தபாலில் வீடு தேடி வரும் பழனி கோயில் பிரசாதம் - தமிழக அரசு அரசாணை

பழனி முருகன் கோவில்

பழனி பஞ்சாமிர்ததிற்கு அண்மையில் புவிசார் குறியீடு கிடைத்தது.

 • Share this:
  250 ரூபாய் பணம் செலுத்தினால் தபால் மூலம் பழனி பஞ்சாமிர்தம் வீட்டுக்கே அனுப்பிவைக்கும் திட்டம் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உலக புகழ்பெற்ற பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பஞ்சாமிர்ததிற்கு அண்மையில் புவிசார் குறியீடு கிடைத்தது.

  இந்நிலையில் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "ஆன்லைன் மூலம் 250 ரூபாய் பணம் செலுத்தினால் அரைக் கிலோ எடை கொண்ட பஞ்சாமிர்தம், முருகர் புகைப்படம் மற்றும் இயற்கையான முறையில் தயார் செய்யப்பட்ட திருநீறு வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: