Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்... (ஏப்ரல் 30, 2022)

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்... (ஏப்ரல் 30, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | ஏப்ரல் 30-ஆம் தேதியின் எண் கணிதப் பலன்கள்...

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கான பலம், உங்கள் ஆளுமையை பிரதிபலிக்கும் அறிவில் உள்ளது. எனவே சிந்தித்து செயல்படுங்கள். இன்று பரபரப்பான நாளாக இருந்தாலும் மாலை வீடு திரும்பும் போது மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். வீடு மற்றும் அலுவலகம் என இரண்டிலுமே உங்களுக்கு மதிப்பு கூடும். சொத்து வாங்குவது மற்றும் விற்பது இரண்டையும் இன்று தவிர்க்க வேண்டும். பள்ளி வணிகம், உணவகங்கள், ஆலோசனை புத்தகங்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், உலோகங்கள் சார்ந்த தொழில் செய்வோர் அதிக லாபம் ஈட்ட கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3

நன்கொடைகள்: பெண் ஒருவருக்கு ஒரு ஆரஞ்சு துணி பீஸை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் ஒரு பொறுப்புள்ள நபராக இருந்தாலும் இன்று உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில தொந்தரவுகளை சந்திப்பீர்கள். காதல் உறவில் இருப்போர் உங்கள் துணை உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது போன்றும், உங்களை கட்டுப்படுத்துவதை போன்றும் உணர்வீர்கள். பெண்கள் இன்று அவர்களது சீனியர்களின் விமர்சனங்களை புறக்கணித்து செல்ல வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்வோர் மற்றும் அரசியல்வாதிகள் புதிய உச்சத்தை காணலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அக்வா

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 2

நன்கொடைகள்: ஆதரவற்றோர் இல்லத்திற்கு பால் தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுக்கு கற்பனை திறன் அதிகமாக இருக்கும். எழுத்தாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு இன்று சிறப்பான நாள். உங்கள் செயல் மற்றும் பேச்சால் மக்கள் கவரப்படுவார்கள். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்திற்கு சாதகமாக மாறும். காதல் உறவில் இருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக உணருவார்கள். புதியவர்களிடத்தில் அரசு அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

நன்கொடைகள்: உங்களிடம் வேலை செய்யும் பெண் பணியாளருக்கு குங்குமப்பூ தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களது முழு அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு மூலம் இன்று நீங்கள் நிறைய பணம் சம்பாதிப்பீர்கள். அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளவர்களுக்கு பயணம் செய்ய இன்று ஏற்ற நாள். மாணவர்கள் கல்வி பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபட தியானம் உதவும். முடிந்தவரை இன்று அசைவம் சாப்பிடுவதையும் மது அருந்துவதையும் தவிர்த்து கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: பிச்சைக்காரருக்கு பச்சை அல்லது சிவப்பு ஆடைகளை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வாழ்க்கை துணை அல்லது நெருங்கிய நண்பருடன் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். பணியிடத்தில் லாபம் ஈட்டுவீர்கள், கடன் வாங்குவது அல்லது கொடுப்பது இன்று வேண்டாம். பிற்பகலுக்கு மேல் நிலைமை சீராக இருக்காது என்பதால் எந்த வேலையாக இருந்தாலும் சீக்கிரம் முடிக்க முயற்சி செய்யுங்கள். காதல் உறவில் இருப்பவர்களுக்கு சிக்கல் ஏற்பட பல சந்தர்ப்பங்கள் இருக்கிறது. எனவே துணைக்கு நேர்மையாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்ட நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

நன்கொடைகள்: பச்சை பழங்கள் மற்றும் காய்கறிகளை தானம் செய்ய வேண்டும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களை நீண்ட நாள் குழப்பிய பல சந்தேகங்களுக்கு இன்று விடை கிடைக்கும். எனவே மன அமைதி பெறுவீர்கள். மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை செலவிட சிறந்த நாளாகும்.மாணவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால் அமையும் புதிய வாய்ப்பு சாதகமான பலனை தரும். புதிய தொழிற்சாலை அமைக்க நிலம் தேடுபவர்களுக்கு நல்ல இடம் அமையும். பழைய நினவுகளில் இருந்து விடுபட உங்களை இன்று நீங்கள் உற்சாகமாக வைத்து கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: ஆசிரமங்களுக்கு வெள்ளை நிற இனிப்புகளை வழங்குங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பிரபலங்கள், அரசியல்வாதிகள், மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியாளர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், ஜோதிடர்கள், ஒப்பனை கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இன்று சிறப்பான நாள். காதல் உறவில் இருந்தால் சண்டை சச்சரவுகளை தவிர்க்கவும். அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் பொது கூட்டங்களில் கலந்து கொள்ள மற்றும் கட்சி சீனியர்களை கவரவும் இன்று நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம்: டீல்

அதிர்ஷ்ட நாள்: திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண்: 7

நன்கொடைகள்: வெண்கலம் அல்லது செம்பு உலோக துண்டை எந்த வடிவத்திலாவது தானம் செய்யுங்கள்.

#எண் 8 (நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குறித்த நேரத்தில் நீங்கள் காரியத்தை முடித்தால் பணவரவு அதிகம் இருக்கும். பணம், புகழ், ஞானம், மரியாதை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாசம் கொடுத்த கடவுளுக்கு உங்கள் நன்றி சொல்ல கோவிலுக்குச் செல்லுங்கள். மருத்துவர்கள் மற்றும் நிதியாளர்கள் வெற்றிகரமான செயல்பாடுகள் மூலம் பாராட்டுகளை பெறுவார்கள். உங்கள் காதல் உணர்வுகளை யதார்த்தமாக மாற்ற இன்று ஒரு அழகான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: பசியோடு இருப்பவருக்கு தர்பூசணியை தானம் செய்யுங்கள்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், ஆசிரியர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் ஒரு படி முன்னேறுவார்கள். இன்று சிவப்பு மற்றும் ஊதா கலவை ஆடை அலல்து அணிகலன்களை அணிவது உங்களுக்கான அதிர்ஷ்ட வாய்ப்பை அதிகரிக்கிறது. பயணத்தைத் தவிர்த்து உங்கள் கண்களை கவனித்து கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய் கிழமை

அதிர்ஷ்ட எண்: 3

நன்கொடைகள்: ட்டு உதவியாளருக்கு சிவப்பு பருப்பை தானம் செய்யுங்கள்.

ஏப்ரல் 30-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: தாதா சாகேப் பால்கே ரோஹித் சர்மா, ரஜத் சர்மா, ஆனந்தமயி மா
Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி