திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டு கோவில் கோபுரங்கள் பதுமைகள் ஆகியவை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாலை நன் மங்கள இசை மற்றும் விளக்கேற்றுதல் நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேகத்திற்கான வேள்விச் சாலை நிகழ்ச்சிகள் துவங்குகிறது.
எட்டுக்கால வேள்விகளுடன் நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோவில் சுற்றுப்புறகாரத்தில் உள்ள கோவில்கள் கோபுரங்கள் சுற்றுச்சூழல் பெருமைகள் ஆகியவை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முன்னதாக இன்று காலை தங்க விமானம், ராஜகோபுரம்,வடக்கு தெற்கு கோபுரங்கள், விமானங்கள், மலைக்கோவில் உள் திருச்சுற்று கோவில்கள் உள்ளிட்ட 50 கோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு நவதானியங்கள், நவரத்தினங்கள் ஆகியவற்றுடன் கோபுரங்களில் பொருத்தும் பணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கோவில் இணை ஆணையர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் பழனி கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கு பெறுவதற்கான இணையதள பதிவு இன்று முதல் துவங்கியுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்யும் பக்தர்களில் இரண்டாயிரம் பேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
செய்தியாளர்: அங்குபாபு, பழனி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Palani