்டிற்கு வருவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சொத்து பிரச்சனைகள் இன்று குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் ஒரு முடிவுக்கு வரும். இன்று நீங்கள் சொத்தை வாங்குவதை விட, ஒரு சொத்தை விற்பது நல்லது. இன்று சூரிய அஸ்தமனத்திற்கு முன் முக்கியமான பணிகளை செய்து முடிக்க வேண்டியது அவசியம்.

அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள் மற்றும் நீலம்
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
அதிர்ஷ்ட எண்: 1

தானம்: கோவிலில் செப்பு கலசத்தை தானம் செய்யுங்கள்

#எண் 2. (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

இன்று தியானம் செய்து உங்கள் நாளை தொடங்குங்கள். உங்கள் நாள் சிறப்பாக இருக்க சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும். அலுவலகத்தில் இராஜதந்திர அணுகுமுறையும் இன்று நன்றாக வேலை செய்யும். உங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவழிக்க இன்று ஒரு சிறந்த நாள். முதலீட்டின் மீதான வருவாய் சிறப்பாக இருக்கும். மின்னணு,மருந்துகள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி, சூரிய சக்தி, வேளாண்மை, திரவங்கள் மற்றும் இரசாயனங்கள் உள்ளிட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் வெள்ளை
அதிர்ஷ்ட நாள்: திங்கள் கிழமை
அதிர்ஷ்ட எண்: 2
தானம்: ஏழைகளுக்கு தயிர் தானமாக கொடுங்கள்

#எண் 3: (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

நம்பிக்கை உங்கள் உள்ளத்தில் உள்ளது, எனவே வெற்றி வெகு தொலைவில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்றைய நாளை உங்கள் குரு மற்றும் அம்மாவின் ஆசீர்வாதத்துடன் தொடங்கவும். மாணவர்களுக்கு வெற்றி நிறைந்த நாள். உங்கள் முயற்சிகள் அங்கீகரிக்கப்படும் ஆனால் உங்கள் வழிகாட்டிக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள். உங்கள் துணையை ஈர்க்க இன்று ஒரு சிறந்த நாள், உங்கள் காதலை இன்று கூறினால் வெற்றி நிச்சயம். இன்று நீங்கள் அரசியல் அல்லது அரசு அதிகாரியாக இருந்தால் வெகுஜனங்களின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். குரு கிரகத்தின் பலத்தை அதிகரிக்க பெண்கள் மஞ்சள் நிற உணவை சமைத்து குடும்பத்திற்கும் பரிமாற வேண்டும். நெற்றியில் சந்தனம் வைத்து கொள்வது பல நன்மைகளை கொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்கள்: 3 மற்றும் 1
தானம்: கோவிலில் சந்தனம் தானம் செய்யுங்கள்

#எண் 4: (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவதால் உங்கள் குழப்ப நிலை நீங்கும். அலுவலகத்தில் இன்றைய நாள் திருப்தியுடன் முழுமையடையும். நினைவில் கொள்ளுங்கள், இன்று முதலீடு செய்யப்படும் பணம் ரகசியமாக இருக்க வேண்டும். ஆவணங்களை மதிப்பாய்வு செய்வதில் கவனம் தேவை. ஏற்றுமதி இறக்குமதிகளை கையாள்வதில் கவனமாக இருங்கள், உங்கள் மனம் சொல்வதை கேளுங்கள். தனிப்பட்ட உறவுகள் ஒரு உணர்ச்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்தும். எனினும் இது யாரையாவது காயப்படுத்தக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள். சிட்ரஸ் பழங்களை சாப்பிடுங்கள். தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய் கிழமை
அதிர்ஷ்ட எண்: 9
தானம்: விலங்குகளுக்கு உணவு தானம் செய்யலாம்.

#எண் 5: (நீங்கள் 5, 14 , 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வாழ்க்கையை வளப்படுத்த இன்று பணத்தை செலவிடுவீர்கள். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நீங்கள் வளர்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்களது கவர்ச்சியான ஆளுமை திறன் மூலம் மற்றவர்களிடம் உன்னதமான தோற்றத்தை ஏற்படுத்துவீர்கள். உங்கள் சுதந்திரத்தை நியாயமற்ற முறையில் பயன்படுத்தாமல் கவனமாக இருங்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நேரம் செலவிடுங்கள். கட்டுமானம், ஊடகம், வெளிநாட்டு பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் விளையாட்டு துறைகளில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் லாபம் தரும். இன்றைக்கு மது மற்றும் அசைவ உணவுகளை தவிர்க்கவும். சொத்து தொடர்பான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும். விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட நாள்: புதன்
அதிர்ஷ்ட எண்: 5
தானம்: துளசி செடி தானம் செய்யுங்கள்.

#எண் 6: (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

தனிப்பட்ட உறவுகளில் ஒரு வகையான மன அழுத்தம் இருக்கும், ஆனால் இது காலப்போக்கில் மட்டுமே சரியாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பணம் செலவு செய்வதில் கட்டுப்பாடு வேண்டும். பெற்றோர்கள் கூறுவதை கேட்டு நடந்தால் வெற்றி நிச்சயம். குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெற நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். அலுவலக மீட்டிங், டீலிங், ஹோஸ்டிங், மார்க்கெட்டிங் மற்றும் அலுவலகத்தில் விளக்கக்காட்சிகளை வழங்குவதற்கான நேரம் இன்று. அரசாங்க டெண்டர்களில் ரிஸ்க் எடுக்க உங்களுக்கு போதுமான அதிர்ஷ்டம் இருக்கும் என்பதால் துணிந்து எடுக்கலாம். துணி, நகைகள் வாங்க, வாகனங்கள், கைபேசி, வீடு அல்லது ஒரு குறுகிய பயணத்தை திட்டமிடுங்கள். பங்குச்சந்தை முதலீடு சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
தானம்: ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யலாம்.

#எண் 7: (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சமூக தொடர்புகள் காரணமாக வெற்றிக்கான அதிக வாய்ப்பு உள்ளது. வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். வாழ்க்கை ஏற்ற இறக்கங்களுக்கு இடையே ஊசலாடும், நிதானமாக செயல்படுங்கள். வழக்கறிஞரின் ஆலோசனையை பெறுவது பணத்தை சரியான வழியில் சேமிக்க உதவும். மென்பொருள் தொடர்பான வணிக ஒப்பந்தங்கள் மிகவும் வெற்றிகரமாக இருக்கும். திருமண யோசனைகள் இன்று நிறைவேறும். சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் செய்வதன் மூலம் செல்வ செழிப்பை பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 7
தானம்: கோவிலுக்கு எண்ணெய் தானம் செய்யுங்கள்

#எண் 8: (நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் காதல் உறவு இன்று அதிர்ஷ்டமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். நீங்கள் எங்கு சுமூகமான பரிவர்த்தனைகளை விரும்புகிறீர்களோ அங்கு பணத்தின் சக்தியைப் பயன்படுத்துங்கள். செல்வாக்கு மிக்கவர்கள் அல்லது பண பலத்தை பயன்படுத்தி சட்ட வழக்குகள் தீர்க்கப்படும். இருப்பினும் வணிக ஒப்பந்தங்களை முறியடிக்க இன்று சிறந்த நாள். மாணவர்கள் குறிக்கோளுக்காக வேலை செய்ய நேரத்தை ஒதுக்க வேண்டும். நீங்கள் உயர்ந்த ஞானத்தைக் கொண்டிருப்பதால் உங்கள் எல்லா முடிவுகளும் சரியானதாக இருக்கும். குறிப்பாக விளையாட்டு வீரர்கள் இன்று சாதனை படைப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
தானம்: ஏழைகளுக்கு காலணி தானம் செய்யுங்கள்

#எண் 9: (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று தகவல்தொடர்பு உங்கள் பலமாகும். தம்பதிகள் எதிர்காலத்தை திட்டமிட ஒரு அழகான நாள். அரசு டெண்டர்கள், சொத்து ஒப்பந்தங்கள், படிப்பு, மருத்துவம் சுமுகமாக இருக்கும். மென்பொருள், அறிவியல், இசை, ஊடகம் அல்லது கல்வித் துறையில் உள்ளவர்களுக்கு இன்று சிறப்பான நாள். இளம் அரசியல்வாதிகள் மற்றும் இளம் கலைஞர்களுக்கு இன்று புதிய பதவிகள் வழங்கப்படும். இசைக்கலைஞர்களின் பெற்றோர் இன்று தங்கள் குழந்தைகளால் பெருமைப்படுவார்கள். மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் வெகுமதிகளைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9
தானம்: குழந்தைகளுக்கு ஆப்பிள் தானம் செய்யுங்கள்

ஜூலை 28 அன்று பிறந்த பிரபலங்கள்: ஹுமா குரேஷி, தல்கீர் சல்மான், ஆயிஷா ஜுல்கா, காசு பிரம்மானந்த ரெட்டி, கிருஷ்ண வம்சி
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி