ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (27 அக்டோபர் 2022) யாசிப்பவர்களுக்கு தயிர் வழங்கவும்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (27 அக்டோபர் 2022) யாசிப்பவர்களுக்கு தயிர் வழங்கவும்..!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | அக்டோபர் 27-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குவீர்கள். அனைத்து பணிகளும் சுமூகமாக நிறைவுபெறும். இன்று நீங்கள் மேடையேறி பேசலாம். உங்கள் பேச்சு பிறரை கவரும். தம்பதியர்கள் இடையே மகிழ்ச்சியான உறவு நீடிக்கும். நடனக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் போன்றோரின் புகழ் அதிகரிக்க உள்ளது.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 1 மற்றும் 9

தானம் - ஏழைகளுக்கு ஆரஞ்சு வழங்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு சிவனுக்கு பாலாபிஷேகம் செய்யவும். பிறருடைய விமர்சனங்களை புறந்தள்ளவும். அவர்கள் நீங்கள் வளர்ச்சி அடைவதை கண்டு பொறாமை கொள்ளும் நபர்கள் ஆவர். பணியிடத்தில் மூத்த ஊழியர்களின் ஒத்துழைப்புடன் வெற்றி கிடைக்கும். குடும்ப விழாக்களில் பங்கேற்கலாம். உறவுகள் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பீர்கள். குறுகிய பயணம் செய்ய இருக்கிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பிங்க்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - பிச்சைக்காரர்களுக்கு தயிர் வழங்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாள் முழுவதும் பணிச்சுமை மற்றும் போட்டிகள் நிறைந்திருக்கும். பாடகர்கள், பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோருக்கு சிறப்பு மிகுந்த நாளாக அமையும். உங்கள் பணி வளர்ச்சி தொடர்பாக ஆன்மீக ரீதியில் ஆலோசனை செய்யவும். டிசைனர்கள், இசையமைப்பாளர்கள் போன்றோர் சிறப்புமிக்க சாதனைகளை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - கோவிலில் சந்தனம் வழங்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பங்குச் சந்தை மற்றும் சொத்துகளில் முதலீடு செய்வதற்கு உகந்த நாளாகும். வணிகம் அல்லது அரசு சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் கிடைப்பது தாமதமாகும். இன்று வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால் நேர்காணலுக்கு செல்லலாம். கட்டுமானத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு கீரைகளை சாப்பிடவும்.

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - நண்பனுக்கு மணி பிளாண்ட் வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று விநாயகரை பூஜித்து, அவரிடம் இருந்து ஆசிகளை பெறவும். ஒத்த கருத்துடைய நபர்களின் பேச்சை கேட்டு குழப்பம் அடையாமல், பிறரின் ஆலோசனைகளை கேட்கவும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பங்குச் சந்தையில் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - விலங்குகளுக்கு பால் தானம் செய்யவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களுக்கான வாய்ப்பு சிறியதோ, பெரியதோ எப்படி இருந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளவும். நிச்சயமாக எதிர்காலத்தில் அது உதவும். இன்று உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிரம்பும். வணிகம் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மாணவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். காதல் உறவுகளால் வீட்டில் மகிழ்ச்சி திரும்பும்.

அதிர்ஷ்ட நிறம் - வயலெட்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவிலில் வெள்ளிக்காசு தானம் செய்யவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தனிப்பட்ட விவகாரங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் பெற்றோரின் ஆலோசனைகளை கேட்க வேண்டும். உங்கள் அறிவுக்கு விடப்பட்டுள்ள சவாலை எதிர்கொண்டு வெற்றி காணுங்கள். இன்று மிகப் பெரியதாக தோன்றும் பிரச்சினை வெகுவிரைவில் மறைந்து விடும். உங்களை வீழ்த்த நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்காது.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7 மற்றும் 9

தானம் - சின்ன அளவில் காப்பர் பொருளை தானம் செய்யவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பெரிய நிறுவனங்களுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்புகளுக்கு எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் தற்போதைய சூழல் போராட்டம் மிகுந்ததாக இருக்கும். சொத்து மற்றும் இயந்திரங்கள் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் சாதகமாக அமையும். சட்ட பிரச்சினைகள் காரணமாக மன அழுத்தம் கூடுதலாக இருக்கும். விவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவை உள்ளவர்களுக்கு குடை வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வெளிநாட்டு வணிக வாய்ப்புகள் அதிகரிக்கும். தம்பதியர்கள் இடையே காதல் உணர்வு மற்றும் மகிழ்ச்சி மேலோங்கும். இன்று நீங்கள் கூட்டத்தினரிடம் இருந்து விலகி இருக்கவும். இல்லை என்றால் உங்கள் மனம் புண்படக் கூடும். காதலில் இருப்பவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த சிறப்பான நாளாகும். மீடியா துறையில் இருப்பவர்களின் புகழ் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - சிவப்பு நிற பருப்பு தானம் செய்யவும்.

அக்டோபர் 27 அன்று பிறந்த பிரபலங்கள் : இர்பான் பதான், கே.ஆர்.நாராயணன், பூஜா பத்ரா, சுதேஷ் லேரி, மோகன் கபூர், அனுராதா பௌத்வால்

Published by:Selvi M
First published:

Tags: Numerology