கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கருப்பத்தூரில் சிம்மபுரீஸ்வரர் சமேத சுகந்த குந்தளாம்பிகை கோவில் காவிரி கரையோரம் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேல் மிகவும் பழமை வாய்ந்த காவிரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த கோவிலில் பங்குனி பெருந்திருவிழாவினை முன்னிட்டு இன்று தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
சுவாமி உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். குளித்தலை திமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.
இதில், லாலாபேட்டை, திம்மாச்சிபுரம், குளித்தலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் திருவிழாவை முன்னிட்டு லாலாபேட்டை, குளித்தலை காவல் நிலையம், குளித்தலை போக்குவரத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.