Home /News /spiritual /

எண் கணித பலன் - இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (28 ஆகஸ்ட் 2022) கோவிலில் சந்தனக்கட்டை தானம் செய்யவும்

எண் கணித பலன் - இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (28 ஆகஸ்ட் 2022) கோவிலில் சந்தனக்கட்டை தானம் செய்யவும்

எண் கணித பலன்கள்

எண் கணித பலன்கள்

Numerology : ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் காரணமாக மோதல் ஏற்படலாம். தலைவர்கள் தங்களது பேச்சு திறமையை வெளிப்படுத்தி, உலகை வெல்லலாம். இன்று உங்களுக்கு அனைத்து சௌகரியங்களும் கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் வெற்றியுடன் வீடு திரும்புவார்கள். பெண்கள் சமையல் மூலமாக பிறர் மனதை வெல்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 1

தானம் - பிச்சைக்காரர்களுக்கு மஞ்சள் நிற பருப்பு தானமாக வழங்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று அடர்த்தி குறைவான வண்ணமுடைய ஆடைகளை அணியவும். உங்கள் ஆழ்மன சிந்தனை உயர்வாக இருக்கும் காரணத்தால் மனம் சொல்வதை கேட்கவும். அலுவலகப் பணி மற்றும் குடும்ப வாழ்க்கை இடையே சமநிலையை கடைப்பிடிக்கவும். குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் இனிமையான நேரத்தை செலவிடலாம். லாபம் தொடர்பான சிறப்பு செய்தி உங்களை வந்தடையும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் வெள்ளை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - கோவிலில் இரண்டு தேங்காய்களை தானமாக கொடுக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கலைஞர்கள், சமூகப் பணியாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இன்று சிறப்புவாய்ந்த நாளாக இருக்கும். இன்றைய நாளின் தொடக்கத்தில் குரு மற்றும் தாயிடம் ஆசி வாங்க மறக்க வேண்டாம். உங்கள் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். காதலை வெளிப்படுத்த சிறப்பான நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - கோவிலில் சந்தனக்கட்டை தானம் செய்யவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உணவு மற்றும் பணி செய்வதில் ஒழுங்கை கடைப்பிடிக்கவும். இன்றைய நாள் கடந்து செல்லும்போது நம்பிக்கை அதிகரிக்கும். இன்றைக்கு முதலீடு செய்யும் பணம் குறித்து ரகசியம் காக்க வேண்டும். ஏற்றமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்பவர்கள் ஆழ்ந்து சிந்தித்து மனம் சொல்வதை கேளுங்கள். சிட்ரஸ் பழங்கள் சாப்பிடுவது குளிர்ச்சி தரும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு பச்சை நிற தானியங்களை தானமாக வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

செலவுகளை கட்டுப்படுத்தி, இயல்பான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லவும். உங்கள் சுதந்திரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்த வேண்டாம். சக பணியாளர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள். யாரிடமும் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். மது மற்றும் அசைவ உணவுகளை இன்று கட்டாயம் தவிர்க்கவும். சொத்து தொடர்பிலான முடிவுகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - குழந்தைகளுக்கு செடிகளை தானமாக வழங்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற அறிகுறியை இன்று நீங்கள் உணருவீர்கள். குழந்தைகளை நினைத்து பெருமையாக இருந்தாலும் கூட, அவர்கள் மீது அதீத அக்கறை காட்டுவதை பெற்றோர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுபவர்களின் ஆதரவு கிடைக்கும். உடைகள், நகைகள், மொபைல், வீடு போன்றவற்றை வாங்குவதற்கு சிறப்பான நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா மற்றும் பிங்க்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - வீட்டு பணியாளருக்கு அழகு சாதனப் பொருட்களை தானமாக வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காப்பர் அல்லது வெண்கல நாணயம் ஒன்றை எப்போது பையில் வைத்துக் கொள்ளவும். வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே, இன்று ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம். வாழ்க்கை பல ஏற்ற, இறக்கங்களை கொண்டிருக்கும். ஆகவே, சாதூர்யத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - ஆதரவற்றோர் ஆசிரமத்தில் கோதுமையை தானமாக வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று பயணங்களை தவிர்க்கவும். பொறுப்புகளை பூர்த்தி செய்வதுதான் வெற்றிக்கான வாசல்படி ஆகும். இலகுவான தீர்வு தேவைப்படும் இடங்களில் பணத்தையும், அறிவையும் பயன்படுத்துங்கள். மாணவர்கள் இலக்கை அடைய வேண்டும் என்றால் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படவும். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவர்கள் உச்சத்தை அடையலாம்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - விலங்குகளுக்கு உணவு வைக்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் பிறவியிலேயே தலைவராக வந்தவர். ஆகவே, உங்களது முழு திறனை பயன்படுத்தவும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு பெயரும், புகழும் கிடைக்கும். தம்பதியர்கள் எதிர்காலத்திற்கு திட்டமிட சிறப்பான நாளாகும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்கலாம். மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பாராட்டு கிடைக்க இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - கோவிலில் குங்குமம் தானமாக கொடுக்கவும்.

ஆகஸ்ட் 28 அன்று பிறந்த பிரபலங்கள் : பிரியா தத், நாராயண குரு, தீபக் திஜௌரி, கரண்வீர் போரா, ஜகதீஷ் சிங் கெஹார்
Published by:Ramprasath H
First published:

Tags: Astrology, Numerology

அடுத்த செய்தி