ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சபரிமலை சன்னிதானத்தில் இருக்கும் 6 தசாப்தங்கள் பழமையான தபால் நிலையமும் அதன் சிறப்புகளும் ..!

சபரிமலை சன்னிதானத்தில் இருக்கும் 6 தசாப்தங்கள் பழமையான தபால் நிலையமும் அதன் சிறப்புகளும் ..!

சபரிமலை போஸ்ட் ஆப்பீஸ்

சபரிமலை போஸ்ட் ஆப்பீஸ்

Sabarimalai post | நாடு முழுவதும் முப்பத்தொன்பது இடங்களில் மட்டுமே  வெவ்வேறு தனி தபால் முத்திரைகள் உள்ளன. அதில் சன்னிதானத்தில் உள்ள இந்த தபால் நிலையமும் ஒன்று.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala, India

சபரிமலையில் ஐயப்பன் சந்நிதிக்கு மட்டும்  ஒரு தபால் நிலையம் உள்ளது. பதினெட்டாம் படி மற்றும் சபரிமலை சாஸ்தாவின் அஞ்சல் முத்திரை பதியும் கடிதப் பரிமாற்றம் இடையூறு இல்லாமல் சன்னிதானத்தில் உள்ள தபால் நிலையத்தில் தினம் தோறும் செய்யப்பட்டு வருகிறது. வரும் நவம்பர் 16ம் தேதி சன்னிதானத்தில் உள்ள இந்த தபால் நிலையம் செயல்படத் தொடங்கி அறுபது ஆண்டுகள் நிறைவடைகிறது. சன்னிதானத்தில்  தபால் நிலையத்தின் செயல்பாடு நவம்பர் 16, 1963 இல் தொடங்கியது. .1974ல் சபரிமலை அய்யப்பன் பெயரில் தபால் தலை முத்திரை  அறிமுகப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் முப்பத்தொன்பது இடங்களில் மட்டுமே  வெவ்வேறு தனி தபால் முத்திரைகள் உள்ளன. அதில் சன்னிதானத்தில் உள்ள இந்த தபால் நிலையமும் ஒன்று.

குடியரசுத் தலைவர் மற்றும் சபரிமலை சாஸ்தா ஆகியோருக்கு மட்டுமே தபால் துறையில் சொந்த பின் குறியீடு உள்ளது என்பதும் தனிச்சிறப்பு ஆகும். சன்னிதானம் தபால் நிலைய பின்கோடு 689713 ஆகும். சன்னிதானம் தபால் நிலையத்திற்கு தினமும் அறுபது முதல் எழுபது மணியார்டர்களும், நூற்றிலிருந்து நூற்றைம்பது கடிதங்களும் வருகின்றன. அதில் சபரிமலை ஐயனை  இல்லறம் புதுமனை புகு விழா மற்றும் திருமண விழாக்களுக்கு அழைப்பிதழ் அனுப்பியும் மேலும் பலர் தங்களது வருத்தங்களையும் குறைகளையும் , வாழ்க்கை துயரங்களை ஐயனுக்கு தெரிவித்துக் கொண்டும் கடிதங்கள் அனுப்புகின்றன.

தேர்வு வெற்றிக்காக மாணவர்களின் கடிதங்களும் சபரிமலை ஐயப்பன் பெயரில் வந்து சேரும். இந்த கடிதங்களை ஐய்யப்பன் சார்பில் தேவஸ்வம் செயல் அலுவலர் தபால் நிலையத்தில் இருந்து பெறுகிறார். சன்னிதானம் தபால் நிலையம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 முதல் ஜனவரி 20 வரை திறந்திருக்கும். அஞ்சல் மற்றும் அஞ்சல் குறியீடு இந்த மூன்று மாத காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இந்த தபால் நிலையம் விஷூ பண்டிகை ஒட்டி  10 நாட்களுக்கு திறந்திருக்கும். தபால் நிலையம் மூடும் போது அஞ்சல் முத்திரையை  பத்தனம்திட்டா  தபால் நிலையத்தில் உள்ள அஞ்சல் காணிப்பாளரின் லாக்கருக்கு மாற்றப்படும்.

சன்னிதானத்தில் பல்வேறு துறை சார்பில்  வருபவர்கள் இந்த தபால் நிலையத்தில் இருந்து அப்பம் மற்றும் அரவணை போன்ற பிரசாத பொருட்கள்  தங்களின் சொந்த வீடுகளுக்கு தபால் மூலம் இங்கிருந்து அனுப்பி வைக்கின்றனர். அலுவலகத்தில் உள்ள எம்.டி.எஸ்., ஊழியர்கள் அவற்றை தலை சுமையாக  பம்பையில் கொண்டு செல்லப்படும். போஸ்ட் மாஸ்டர் பி.எஸ். அருண், தபால்காரர் எம்.டி. பிரவீன், எம்டிஎஸ் எஸ். அஷாந்த், டி.  அருண் ஆகிய நான்கு பேர் இங்கு ஊழியர்கள் ஆக பணியாற்றி வருகிறார்கள்.

இவ்வாண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசனில் மட்டும் இதுவரை ஐயப்பனின் முத்திரை பதிவு செய்த சுமார் பன்னிரண்டாயிரம் அஞ்சல் அட்டைகள், ஆயிரம் இன்லாந்து லெட்டர், ஆயிரம் கவர்கள் வாடிக்கையாளர்கள் வாங்கி உள்ளனர். ஒரு தபால் அட்டையின் விலை ஐம்பது பைசா, ஒரு இன்லாந்து லெட்டர் இரண்டரை ரூபாய், ஒரு கவர் ஐந்து ரூபாய் என விற்பனை செய்கின்றனர். 22.11.22 என்று  வரும் கடந்த நவம்பர் 22ம் தேதி அன்று மட்டும் இந்த தபால் நிலையத்தில் இரண்டாயிரம் கார்டுகள் விற்கப்பட்டன.

பிற தபால் நிலையங்கள் உள்ளது போன்றே சன்னிதானத்தில் உள்ள  தபால் நிலையத்தில் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி வசதியும் இங்கு கிடைக்கும். கொரொனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் பக்தர்கள் வர கட்டுப்பாடு ஏற்படுத்தி இருந்த நிலையில் திருவிதாங்கூர் தேவசம் பெரும் வருவாய் இழப்பை சந்தித்த போது பக்தர்களுக்கு அப்பம், அரவணை, விபூதி உள்ளிட்ட பிரசாதங்கள் அடங்கிய தொகுப்பு சபரிமலைக்கு வர முடியாத பக்தர்களுக்கு முன்பதிவு அடிப்படையில் வீடுகளுக்கே அனுப்பி வைத்து. அந்த சேவை மூலம் தேவஸ்தானத்துக்கு  தபால் மூலம் கோடிகள் வருவாய் ஏற்படுத்தி கொடுத்த பெருமையும் இந்த தபால் நிலையத்திற்கு சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Post Office, Sabarimala