ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித ஜோதிடம் - டிசம்பர் 12 முதல் 18 வரை - இந்த வாரம் எப்படி இருக்கும்.?

எண் கணித ஜோதிடம் - டிசம்பர் 12 முதல் 18 வரை - இந்த வாரம் எப்படி இருக்கும்.?

எண் கணித ஜோதிடம்

எண் கணித ஜோதிடம்

Weekly Numerology | டிசம்பர் 12 முதல் 18 வரையிலான உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

டிசம்பர் 12 முதல் டிசம்பர் 18, 2022 வரை - இந்த வாரத்திற்கு உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் உணர்ச்சிகள் உங்களுக்குச் சாதகமாக இருக்கும் திசையை நோக்கி உங்களை நகர்த்தும் என்பதால் இந்த வாரம் உங்கள் இதயம் சொல்வதை கேளுங்கள். தம்பதிகள் தங்கள் எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் மத்தியஸ்தர்களுடன் தொடர்பு கொள்வதில் இந்த வாரம் சிக்கல் இருக்கும். உங்களது IQ லெவல் உங்களது வெற்றிக்கு பங்களிக்கும். ஐடி, ஜூவல்லரி, ஏற்றுமதி, சோலார் தயாரிப்புகளின் டீலர்கள், அரசு பணிகள், மருத்துவக் கற்பித்தல் மற்றும் ஊடகத் துறையில் உள்ளவர்கள் லாபத்தை பெற முதலீட்டை ஊக்குவிக்க நினைவில் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் கிரீம்

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

அதிர்ஷ்ட எண்: 1

நன்கொடைகள்: கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் நீண்ட காலமாக இழந்த உணர்ச்சிகளை இந்த வாரம் முழுவதும் பலமுறை வெளிக்காட்ட நேரிடும். குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைப்பதன் மூலம் இந்த வாரம் உங்களுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும். வாரத்தின் முதல் நாளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுங்கள். காதல் உறவுகளில் நம்பிக்கை மற்றும் பரஸ்பர பிணைப்பு அதிகரிக்கும். இந்த வாரம் குடும்பம் மற்றும் உறவினர்களுடன் பணம் மற்றும் நேரம் செலவிடுங்கள். மேலும் குடும்ப விழாக்களில் கலந்து கொள்ள, சிறிய பயணத்தைத் திட்டமிட, பங்குகளில் முதலீடு செய்ய ஏற்ற வாரம்.

அதிர்ஷ்ட நிறம்: அக்வா

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 2

நன்கொடைகள்: ஏழைகளுக்கு பால் தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் டயட்டில் பச்சை காய்கறிகளை இந்த வாரம் அதிகம் சேர்க்கவும். குறிப்பாக துளசியை சேர்த்து கொள்ளுங்கள். இந்த வாரம் மாணவர்கள் ஊக்கம் மற்றும் வளர்ச்சி பெறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையை சோஷியல் நெட்வொர்க்கிங்கில் செலவிடுவது எதிர்கால வளர்ச்சிக்கு உதவும். இந்த வாரம் உங்களது ஆளுமை வளர்ச்சிக்கானது. ஆலோசகர்கள், ஆசிரியர்கள், பாடகர்கள், பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு இந்த வாரம் சிறப்பானது. பிரச்சனைகளை தீர்க்க இது சிறந்த நேரம். புத்தகங்கள், டெக்கர், தானியங்கள், இசைக்கருவிகளின் வணிகம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வயலட்

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3

நன்கொடைகள்: குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை நன்கொடையாக வழங்குங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த வாரம் வேலை தேடல், திருமண திட்டங்கள், புதிய ஆர்டர்கள் அல்லது வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஏற்ற வாரம். இந்த வாரத்தை ஆற்றல் நிறைந்ததாக மாற்ற உங்கள் பேச்சில் மென்மையை கடைப்பிடிக்க மறக்காதீர்கள். விவசாயம் மற்றும் வணிகச் சொத்துக்களில் முதலீடு செய்பவர்களுக்கு இது சாதகமான வாரம். வங்கி ஊழியர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், நடிகர்கள், செய்தி அறிவிப்பாளர்கள் மற்றும் நடன கலைஞர்கள் நன்மைகளை பெற இது பிரகாசமான வாரம். வன்பொருள், கட்டுமானப் பொருட்கள், உலோகம் மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் வணிகத்தில் புதிய வாய்ப்புகளை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் கிரே

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

நன்கொடைகள்: ஆதரவற்றோர் இல்லத்தில் உலோக பொருளை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த வாரம் சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த வாரம் அதிக அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு தேவைப்படுகிறது. விநாயகர் வழிபாடு செய்து அவருடைய ஆசிகளை பெறுவது சிறந்தது. ஊடகங்கள், பாதுகாப்பு, பயணம், நாடகம், விளையாட்டு வீரர்கள் மற்றும் மருத்துவ பயிற்சியாளர்கள் தங்கள் சீனியரை கவர இது சிறந்த வாரம். இந்த வாரம் சொத்துக்கள் மற்றும் முதலீட்டில் இருந்து பண லாபம் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. மாடலிங், மருத்துவம், விளையாட்டு, நிகழ்வுகள், ஆடிஷன் மற்றும் நேர்காணல் ஆகியவற்றில் பங்கேற்பவர்கள் அதிர்ஷ்டத்தை சார்ந்து இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்ட நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

நன்கொடைகள்: தெரு விலங்குகளுக்கு தண்ணீர் வைக்கவும்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஷாப்பிங், காதல் துணை, நண்பர், பெற்றோர், குழந்தைகள் அல்லது உறவினர்களுடன் ஜாலியாக நேரம் செலவழிக்க ஏற்ற வாரம் இது. IT அல்லது பியூட்டி இண்டஸ்ட்ரியில் இருப்பவர்கள் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள். உங்கள் முயற்சி மற்றும் திறமைகளுக்கு இந்த வாரம் உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப மகிழ்ச்சி மற்றும் வாழ்வில் முழுமையை உணர்வீர்கள். விளையாட்டு வீரர்கள், சொத்து விற்பனையாளர்கள், தோல் மருத்துவர்கள், பாடகர்கள், வடிவமைப்பாளர்கள், தரகர்கள், சமையல்காரர்கள், மாணவர்கள் இந்த வாரம் வெற்றி பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் ஸ்குவா

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: ஏழைகளுக்கு பால் தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணியிடத்தில் சிறந்த முடிவுகளை பெற சக ஊழியர்கள் அல்லது குழுவுடன் இணைந்து பணியாற்றுங்கள். உங்களது குடும்ப வாழ்க்கை தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கும். நல்லிணக்கத்தைப் பெற தனிப்பட்ட உறவுகளில் அமைதியை கடைபிடிக்க வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் நீங்கள் சிவன் மற்றும் கேதுவை வழிபட்டு ஆசீர்வாதம் பெற வேண்டும். உங்கள் மேலதிகாரியின் ஆலோசனைகளை கவனமாக கேட்டு பின்பற்றவும்.பாதுகாப்பு, சட்டம், மருத்துவம், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், நாடக கலைஞர்கள், சி.ஏ., நடிகர்களுக்கு இந்த வாரம் சிறப்பு அதிர்ஷ்டம் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 7

நன்கொடைகள்: ஏழைகளுக்கு எஃகு பாத்திரங்களை கொடுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதல் உறவுகளில் மகிழ்ச்சி நீடிக்கும் மற்றும் பரிசுகளை பரிமாறி கொண்டாடுவீர்கள். பிறருக்கு உதவி மற்றும் சேவை செய்வதன் மூலம் இந்த வாரத்தை சிறப்பாக தொடங்குங்கள். அரசு நிறுவனங்களுடனான தொடர்பு சிறப்பான வருமானத்தை தரும். இந்த வாரம் நிதி ஆதாயங்கள் அதிகம் இருக்கும் மற்றும் விவசாய நிலம் மற்றும் இயந்திரங்கள் வாங்குவது தொடர்பான முடிவுகள் சாதகமாக மாறும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சாதனைகளால் பெருமை கொள்வார்கள். வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொறுமை அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: வயலட்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: ஏழைகளுக்கு தேவைப்படும் ஆடைகளை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த வாரம் காதல் துணையின் நம்பிக்கையை பெற உங்கள் உணர்ச்சிகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தம்பதிகள் இடையே மகிழ்ச்சி மற்றும் காதல் அதிகரிக்கும். ஸ்டாக் மார்க்கெட் மற்றும் ட்ரெயினிங் பிசினஸ் வளர்ச்சியை சந்திக்கும். காதலில் உள்ளவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த அருமையான வாரம். வணிக உறவுகள் மற்றும் ஒப்பந்தங்கள் விரைவில் நிறைவேறும். டிசைனிங், ஏற்றுமதி இறக்குமதி, எழுத்து கவர்ச்சி தொழில் மற்றும் ஊடக துறையில் உள்ளவர்கள் புகழ் மற்றும் சிறந்த வாய்ப்புகளை பெறுவார்கள். மாணவர்கள், பயிற்சியாளர்கள், இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள், வடிவமைப்பாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் இந்த வாரம் பிரபலமடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பிங்க்

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: பெண்களுக்கு வளையல்களை தானம் செய்யவும்

First published:

Tags: Numerology, Tamil News