Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (30 ஜூன் 2022) ஆதரவற்றோர் இல்லத்தில் பால் தானம் செய்யுங்கள்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (30 ஜூன் 2022) ஆதரவற்றோர் இல்லத்தில் பால் தானம் செய்யுங்கள்..!

Numerology

Numerology

Numerology | ஜூன் 30 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் வெற்றியாளராக இருப்பீர்கள். உங்கள் அறிவின் வலிமை உங்கள் ஆளுமையில் பிரதிபலிக்கும். மாலை வெகுமதிகள் மற்றும் அங்கீகாரத்துடன் வீடு திரும்புவீர்கள். உங்களை சுற்றியுள்ளவர்கள் உங்கள் மீது அதிக மரியாதை வைத்திருப்பார்கள். சொத்து வாங்குவது மற்றும் விற்பது இரண்டையும் தவிர்க்கவும். இன்று உங்களுக்கு விருப்பமான உண்மையான துணையை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தைகளுக்கு படிப்பில் சுமை இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3
தானம் - ஒரு பெண்ணுக்கு ஆரஞ்சு துணியை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வியாபாரம் அல்லது வேலையில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக உணருவீர்கள். பெண்களும் குழந்தைகளும் இன்று மூத்தவர்களின் விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி, திரவம், மருந்துகள், சட்ட நிறுவனங்கள், வைர வியாபாரம் மற்றும் அரசியல்வாதிகள் புதிய உயரங்களைக் காண்பார்கள். உங்கள் செயல்திறனில் அதிக மதிப்பீடுகளைக் காண புதிய வாய்ப்புகளை ஆராய வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 2
தானம் - ஆதரவற்றோர் இல்லத்தில் பால் தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் படைப்பாற்றல் திறன் இன்று வெளிப்படும். எழுத்தாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு சிறந்த நாளாக அமையும். உங்கள் பேச்சாலும், செயலாலும் மக்கள் ஆச்சரியப்படுவார்கள். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் எதிர்காலத்திற்கு சாதகமாக மாறும். ஆனால் உங்கள் திட்டங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நிறுத்துங்கள் உங்கள் நாளைத் தொடங்கும் முன் உங்கள் குருவின் பெயரை உச்சரிக்க மறக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1
தானம் - கோவிலில் மஞ்சள் பாசிப்பருப்பு தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் அதிக பணவரவை எதிர்பார்க்கலாம் என்றாலும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குறிப்பாக அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளவர்கள் இன்று பயணம் செய்ய நல்ல நாள். பங்கு முதலீடு மெதுவாக சாதகமான மாற்றங்களைக் காணும். தியானம் செய்வது நீங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும். மார்க்கெட்டிங் துறையில் இருந்தால் நீங்கள் எவ்வளவு அதிகமாக பேசுகிறீர்களோ, அந்த அளவு வெற்றி அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - சனி
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - பிச்சைக்காரருக்கு பச்சை அல்லது சிவப்பு ஆடைகளை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் மனைவி அல்லது நெருங்கிய நண்பருடன் உங்கள் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள நினைப்பீர்கள். இன்று  உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். இன்று யாரிடமும் கடன் வாங்காதீர்கள். மாணவர்கள் இன்று தங்கள் கல்வியில் சாதனைகளை அனுபவிப்பார்கள். காதலில் இருப்பவர்கள் திசைதிருப்பப்படுவதற்கு பல வாய்ப்புகள் இருக்கும். எனவே நேர்மையைக் கடைப்பிடியுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - கோவிலில் வாழைப்பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுக்கு ஆடம்பரம், செழிப்பு மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும் நாள். மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிட சிறந்த நாள். தனிப்பட்ட உறவுகளை எண்ணி நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்வீர்கள். புதிய ஆலை அமைக்க இடம் தேடுபவர்கள் இன்று சிறந்த தேர்வை பார்க்க முடியும். கடந்த காலத்தை மறக்க மனதை உற்சாகமாக வைத்து கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - ஆசிரமங்களுக்கு வெள்ளை இனிப்புகளை வழங்குங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களின் அதிவேக மனப்பான்மை இன்று சாதக பலன்களை தரும். தயவு செய்து இன்று உங்கள் காதல் உறவில் வாக்குவாதம் தவிர்த்து எச்சரிக்கையாக இருங்கள். இன்று விளையாட்டு வீரர்களுக்கு வெகுமதியும் அங்கீகாரமும் கிடைக்கும். அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள, கட்சி மூத்தவர்களை கவரவும் ஒரு அழகான நாள்.கடன் விஷயத்தில் இன்று கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - வெண்கலம் அல்லது செம்பு உலோகத் துண்டுகளை எந்த வடிவிலும் தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பயணத்திற்கு திட்டமிட்டால் உங்களுக்கு இன்று சாதகமான நாள், ஆனால் நீங்களே வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும். பயணம் கடினமாக தோன்றினாலும் இலக்குகளை நோக்கி செல்வதில் கவனம் செலுத்துங்கள். மருத்துவர்கள் மற்றும் நிதியாளர்கள் வெற்றிகரமான செயல்பாடுகள் மூலம் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம் மற்றும் பீச்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - பிச்சைக்காரருக்கு தர்பூசணியை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

திருமணம், ஒப்பந்தப்புள்ளிகள் மற்றும் சொத்துக்களுக்காக மீடியேட்டர்களை அணுகுவதற்கு சிறந்த நாள். விளையாட்டு வீரர், தொழிலதிபர், ஆசிரியர்கள், வங்கியாளர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். இன்று சிவப்பு மற்றும் ஊதா கலவையை அணிவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ஊதா
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 3
தானம் - பிச்சைக்காரர்களுக்கு ஆரஞ்சு பழங்களை தானம் செய்யுங்கள்

ஜூன் 30-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: ஹரிவன்ஷ் நாராயண் சிங், அல்லரி நரேஷ், அவிகா கவுர், முக்தார் அன்சாரி
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி