Home /News /spiritual /

பாவங்களில் இருந்து விமோசனம் தரும் ஏகாதசி விரதம் - பாப மோசனி விரதத்தின் கதை, தேதி மற்றும் நேரம்

பாவங்களில் இருந்து விமோசனம் தரும் ஏகாதசி விரதம் - பாப மோசனி விரதத்தின் கதை, தேதி மற்றும் நேரம்

விஷ்ணு

விஷ்ணு

Papmochani Ekadashi 2022 | பாப மோசனி ஏகாதசியில் விரதம் அனுசரிப்பது மிகவும் அனுகூலமாகக் கருதப்படுகிறது, விரதம் அனுஷ்டிக்கும் பக்தர்களின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன என்றும் இந்த ஏகாதசியில் விஷ்ணு பகவானை வணங்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திதியைக் குறிக்கும், அது வளர்பிறை மற்றும் தேய்பிறை என்று மாதத்துக்கு இரண்டு முறை வரும். திதிகளில் விசேஷமானது ஏகாதசி திதி. பௌர்ணமி மற்றும் அமாவாசைக்கு அடுத்த 11 வது நாள் ஏகாதசி திதியாகும். ஏகாதசி திதி பற்றி பலரும் அறியாத பல ரகசியங்கள் உள்ளன. அதில் ஒன்று தான், தமிழ் வருடத்தின் 24 ஏகாதசி திதிகளில் கடைசியாக வரும் பாப மோசனி ஏகாதசி. 2022 ஆம் ஆண்டில், ஆங்கில காலண்டரின் அடிப்படையில், வரும் மார்ச் 28 ஆம் தேதி பாப மோசனி ஏகாதசி திதி வருகிறது. இதைப் பற்றி மேலும் விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம்...

பாப என்பது பாவ செயல்களைக் குறிக்கும் மோசனி என்பது விடுதலை, பாவத்திலிருந்து விடுவித்தல், அல்லது பாவத்தை நீக்குவது என்ற அர்த்தம் கொண்டதாகும்..

இதன் அடிப்படையில், பாப மோசனி ஏகாதசியில் விரதம் அனுசரிப்பது மிகவும் அனுகூலமாகக் கருதப்படுகிறது. விரதம் அனுஷ்டிக்கும் பக்தர்களின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன என்றும் இந்த ஏகாதசியில் விஷ்ணு பகவானை வணங்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

பாப மோசனி விரதத்தின் பின்னே இருக்கும் சாபத்திலிருந்து விமோசனம் பெற்ற கதை

எல்லா விரதங்களுக்கும், பூஜை விதிகளுக்கும் ஒரு கதை இருக்கும். மேதாவி என்றொரு முனிவர் சிவபெருமானின் தீவிர பக்தராக தவம் செய்து கொண்டிருந்தார். முனிவர் தவம் செய்த காட்டில் அழகும் மணமும் நிறைந்த மலர்களால் சூழப்பட்டிருந்தது.தேவர்களின் தலைவரான இந்திரனும், அப்சரஸ்களும் அடிக்கடி அந்த காட்டிற்கு வந்து சென்றனர். அப்சரஸ்கள் சிலர் மேதாவியின் தவத்தை கலைத்து, கவனத்தை திசை திருப்ப பலமுறை முயன்றனர். ஆனால் யாருமே வெற்றி பெறவில்லை.அதில், மஞ்சுகோசா என்றார் அப்சரஸ் முனிவரின் கவனத்தைத் திசை திருப்ப பல வழிகளில் முயன்றார்.

ஆனால் அவரது தபஸ்வியின் சக்தியால் அவளால் அவரை நெருங்கக் கூட முடியவில்லை. ஆனால், தீவிரமான முயற்சிக்கு பிறகு, முனிவரை தன்வசப்படுத்தி விட்டார் அப்சரஸ். கிட்டத்தட்ட 57 ஆண்டுகள் அப்சரசின் கட்டுக்குள் இருந்த முனிவர் ஒரு வழியாக சுயநினைவு பெற்றார். நிலைமையை உணர்ந்து கடும்கோபம் அடைந்த முனிவர், மஞ்சுகோசாவிற்கு அவர் அருவருப்பான தோற்றம் கொண்ட பெண்ணாக மாற சபித்தார்.

மேலும் படிக்க... Putrada Ekadashi : புத்ரதா ஏகாதசியின் முக்கியதுவமும் விரதமுறைகளும்!

அதே போல, தவம் இருக்க முடியவில்லை என்ற குற்ற உணர்வும் ஏற்பட்டது. இருவருக்குமே தங்களின் பாவத்தில் இருந்து விடுபட, பாப மோசனி விரதம் கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதன் அடி, இருவரும் விரதமிருந்து, தங்கள் பாவங்களில் இருந்து விமோசனம் பெற்றனர்.

பாபமோசனி ஏகாதசி விரதத்தின் தேதி மற்றும் நேரம்

பாப மோசனி ஏகாதசி வரும் திங்கட்கிழமை, மார்ச் 28, 2022 அன்று வருகிறது. ஆனால், முதல் நாளே, அதாவது மார்ச் 27 ஆம் தேதி மாலையே ஏகாதசி திதியின் நேரம் தொடங்கிவிடுகிறது.

பாப மோசனி ஏகாதசி நேரம்:

  • ஏகாதசி திதி ஆரம்பம் தேதி மற்றும் நேரம் - மார்ச் 27, 2022 மாலை 06:04 மணி

  • ஏகாதசி திதி முடிவடையும் தேதி மற்றும் நேரம் - மார்ச் 28, 2022 மாலை 04:15 மணி


பாப மோசனி விரதத்தை கடைபிடிப்பது எப்படி:

பொதுவாக ஏகாதசி நாளன்று, எதுவும் சாப்பிடாமல் நாள் முழுவதும் விரதம் இருப்பார்கள் அல்லது ஒரு வேளை உணவு சாப்பிடுவார்கள். அதே போல, பாப மோசனி விரதத்தை கடைபிடிக்க, நாள் முழுவதும் நீங்கள் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். விஷ்ணுவிற்கு பூக்கள், துளசி கொண்டு அர்ச்சித்து பூஜை செய்ய வேண்டும். இந்த ஏகாதசி அன்று, விஷ்ணு ஆலயங்களில் சிறப்புப் பூஜைகள் மற்றும் பஜனைகள் நடைபெறும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட, செல்வம் மற்றும் செழிப்புடேன் வாழ, பாவங்கள் போக்க விஷ்ணு பூஜை செய்யலாம்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Lord Vishnu, Temple

அடுத்த செய்தி