Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும் நாள்... (ஏப்ரல் 27, 2022)

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும் நாள்... (ஏப்ரல் 27, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | நிதி தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்க நல்ல நாள். உங்களுக்கான வணிக ஒப்பந்தங்கள் அல்லது அரசாங்க உத்தரவுகள் தாமதமின்றி நடக்கும் நாள்...

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் போட்டியிடும் அனைத்திலும் ஒரு போர் வீரர் போல ஆக்ரோஷமாக செயல்பட்டு வெற்றியை ருசிப்பீர்கள். கூட்டம், மேடை, நிகழ்வு உள்ளிட்டவற்றுக்கு சென்றால் அங்கே இருக்கும் மைக்கில் சென்று தைரியமாக பேசுங்கள். ஏனென்றால் உங்களின் ஆக்கப்பூர்வமான பேச்சு, மற்றவர்களிடம் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும். தம்பதிகள் மற்றும் காதலர்கள் இடையே அன்னியோன்னியம் பிறக்கும். கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், இசைக்கலைஞர்கள் உள்ளிட்டோர் இன்று தத்தம் துறையில் பெரும் புகழ் அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு மற்றும் செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9

நன்கொடைகள்: சிவப்பு துணி ஒன்றை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தர்மம் என்பது வீட்டிலிருந்து தான் தொடங்க வேண்டும் என்ற உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். எனவே உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, தேவை உள்ளவர்களுக்கு உதவ முன் வாருங்கள். பணியிடத்தில் உங்களுக்கு சீனியர் ஒருவர் உதவுவார். உறவுகள் செழிப்பாக வளர முதலில் குறைகளை கண்டறிவதே நிறுத்துங்கள். இன்று உங்கள் குழந்தைகள், உறவினர்களுடன் நேரம் செலவிடுவது, குடும்ப விழாக்களில் கலந்துகொள்வது, ஒரு சிறிய பயணத்தைத் திட்டமிடுவது போன்றவற்றால் உற்சாகமாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பிங்க்
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 2

நன்கொடைகள்: இன்று பிச்சை கேட்டு வருபவர்களுக்கு தயிர் தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வாய்ப்புகள் மூலம் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் நாள். இதுநாள் வரை நீங்கள் உழைத்தற்கான பலன் இன்று கிடைக்கும். குறிப்பாக பாடகர்கள், பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு மிகவும் நல்ல நாள். ஆடைகள், நகைகள், புத்தகங்கள், அலங்கார பொருட்கள், தானியங்கள் வாங்க உங்களுக்கு இன்று சிறந்த நாள். டிசைனர்ஸ், ஹோட்டல் உரிமையாளர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள், இசைக்கலைஞர்கள் இன்று சாதனைகளைபடைக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

நன்கொடைகள்: கோவிலில் சந்தனம் தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நிதி தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்க நல்ல நாள். உங்களுக்கான வணிக ஒப்பந்தங்கள் அல்லது அரசாங்க உத்தரவுகள் தாமதமின்றி செயல்படுத்தப்படும். விற்பனைப் பணியாளர்கள், ஐடி ஊழியர்கள், நாடக கலைஞர்கள், நடிகர்கள், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் மற்றும் நடன கலைஞர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும், திறமையால் மதிக்கப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: குழந்தைகளுக்கு மர கன்றுகளை வழங்குங்கள்

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களை மற்றவர் கடுப்பேத்தும் சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கடந்து செல்வதே இதற்கு தீர்வு. நீண்டகால பிரச்சனைகளை தீர்க்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். பங்குச் சந்தை, விளையாட்டு, நிகழ்வுகள், போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் அதிர்ஷ்டத்தை அடைய நிறைய முயற்சி வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: புதன்
அதிர்ஷ்ட எண்: 5

நன்கொடைகள்: விலங்குகளுக்கு உணவு வழங்குங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த நாள் உங்களுக்கு பொறுப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். நாளின் முடிவில் பொறுப்புகளை எளிதாக முடித்து விடுவீர்கள். இன்று நீங்கள் செழிப்போடு ஆடம்பரமாக இருக்கும் நாள். இல்லத்தரசிகள், விளையாட்டு வீரர்கள், சொத்து வியாபாரிகள், தோல் மருத்துவர்கள் பாடகர்கள், வடிவமைப்பாளர்கள், தரகர்கள், சமையல்காரர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் வளர்ச்சியை மேம்படுத்தும் புதிய வேலைகளை பெறுவார்கள். காதல் உறவால் வீட்டிற்கு மகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வைலெட்
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி
அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: கோவிலில் வெள்ளி நாணயம் தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தாய் மற்றும் வீட்டில் இருக்கும் பிற மூத்தவர்களின் ஆலோசனைகளை கவனமாக கேட்டு அதன்படி நடங்கள். பெரிதாக இருந்த இந்த பிரச்சனை இன்று மறைந்துவிடும். புதிய வாய்ப்பை எதிர் நோக்கி காத்திருங்கள், வந்தால் விடாதீர்கள். உங்களை முன்னேற விடாமல் சிலர் தடுக்க வாய்ப்பு உள்ளது, ஆனால் அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. வழக்கறிஞர், கூரியர், விமானிகள், அரசியல்வாதிகள், நாடக கலைஞர்கள், சி.ஏ., சாப்ட்வேர் தொழிலில் உள்ளவர்களுக்கு இன்றி சிறப்பு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

நன்கொடைகள்: யாருக்கேனும் காப்பர் மெட்டலின் சிறிய பீஸ்களை தானம் செய்யுங்கள்

#எண் 8 (நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுக்கு நிதி பலன்கள் அதிகமாக இருக்கும். சொத்து மற்றும் இயந்திரங்கள் வாங்குவது தொடர்பான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று பொறுப்புகள் கூடும் என்பதால் மன அழுத்தமும் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அமைதியாக இருங்கள். இன்று சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதும் அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் ஊதா
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி
அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: தேவைப்படுவோருக்கு குடை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதலிப்பவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த இன்று அருமையான நாள். உங்கள் டீமில் நீங்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பீர்கள்.கிளாமர் தொழில் மற்றும் ஊடக துறையில் உள்ளவர்கள் புகழை பெறுவார்கள். பொது மக்கள் மற்றும் மாணவர்கள் முன்னேற்றம் அடைய இந்த நாளை நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாணவர்கள், பயிற்சியாளர்கள், இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள், வடிவமைப்பாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு இன்று சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: சிவப்பு பருப்பு தானம் செய்யுங்கள்

ஏப்ரல் 27-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: மும்தாஜ் மஹால், பி.சதாசிவம், ஏ.ஆர்.முருகதாஸ், ஜோஹ்ரா செஹேகல், ஹரிஷ் ராவத்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி