மேஷம்:
இன்று திடீர் கொண்டாட்டங்கள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. புதிய பார்ட்னர்ஷிப் மற்றும் முதலீட்டிற்கு உகந்த கிரக சூழ்நிலை தற்போது நிலவுகிறது. பேச்சுவார்த்தை நடத்தும் போது கொஞ்சம் பொறுமையை கடைப்பிடிக்கவும். முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அலசி ஆராயவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மனித உருவ பொம்மை
ரிஷபம்:
உணர்வு ரீதியாக கடுமையான மன அழுத்தங்களை கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்திருப்பின், தற்போது சீரான மனநிலையை பெறுவீர்கள். கடந்த கால பாரம்பரியங்கள் உங்களுக்கு தடையாக அமையலாம். மனதில் தெளிவு கிடைக்க உங்களுக்கு இன்று நீண்ட தூரம் உதவ கூடும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உங்கள் ரோல்மாடல்
மிதுனம்:
இன்றைய திட்டத்தில் ஏற்படும் மாற்றம் என்பது ஒட்டுமொத்த நாளையே மாற்றிவிடும். ஒரு நிகழ்ச்சிக்கு நீங்கள் அழைக்கப்படுவீர்கள். அங்கு புதிய நபரை சந்திப்பீர்கள். அந்த சந்திப்பு பயனுள்ளதாக அமையும். உடல் நலன் காக்க வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளி மோதிரம்
கடகம்:
ஏதேனும் புதிய விஷயங்களை தொடங்கும் முன்பாக உங்களுக்கு பதற்றம் ஏற்படலாம். ஆனால், உங்களுக்கான ஆற்றல் கிடைக்கும். சில முடிவுகளை எடுக்கும்போது உங்களுக்கு குழப்பம் உண்டாகலாம். தெளிவு கிடைக்க சில காலம் ஆகும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரோஜா செடி
சிம்மம்:
இன்றைக்கு இலக்குகளை நிறைவு செய்து ஜொலிப்பதற்கான நேரம் ஆகும். மற்றவர்களுடன் நீங்கள் போட்டி போடுவதை உணருவீர்கள். பிறரது பாராட்டு கிடைக்கும். இன்றைக்கு நீங்கள் மேற்கொள்ளும் காரியங்களுக்கு வெகு விரைவில் பாராட்டு கிடைக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சூரிய உதயம்
கன்னி:
இன்றைய பொழுது மந்தமானதாக தொடங்கினாலும், இரண்டாம் பாதியில் வேகமெடுக்கும். வழக்கமான பணிகளில் நெருக்கடியை நீங்கள் உணருவீர்கள். பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நேரத்தை உங்கள் மனதிற்கு கொடுக்கவும். மாலையில் கொண்டாட்டங்கள் நிகழும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உயரமான கட்டடம்
துலாம்:
பல ஆண்டுகளாக உங்களுக்கு இருக்கின்ற அனுபவம், சூழ்நிலையை ஆராய்ந்து முடிவு செய்ய உதவும். உங்களிடம் சிறப்பாக உள்ள ஒரு விஷயம் வெகு விரைவில் எதிரொலிக்கும். உங்களுக்கு நெருக்கமான ஒருவர் தற்போது துன்பத்தில் இருக்கிறார். அவருக்கு உங்கள் உதவி தேவைப்படலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பணப்பை
விருச்சிகம்:
உங்களை நம்பி இருப்பவர்களுக்கான பணியை செய்து கொடுப்பதுதான் உங்கள் முதல் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், இதில் தாமதம் ஏற்பட்டால் இருவருக்கும் இடையே வெறுப்புகள் உண்டாகும். சொத்து ரீதியிலான பரிவர்த்தனைகளில் பொறுமையை கடைப்பிடிக்கவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - எமரால்டு
தனுசு:
இன்றைய தினம் பற்பல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அந்த வாய்ப்புகள் சிறியதாக இருக்கலாம். ஆனால், ஆர்வத்தை தூண்டக் கூடியதாக அமையும். நிலுவையில் உள்ள விஷயங்களுக்கு நீங்கள் தீர்வு காண வேண்டும். மெசேஜ் மற்றும் அழைப்புகளுக்கு பதில் கொடுக்க வேண்டிய நேரம் இது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கோல்டன் எம்பிராய்ட்ரி
மகரம்:
இன்றைய தினம் உங்களுக்கான ஆற்றல் நன்றாக இருக்கும் நிலையில், சிறப்புக் கவனம் எதுவும் தேவைப்படாது. உங்கள் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுங்கள். நண்பரின் மூலமாக திடீர் கொண்டாட்டங்கள் வந்து சேரும். தாயின் உடல்நலன் குறித்து கவலைகள் ஏற்படலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தேனீ
கும்பம்:
நீங்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறீர்கள். யாரோ ஒருவரை மிகவும் தவறவிட்டதாக நினைத்துக் கொண்டுள்ளீர்கள். ஆனால், நீங்கள் விழித்துக் கொண்டு இப்போது உண்மையை உணர வேண்டும். உங்கள் வாழ்க்கைக்கான புதிய திசையை காட்டும் வாய்ப்பு வந்து சேரும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சணல் பை
மீனம்:
உங்கள் உணர்வுகளை நீங்கள் வெளிப்படுத்தினால், அது பிறரை காயப்படுத்தக் கூடும். அதே சமயம், மனதுக்குள் பூட்டி வைத்தால் கவலைகள் அதிகரிக்கும். ஆகவே, அதை அப்படியே விட்டுவிடவும். உங்கள் ரகசியம் தெரிந்த நெருங்கிய நண்பரிடம் ஆறுதல் கிடைக்கலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஏரி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News