Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த வெற்றி வெகு தொலைவில் இல்லை... (மே 14, 2022)

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த வெற்றி வெகு தொலைவில் இல்லை... (மே 14, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | மே 14 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கடந்த காலத்தில் செய்த நல்ல காரியங்களுக்கான பலன்களை இன்று அடைவீர்கள். கடவுளின் ஆசீர்வாதத்துடன் சமூகத்தில் மரியாதையும், பாராட்டுக்களும் கிடைக்கும். பழைய நண்பரிடம் இருந்து வர உள்ள ஆஃபரை எடுத்துக் கொள்ள கண்ணையும், கைகளையும் திறந்துவைத்துக்கொள்ளுங்கள். பழைய நண்பரின் வலுவான பின்னணி உங்களுடைய சட்ட சிக்கல்கள், வேலை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க உதவும். நடிகர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஈர்ப்பை அதிகரிக்க ஸ்கின்கேர்பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு
அதி ர்ஷ்ட எண் - 6
தானம் - ஆசிரமங்களுக்கு மரக்கன்றுகளை தானமாக கொடுங்கள்

# எண் 2: (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதல் உறவு மற்றும் குழந்தைகளுடனான உறவு ஆகிய இரண்டிலும் உண்மையுடன் சிறப்பாக நேரத்தை செலவிடுகிறீர்கள். உங்கள் உள்ளம் நினைப்பதை செய்ய ஏற்ற ரொமான்டிக் நாள் இது. வியாபாரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் சுமுகமாக நிறைவேறும். பெரிய நிறுவனங்களுடன் கூட்டு சேர வாய்ப்புள்ளது. எந்த வகையான சேவைத் துறையைச் சேர்ந்தவர்களும் உயர் வளர்ச்சி மற்றும் நன்மைகள் கிடைக்கும். தனிப்பட்ட முடிவுகளை எடுக்கும்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும்.

அதிர்ஷ்ட நிறம் - நீல நிறம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதி ர்ஷ்ட எண் - 2 மற்றும் 6
தானம் - வெள்ளை அரிசியை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்

# எண் 3: (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அரசியல்வாதிகள் அல்லது பொது வியாபாரிகள் இந்த நாளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். நாடகக் கலைஞர்கள் பணியிடத்தில் புதிதாகத் தொடங்க வேண்டும். அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும், ஆனால் நீங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது இன்று நிதி விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இசையமைப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள், மாணவர்கள், செய்தி தொகுப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், இல்லத்தரசிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு அறிவிப்புகள் இருக்கும்

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1
தானம் - தேவைப்படுபவர்களுக்கு பச்சை மஞ்சளை தானமாக வழங்குங்கள்.

# எண் 4: (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் முதலீடு செய்த வருமானம் விரைவில் லாபத்துடன் கைக்கு வர உள்ளதால் பொறுமையுடன் இருங்கள். நீங்கள் அனைத்து பணிகளையும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். ஆடைகள் அல்லது காலணிகளை தானம் செய்வது மந்திர பலனைத் தரும். கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் மற்றும் தரகர்கள் போன்ற வணிகங்கள் தொடர்பாக  இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். சிறந்த தொழில் வாழ்க்கை மற்றும் பெற்றோராக பெருமைப்படும் தருணம் காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - ஆதரவற்றோர்  இல்லங்களுக்கு ஆடைகளை தானமாக கொடுங்கள்

# எண் 5: (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வளர்ச்சி மற்றும் வெற்றியை எட்டித்தொட கால தாமதம் ஏற்பட்டாலும், உங்களுடைய எதிர்கால திட்டம் சிறப்பாக வெற்றியடையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களின் செயல்திறனுக்கான பொது அங்கீகாரம் கிடைக்கும் நாள், குறிப்பாக விளையாட்டு வீரர்கள், சுற்றுலா விரும்பிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். மீட்டிங்கின் போது அதிர்ஷ்டக்காற்று உங்கள் பக்கம் வீச வேண்டும் என்றால், பச்சை நிற உடையை அணியுங்கள். இன்று வாழ்க்கை உங்களுக்கு பிடித்தமான சர்ப்ரைஸ்களை வழங்க காத்திருப்பதால், காதலை வெளிப்படுத்த சரியான நாள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - பச்சை பழங்களை ஏழைகளுக்கு தானம் கொடுங்கள்

#எண் 6: (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று சொந்த வாழ்க்கை மற்றும் தொழிலில் பல விஷயங்கள் பரபரப்பாக நடக்க உள்ளது. விழாக்களில் கலந்து கொள்வதற்கும், நண்பர்களைச் சந்திப்பதற்கும், குடும்பத்தினரைச் சந்திப்பதற்கும், பிக்னிக், மேடை நிகழ்ச்சிகள் மற்றும் ஷாப்பிங் செய்வதற்கும் முடிவெடுப்பீர்கள். வடிவமைப்பாளர்கள், நடனக் கலைஞர்கள், நடிகர்கள், ஜாக்கிகள் மற்றும் மருத்துவர்கள் தங்களுக்கு அதிர்ஷ்டமான நாள் என்பதால் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தச் செல்லுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - வெள்ளி நாணயத்தை தானம் கொடுங்கள்

#எண் 7: (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய தினம் மேடு, பள்ளம் நிறைந்ததாக இருந்தாலும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உதவியால் வெற்றி கிட்டும். பணம் குறித்த முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. இன்றைய தினம் தணிக்கை தேவை என்பதால் ஆவணங்களை நம்ப வேண்டாம். ஆனால் அரசு டெண்டர்கள், ரியல் எஸ்டேட், பள்ளிகள், உள்துறை, தானியங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு இது ஒரு சிறந்த நாள். நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் இருக்கும் வரை வணிக உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - கோவிலில் மஞ்சள் இனிப்புகளை தானம் செய்யுங்கள்

#எண் 8: ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கடந்த காலத்தை மறந்துவிட்டு முன்னேறுங்கள், பிடிவாதத்தை குறைத்துக் கொண்டு பெரியவர்களின் அறிவுரைகளை காது கொடுத்து கேளுங்கள். வெற்றி வெகு தொலைவில் இல்லை, இப்போது நீங்கள் பல பொறுப்புகளை உங்கள் தோளில் சுமக்க முடியும். வியாபாரத்தில் பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக இருக்கும், ஆனால் மதிய உணவுக்கு முன் ஒப்பந்தங்கள் அல்லது நேர்காணல்களில் கலந்து கொள்ள வேண்டும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது இன்றைக்கு அவசியம். தயவு செய்து இன்று பயணத்தை தவிர்க்கவும். பண இருப்பு மற்றும் காதல் உறவுகளை அதிகரிக்க இன்றைய நாள் ஏற்றது.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - கால்நடைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

#எண் 9: (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மருத்துவ விஞ்ஞானம், விஞ்ஞானி, கவர்ச்சி தொழில், நிதி, ஜோதிடம், பரந்த மற்றும் கட்டிடக்கலை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் புதிய உயரம் காத்திருக்கிறது. கலை படைப்புகளை உருவாக்குவோருக்கு சாதனைகள் மற்றும் மதிப்பீடுகள் நிறைந்த நாள். வணிகம் அல்லது வேலையில் அதிகாரத்தைப் பெறுவதற்கு அரசாங்கத் தொடர்புகளையோ அல்லது சக நண்பர்களையோ அணுகலாம். நாளை சிவப்பு நிற ஆடையுடன் தொடங்குங்கள். நடனக் கலைஞர்கள், பாடகர்கள், வடிவமைப்பாளர்கள், ஓவியர்கள் மற்றும் வீட்டு ஷிபில்ட் ஆகியோர் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும், சைவ உணவுக்கு மாறவும் ஏற்ற நேரம் இது.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6
தானம் - ஏழைகளுக்கு சிவப்பு நிற பழங்களை தானம் செய்யுங்கள்

மே 15 ஆம் தேதி அன்று பிறந்த பிரபலங்கள்:

ஜி கிஷன் ரெட்டி, மாதுரி தீட்சித், ராம் பொதினேனி, ஷைனி அஹுஜா, பரிதி ஷர்மா, சுகேவ் தாபர்,
Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி