Home /News /spiritual /

Putrada Ekadashi : புத்ரதா ஏகாதசியின் முக்கியதுவமும் விரதமுறைகளும்!

Putrada Ekadashi : புத்ரதா ஏகாதசியின் முக்கியதுவமும் விரதமுறைகளும்!

Putrada Ekadashi 2022 | ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடிக்கும் எவரும் விரதம் அனுஷ்டிக்கலாம். ஆனால் குழந்தை பெற விரும்புவோருக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாரம்பரிய நம்பிக்கைகள் தெரிவிக்கின்றது. எனவே, குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, புத்திரதா ஏகாதசி விரதம் என்று குறிப்பிடுகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
    ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடிக்கும் எவரும் விரதம் அனுஷ்டிக்கலாம். ஆனால் குழந்தை பெற விரும்புவோருக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாரம்பரிய நம்பிக்கைகள் தெரிவிக்கின்றது. எனவே, குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, புத்திரதா ஏகாதசி விரதம் என்று குறிப்பிடுகின்றனர்.

    ஒரு வருடத்தில் 24 முறை ஏகாதசி விரதம் வருகிறது. அதில் ஒவ்வொரு திதிக்கும் ஒரு குறிப்பிட்ட பெயர் உள்ளது.
    உதாரணமாக, பௌஷ் மாதத்தில் வரும் சுக்ல பக்ஷம் அதாவது வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி பௌஷ் புத்ராதா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பௌஷ் பொதுவாக கிரிகோரியன் புத்தாண்டுடன் ஒத்துப்போகிறது.

    இந்த ஆண்டு, பௌஷ் ஏகாதசி விரதம் ஜனவரி 13ஆம் தேதியான இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த புத்ரதா ஏகாதசி நேற்று ஜனவரி 12 மாலை 4:49 மணிக்கு தொடங்கி ஜனவரி 13 ஆம் தேதியான இன்று இரவு 7:32 மணிக்கு முடிவடைகிறது.

    பௌஷ் புத்ரதா ஏகாதசி 2022 விரதத்தின் முக்கியத்துவம்:

    ஒவ்வொரு ஏகாதசி திதிக்கும் ஒரு தனிப்பட்ட பெயர் உண்டு.
    பௌஷ் புத்ராதா ஏகாதசி மார்கழியின் கடையில் வரக்கூடியது.
    ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடிப்பவருக்கும் குழந்தை பெற விரும்புவோருக்கும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விரதமாகும். குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் உடனே புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால்தான் இந்த ஏகாதசியை புத்திரதா ஏகாதசி விரதம் என்று குறிப்பிடுகின்றனர்.

    மேலும் படிக்க... Pongal 2022 : பொங்கல் எப்போது கொண்டாடப்படுகிறது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...

    ஏகாதசி விரத முறை:

    இந்த ஏகாதசி விரதம் பாரம்பரியமாக மூன்று நாட்கள் நீடிக்கும்.
    இது தசமி திதி இரவில் தொடங்கி, ஏகாதசி திதியில் தொடர்ந்து துவாதசி திதியில் காலையில் முடிவடையும். பக்தர்கள் பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்து ஏகாதசி திதியில் அதிகாலையில் எழுந்துவிட வேண்டும்.  இருப்பினும், சில பக்தர்கள் துவாதசி திதியில் விரதம் இருக்கும் வரை ஏகாதசி திதியில் இரவு முழுவதும் விழித்திருப்பார்கள்.

    அந்த சமயத்தில் நாள் முழுவதும் விஷ்ணு பகவானின் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும். அவரது கோவிலுக்கு சென்று பரமபத வாசலை கடந்து வந்திருக்கும் பெருமாளை தரிசிக்க வேண்டும்.
    அடுத்த நாள் நிறைய காய்கறிகள் கூட்டு சேர்த்து செய்த உணவை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்வார்கள். அன்று வயதானவர்களுக்கு உணவு தானம் செய்யலாம்.

    பலன்கள்

    இந்த விரதத்தை கடைப்பிடித்தால் பக்தர்கள் மோட்சத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை. அதை தவிர, மகிழ்ச்சியான வாழ்க்கை, இறைவனின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும்.
    மறுமையில் பிறப்பில்லா வாழ்வு கிடைக்கும்.  இதுவே பௌஷ் புத்ரதா ஏகாதசியின் சிறப்பும் கூட.

    மேலும் படிக்க... Pongal 2022 : போகி ​பண்டிகையின் சிறப்புகளும் பூஜை செய்யும் முறைகளும்!
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Vaikunda ekadasi

    அடுத்த செய்தி