ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

மாமனும் மருமகனும் மருவும் மதுரை மலை - பழமுதிர்சோலைமலை திருத்தலம், வரலாறு, சிறப்பு

மாமனும் மருமகனும் மருவும் மதுரை மலை - பழமுதிர்சோலைமலை திருத்தலம், வரலாறு, சிறப்பு

பழமுதிர்சோலை

பழமுதிர்சோலை

ஆறுபடை வீடுகளில் இரு தேவியாரோடு தம்பதி சமேதராக முருகன் காட்சி தரும் ஒரே படைவீடுதான் பழமுதிர்சோலை.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அன்னை தமிழ் மூதாட்டி அவ்வையுடன், சுட்ட பழம் வேண்டுமா? சுடாதா பழம் வேண்டுமா? என்று கேள்வி கேட்டு திருவிளையாடல் புரிந்த திருத்தலம்.  வள்ளி, தெய்வானையுடன் மனங்குளிர மாமன் மாயவன் மலையில் முருகன் அமர்ந்த திருத்தலம், நாடி வரும் அடியார் உடலும் உள்ளமும் குளிர்ந்து செல்ல அருளும் மதுரை பழமுதிர்சோலைமலை முருகன் திருத்தலம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

  சைவ, வைணவ பாரம்பரியங்கள் ஒன்றிணைந்து விளங்கும் திருத்தலம், கீழே சுந்தர திருத்தோளுடன் திகழும் பரமஸ்வாமி என்னும் கள்ளழகர் ஆலயம். நூற்றியெட்டு திருத்தலங்களில் ஒன்றான திருமாலிருஞ்சோலைமலை. மேலே சிவன்மகன் சண்முகன் தன் தேவிமார் இருவரோடு அமர்ந்த சோலைமலை. அங்கு நடந்த சுவையான சம்பவம் ஒன்று.

  தமிழ் புகழ் பாடும் அவ்வைக்கு “தான்” என்னும் எண்ணம் சிறிது மேலோங்கியது. அவருடன் விளையாட முருகன் சிறுவனாக நாவல் மரத்தின் மேல் இருந்து அவன் விளையாட்டை துவங்கினான். நெடுதூரம் நடந்து வந்த அவ்வை அம்மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார். மேல் இருக்கும் சிறுவனை கண்ட அவ்வை பேச தொடங்கினாள்.

  முருகன்

  அவ்வை: குழந்தாய்,  சிறிது பசிக்கிறது, பழங்களை பறித்து தர முடியுமா?

  முருகன்: “ சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? ”

  அவ்வை புரியாமல் விழித்தாள்!

  அவ்வை: சுடாத பழத்தையே போடுப்பா,

  முருகன்: சுடாதா பழமா! சரி உலுப்பி விடுகிறேன், நீயே சுடாத பழமாக பார்த்து எடுத்துக்கோ!

  கீழே விழுந்த பழங்களில் மண் ஒட்டியிருந்தது, அவற்றை நீக்க அவ்வை ஊதினாள்! மேலே இருந்த முருகன்

  என்ன பாட்டி பழம் சுடுதா? என்று கேட்க, தன்னிலை உணர்ந்தாள் அவ்வை.

  முதிர்ந்த பழமாகிய அவ்வையே என்ன உன் தமிழ் பலம் உன்னையே சுடுதா? என்னும் படியாக அமைந்த கேள்வி அவ்வையை நிலைகுலைய செய்தது. சரவணனிடம் சரணடைந்தாள். முருகன் அருளால் இன்றும் ஆடி, ஆவணி மாதத்தில் பழுக்கும் நாவல் பழம், இங்கு சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கிறது.

  பழமுதிர்சோலை

  இந்த ஆலய தல விருட்ஷம் நாவல் மரம், தீர்த்தம் ஆலயத்திற்கு மேல உள்ள நூபுர கங்கை. ஆறுபடை வீடுகளில் இரு தேவியாரோடு தம்பதி சமேதராக முருகன் காட்சி தரும் ஒரே படைவீடு. மதுரை கள்ளழகர் ஆலயத்திற்கு மேலே உள்ள மலையில் உள்ளது. பல்வேறு போக்குவரத்து வசதிகள் அழகர்கோவிலுக்கு உள்ளன.

  அவ்வையுடன் உரை நிகழ்ந்த நாவல் கிளை மரம்

  Also see... தமிழ் ஞானப்பழம் நீயப்பா! பழனி திருக்கோவிலின் தல வரலாறு...!

  அங்கிருந்து சோலைமலைக்கு  செல்ல கோவில் சார்பில் கட்டண பேருந்து வசதி உள்ளது. அரைநாள் பயணத்தில் திருமால் ஆலயமும் அவன் மருகன் குமரன் ஆலயமும் தரிசிக்கும் வாய்ப்பு அளிக்கும் திருத்தலம்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Madurai, Murugan, Murugan temple