கன்னியாகுமரியில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா தொடங்கியது..
கன்னியாகுமரியில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா தொடங்கியது..
ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா
Kanniyakumari | குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 15ஆம் தேதி புகழ்பெற்ற ஆறாட்டு வைபவம் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஆலயங்களுள் ஒன்றானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில். இந்தியாவில் உள்ள 108 வைணவ திருத்தலங்களுள் 76-வதாக போற்றபடுவதும் 13 மலை நாட்டு திருப்பதிகளில் இரண்டாவது ஆலயமானதாகவும் கருதப்படும் இந்த ஆலயத்தில் மூலவர் 22அடி நீளமும் 16008 சாளை கிராமங்கள் உள்ளடக்கிய கடுக்கரை திருப்படிமமாக அமையபட்டதாகும்.
இந்த ஆலயத்தில் வருடத்தில் ஐப்பசி மற்றும் பங்குனி மாதங்களில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெற்று ஆறாட்டு வைபவத்துடன் நிறைவு பெறும். இதற்காக கொடியேற்றக்கான கயிறு ஆற்றூர் பள்ளிக்குழிவிளை தர்மசாஸ்தா ஆலயத்திலிருந்து எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த வருடமும் ஆற்றூர் பள்ளிக்குழிவிளை தர்மசார்தா ஆலயத்திலிருந்து கொடிக்காக கயிறு கொண்டுவரபட்டு பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஆலயத்தில் திருப்பணி நடைபெறுவதால் புதிய கொடிமரம் அமைக்கபட்டபிறகும் தற்காலிகமாக அமைக்கபட்ட கொடிமரத்தில் ஆலய தந்திரி கல்பமங்கலத்து மாத்தூர் மடம் சங்கர நாராயணரூ கொடியேற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். இந்த ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோவிலில் 5ஆம் திருவிழாவில் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதையடுத்து வரும் 15ஆம் தேதி புகழ்பெற்ற ஆறாட்டு வைபவம் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் மூவாற்று முகத்தில் நடைபெறுகிறது. வரும் ஜூலை மாதம் ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.