Home /News /spiritual /

கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழா இன்று தொடங்கியது...

கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழா இன்று தொடங்கியது...

கும்பகோணம் நாகேஸ்வரஸ்வாமி கோவில்

கும்பகோணம் நாகேஸ்வரஸ்வாமி கோவில்

Kumbakonam Nageshwara Swamy Temple | கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

தேவாரப்பாடல் பெற்றதும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு , ஆதிசேஷன் வழிபட்டு, இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்ற தலமாக விளங்கும் கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிரகன்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்ற தலமாகும் . ஆதிசேஷன் இங்கு மாசி மாத மகா சிவராத்திரி நாளில் முதல் காலத்தில் வழிபாடு செய்து இழந்த தன் சக்தியை பெற்றார்.  சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் சூரிய பகவானின் ஒளிபடும் தலமாகவும் இது விளங்குகிறது.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இவ்வாலயத்தில் பங்குனி உத்திர பிரமோற்சவம் பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதே போன்று இவ்வாண்டுக்கான விழா, இன்று காலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம் பெருமான் பொறிக்கப்பட்ட திருக்கோடி மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க, ஏற்றிப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது.

கொடியேற்றம்


மேலும் படிக்க... காரடையான் நோன்பு எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்....

பங்குனி உத்திரம் எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...

இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை என வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருநாளான 10ம் தேதி ரிஷப வாகன ஓலைச்சப்பரமும், 7ஆம் திருநாளாக 15ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், ஒன்பதாம் நாள் விழாவாக 17ம் தேதி திருத்தேரோட்டம், பத்தாம் நாள் விழாவாக 18ம் தேதி பஞ்சமூர்த்திகளும் மகாமக குளக்கரையில் எழுந்தருள பங்குனி உத்திர தீர்த்தவாரி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது...
Published by:Vaijayanthi S
First published:

Tags: Thanjavur

அடுத்த செய்தி