முகப்பு /செய்தி /ஆன்மிகம் / பங்குனி பெருவிழா: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தேரோட்டம்

பங்குனி பெருவிழா: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தேரோட்டம்

யிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தேரோட்டம்

யிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தேரோட்டம்

Mylapore Kabaliswarar Temple | பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தேரோட்டம் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலை சுற்றி 68 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நாளை மதியம் 3 மணிக்கு அறுபத்து மூவர் விழா நடக்கிறது. இதில் வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு காட்சி தருகிறார். தேரோட்டம் மற்றும் 63 நாயன்மார்கள் வீதி உலாவையொட்டி 2 நாட்களும் விழா முடியும் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 9 ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. 9ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 10ம் தேதி காலையில் வெள்ளி சூரிய வட்டம் நிகழ்ச்சியும், இரவு வெள்ளி சந்திர வட்டம் நிகழ்ச்சி நடந்தது.

11ம் தேதி காலையில் அதிகார நந்தி காட்சி நிகழ்ச்சி, 13ம் தேதி இரவு வெள்ளி ரி‌ஷப வாகன காட்சி நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து இன்று  தேரோட்டம் நடைபெற்றது.  இன்று காலை 6.30 மணிக்கு இறைவன் திருத்தேருக்கு எழுந்தருளினார். 7.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் படித்து இழுத்தனர்.

17ம் தேதி காலையில் ஐந்திருமேனிகள் விழாவும், மாலையில் இறைவன் இரவலர் கோல விழாவும் நடக்கிறது. 18ம் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று நடந்த தேரோட்டத்தையொட்டி 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

First published:

Tags: Chennai, Mylapore Temple