இன்று பங்குனி வளர்பிறை சதுர்த்தி விரதம்... விநாயகர் பாடல்களை கேட்டால் நல்லது...
இன்று பங்குனி வளர்பிறை சதுர்த்தி விரதம்... விநாயகர் பாடல்களை கேட்டால் நல்லது...
விநாயகர்
chathurthi viratham | பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி..
முழு முதல் கடவுள் என விநாயகரை போற்றுவது தர்ம சாஸ்திரமாகும். எந்த செயலை தொடங்கும் போதும் விநாயகருக்கு பூஜை செய்வது மற்றும் ஹோமம் செய்வதாக இருந்தாலும் அதிலும் விநாயகர் தான் முதன்மையானவர். எந்த ஒரு தொழில் மற்றும் வியபாரம் தொடங்குவதற்கான கணக்கு ஆரம்பிக்கும் போதும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பதே விநாயகருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமாகும்.
அதிலும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது.
சதுர்த்தி என்றால் என்ன?
பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். இந்த சதுர்த்தி திதியானது விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும். எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கடஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதமாகும்.
சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் பலன்கள்:
இந்த சங்கடஹர சதுர்த்திவிரதத்தை கடைபிடிப்பதால் நோய்கள் குணமடைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மேலும் சதுர்த்தி தினத்தில் சந்திரனை ஆட்டிப் படைத்தவர் விநாயகப் பெருமான். எனவே சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்குபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது என்பது நம்பிக்கை.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.