#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்றைய நாளை நல்லபடியாக தொடங்க வாழை மரத்தை வழிபடுங்கள். கல்வி மற்றும் விளையாட்டு வெற்றி பெற்று பாராட்டுகளை பெறுவீர்கள். தம்பதிகள் மத்தியில் அன்பு அதிகரிக்கும். கல்வியாளர், எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்கள், கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், சோலார் எனர்ஜி டீலர்கள், இசைக்கலைஞர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பானதாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு மற்றும் புதன்
அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 5
தானம் - கோவிலில் பாசிப்பருப்பு தானம் செய்யுங்கள்
#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்) :
இன்று உங்களது பல பிரச்சனைகள் முடிவடையும் நேரம் என்பதால் பொறுமையாக இருங்கள். தேவையில்லாமல் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம். இன்று உங்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் செலவிடுவது, குடும்ப விழாக்களில் கலந்துகொள்வது, பங்குகளில் முதலீடு செய்வது மற்றும் உங்கள் துணைக்கு ஆச்சரியமான பரிசு வழங்குவதற்கு ஏற்ற நாள்.
அதிர்ஷ்ட நிறம் - பிங்க்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 2
தானம் - வீட்டு வேலை செய்பவர்களுக்கு இன்று இளஞ்சிவப்பு நிற ஆடைகளை வழங்குங்கள்
#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
படைப்பாற்றல் என்பது தொழில் வாழ்க்கையில் அனைத்து வாய்ப்புகளின் கதவுகளையும் திறக்கும் டிரம்ப் கார்டு என்பதை புரிந்து கொள்வீர்கள். உங்களது முயற்சிகளுக்கு இன்று அங்கீகாரம் கிடைக்கும். பல வழிகளில் இன்று நீங்கள் பணம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். ஆடைகள், நகைகள், புத்தகங்கள், அலங்கார பொருட்கள், தானியங்கள் வாங்க இன்று சிறந்த நாள்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9
தானம் - கோவிலில் சந்தனத்தை தானம் செய்யுங்கள்
#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று நீங்கள் சொத்துக்களில் பெரிய முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். சிவனை வழிபடுவதால் சவால்களை எதிர்கொள்ளும் திறன்களை பெறுவீர்கள். நிதி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதன் மூலம் இன்று உங்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். உலோகம் மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் புதிய சலுகையை இன்று எதிர்பார்க்கலாம்.
அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - குழந்தைகளுக்கு ஆடை தானம் செய்யுங்கள்
#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
அரசு வேலைகள், விளையாட்டு, நிகழ்வுகள், போட்டி தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் அதிர்ஷ்டம் முக்கிய பங்கு வகிக்கும். பங்குகள், சொத்து, ஏற்றுமதி இறக்குமதி, பயண நிறுவனம் அல்லது கல்வி உள்ளிட்ட துறைகளில் உள்ளவர்கள் இன்று ஒரு படி மேலே செல்வார்கள். இன்று உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - புதன்
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - விலங்குகளுக்கு பச்சை இலைகளை சாப்பிட வைக்கவும்
#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று உங்கள் அன்புக்குரியவருடன் உணர்வுகளை பரிமாறி கொள்ள நலன் நாள். நேர்காணல்கள், விளையாட்டு, ஷாப்பிங், சுற்றுலா, பயணம், அசைன்மென்ட் முடித்தல் போன்ற செயல்பாடுகள் உங்களை ஆக்டிவாக வைத்திருக்கும். இன்று வணிக வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளை தீர்க்க மற்றும் இரவு உணவு அல்லது ஷாப்பிங்கிற்கு வெளியே செல்ல வாய்ப்புகள் அதிகம். சொத்து விற்பனையாளர்கள், வடிவமைப்பாளர்கள், நதரகர்கள், சமையல்காரர்கள் தங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலான புதிய பணிகளை பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம் - வயலட்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - கோயிலில் வெள்ளி நாணயம் தானம் கொடுங்கள்
#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று பயணம் அல்லது விருந்துக்கு செல்வதற்கு நீங்கள் திட்டமிடுவீர்கள். உங்கள் அறிவுத்திறன் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதால் உங்கள் முன் வைக்கப்படும் சவால்களை தயக்கமின்றி ஏற்று கொள்ளுங்கள். தாய் மற்றும் பிற மூத்த குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளை கவனமாக கேளுங்கள். வழக்கறிஞர்கள், விமானிகள், அரசியல்வாதிகள், நாடக கலைஞர்கள், சி.ஏ., சாப்ட்வேரில் உள்ளவர்களுக்கு இன்று சிறப்பு அதிர்ஷ்டம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 7 மற்றும் 9
தானம் - ஏழைகளுக்கு அரிசி தானம் செய்யுங்கள்
#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்றைய அதிர்ஷ்ட சக்கரம் உங்கள் விதியை சாதகமாக்கும். உங்கள் நீண்ட கால் இலக்குகளை அடைவது பற்றி சிந்திக்க வேண்டும். இன்று அதிக நிதி நன்மைகள் கிடைக்கும் மற்றும் சொத்து மற்றும் இயந்திரங்கள் வாங்குவது தொடர்பான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அதிக பொறுப்புகள் காரணமாக மனஅழுத்தம் அதிகரிக்க கூடும். பார்ட்னர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் பேச்சில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - தேவைப்படுபவர்களுக்கு குடை தானம் செய்யுங்கள்
#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று அதிர்ஷ்டத்தை அனுபவிக்க தவறாமல் சிவப்பு நிற பொருட்களை பயன்படுத்துங்கள். இசைக்கலைஞர்கள் அல்லது கலைஞர்களுக்கு இன்று ஸ்பெஷல் நாள். காதலிப்பவர்கள் தங்கள் உணர்ச்சிகளை துணையிடம் வெளிப்படுத்த ஒரு அருமையான நாள். வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், ஏற்றுமதி இறக்குமதி, தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விளையாட்டு துறையில் உள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - தேவைப்படுவோருக்கு சிவப்பு மசூர் தானம் செய்யுங்கள்
ஆகஸ்ட் 27-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: டோராப்ஜி டாடா, தி கிரேட் காளி, நேஹா தூபியா, ஒய் எஸ் அவினாஷ் ரெட்டி, ஜிம் சரப், சுமலதா
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Rasi Palan