ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 07, 2023) முன்னேற்றமான நாளாக அமையும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 07, 2023) முன்னேற்றமான நாளாக அமையும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  உங்களது நெருங்கிய நண்பர் ஒருவரிடமிருந்து வரும் செய்தி உங்களை மிகவும் உற்சாகமாக வைக்கும். உங்களது மனக்கசப்புகள் இன்று தீரும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவழிக்க இன்று சிறப்பான நாள். உங்கள் பழக்கங்களை மேம்படுத்தும் முயற்சிகளில் இன்று நீங்கள் ஒரு நல்ல தொடக்கத்தை உருவாக்குவீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிளி

  ரிஷபம்:

  நீங்கள் இன்று அடக்கி வைக்க முயற்சிக்கும் உணர்ச்சிகள் முழுவதுமாகத் தணிய நேரம் ஆகலாம். நீங்கள் ஒருவருக்கு கொடுத்த கமிட்மென்ட் மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் எரிச்சலாக உணரலாம் என்றாலும் அது தற்காலிகமானதாக இருக்கலாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு இறகு

  மிதுனம்:

  நிலுவையில் இருக்கும் முடிவுகளில் இன்று மாற்றங்களை காணலாம். முக்கிய விஷயங்களில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க நேர மேலாண்மையை பின்பற்றுங்கள். அலுவலக வேலையில் விழிப்புடன் இருங்கள். சிறிது நேர ஓய்வு உங்களை புத்துணர்ச்சியாக வைக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பேட்ச்ஒர்க்

  கடகம்:

  இன்று நீங்கள் எதிர்பாராத நபர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கலாம். உங்களை கவலைக்குள்ளாக்கிய விஷயங்களில் தீர்வு கிடைத்து நிம்மதியை உணர்வீர்கள். ஒரு சிறிய பயணம் அல்லது ஓய்வு நேரத்தை திட்டமிடுவது பயனுள்ளதாக இருக்கும். உங்கள் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் சில தடைகள் இருந்தாலும் போகப்போக தடைகள் விலகும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஏலக்காய்

  சிம்மம்:

  ஒருவரின் இழப்பு இன்று உங்களுக்கு ஆதாயமாக மாறும். உங்கள் பழைய அழகை மீண்டும் இன்று பெற்றது போல புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். உங்கள் தேவைகளின் பட்டியலை சுருக்கி அத்தியாவசியங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுங்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சூரிய அஸ்தமனம்

  கன்னி:

  உங்களது நிதி நிலைமை இன்று சீராக மற்றும் சாதகமாக இருக்கும் என்று நீங்கள் கணித்திருந்தால், அதில் சில மாற்றங்கள் இருக்கலாம். தொலைதூரத்தில் வசிக்கும் நண்பருடனான சந்திப்பு உங்களை உற்சாகப்படுத்தும். சவாலான அல்லது இக்கட்டான சூழ்நிலைகளில் அமைதியாக இருப்பது நல்லது.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெள்ளை பலகை

  துலாம்:

  இன்று சில புதிய வாய்ப்புகள் உங்களை வந்தடையலாம், ஆனால் அவை சரியான பலனளிக்க இன்னும் சில காலம் ஆகலாம். அது போல கசப்பான விஷயங்களை யோசித்து மனஅழுத்தம் கொள்ளாமல் இருப்பது நல்லது. அமைதியை பேணுவது இன்றைய நாளை சுமுகமாக கடக்க உதவியாக இருக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கோபால்ட் நீலம்

  விருச்சிகம்:

  இன்று உங்கள் தேவைக்கு அதிகம் என்று தோன்றும் சில விஷயங்களை புறக்கணிப்பது அல்லது தவிர்ப்பது நல்லது. முடிவெடுக்கும் சூழலில் சரியான முடிவுகளை எடுக்க நினைவில் கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு முன்னேற்றமான நாளாக அமைய கூடும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ட்ரே

  தனுசு:

  இன்று உங்களை நோக்கி வரும் புதிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டிய காரணத்தால் வழக்கமான வேலைகள் சிலவற்றை முடிக்க முடியாமல் போகலாம். ஒரு ட்ரீட் அல்லது கிஃப்ட் உங்களை மகிழ்விக்கலாம். நீங்கள் ஆர்வமாக இருக்கும் முக்கிய விஷயங்களின் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பறவை கூட்டம்

  மகரம்:

  ஒருசில நாட்கள் எல்லா வகையிலும் மிகவும் சாதகமாக அமையும் அல்லவா.! இன்று உங்களுக்கு அது மாதிரியான ஒரு நாள். எல்லா வகையிலும் நீங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவராக உணர்வீர்கள். உங்களது மன உறுதி காரணமாக நெருக்கடி சூழல் ஒன்றை தவிர்ப்பீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு இன்டோர் பிளான்ட்

  கும்பம்:

  இன்று உங்களை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது அவசியம். இல்லை என்றால் வாக்குவாதங்கள் ஏற்பட வழிவகுக்கும். உங்களது முன்னாள் நண்பர் அல்லது காதலர் இன்று உங்களை எப்படியாவது தொடர்பு கொள்ள நினைக்கலாம். முன்பு திட்டமிட்ட சில முயற்சிகளை இன்று மீண்டும் தொடங்கலாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - முக்கிய நோட்ஸ்

  மீனம்:

  பிரபஞ்சம் உங்களுக்கென்று காட்டும் அறிகுறிகளை கவனிக்க மற்றும் அதனை அங்கீகரிக்க இன்று நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இன்று மன கவலைகள் தோன்றினாலும் அது தற்காலிகமானதே. முக்கிய பயணத்திற்கு இன்று ஏற்ற நாள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பழைய ஃபோட்டோ

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News