ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (3 நவம்பர் 2022) ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (3 நவம்பர் 2022) ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யவும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | நவம்பர் 3-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நவம்பர் 03 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் கனிவான வார்த்தைகள் மூலம் பார்ட்னரை ஈர்ப்பீர்கள். வார்த்தைகளை வியாபாரமாக்க தெரிந்தவர்களுக்கு இன்று சாதனை மிகுந்த நாளாக இருக்கும். போட்டிகளில் நுழைவதற்கு முன்பாக உங்கள் ஆசிரியர் அல்லது பயிற்சியாளர்களின் அறிவுரையை கேட்கவும். விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. கட்டுமானம், நிதி சார்ந்த தொழில், மருந்து விற்பனை செய்பவர்களுக்கு தொழில் சுமூகமாக நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பீச்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3

தானம் - கோவிலில் மஞ்சள் தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சந்திரனுக்கு பூஜை செய்து, சிவனுக்கு பாலாபிஷேகம் செய்யவும். உங்கள் அறிவை ஆவணங்களில் செயல்படுத்த இன்று அழகான நாளாகும். போட்டிகளில் கட்டாயம் பங்கேற்கலாம். உங்களை அவமரியாதை செய்யக் கூடிய ஒருவரை சந்திக்க நேரிடலாம். ஆகவே, கவனமுடன் இருக்கவும். பெண்கள் கோபத்தை கட்டுப்படுத்தவும். சமூக தொடர்புகளை பயன்படுத்தி அரசு ஒப்பந்தங்களை பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவிலில் பால் அல்லது எண்ணெய் தானம் செய்யவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் திறமை, அறிவு மற்றும் திறன் போன்றவற்றை வெளிப்படுத்துவதற்கு மிக சிறப்பான நாளாகும். உங்களுக்கான வேலைவாய்ப்பு தேடி வருகிறது. உங்கள் அறிவு மற்றும் பேச்சுத்திறன் கண்டு பிறர் ஈர்க்கப்படுவார்கள். இன்றைக்கு எடுக்கக் கூடிய முடிவுகள் சாதகமானதாக அமையும். இன்று செய்யும் முதலீடுகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். காதலில் இருப்பவர்கள் திறந்த மனதுடன் தங்கள் உணர்வை வெளிப்படுத்திக் கொள்ளலாம்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - பெண் பணியாளருக்கு செந்தூரம் வழங்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று பயணங்களை தவிர்க்கவும். நேர மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும். எதிர்காலத்திற்கு தேவையான விதைகளை இன்று விதைத்திட வேண்டும். கட்டுமானம் அல்லது பங்குச்சந்தை தொழில் செய்பவர்களுக்கு மந்தமான நிலை காணப்படும். ஆனால் மருத்துவம் மற்றும் விவசாய துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும். இன்று அசைவ உணவுகளை கட்டாயம் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சைக்காரருக்கு போர்வை தானமாக கொடுக்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எல்லோருடனும் சகஜமாக பழகும் உங்கள் குணம் மற்றவர்களை ஈர்ப்பதாக அமையும். உங்கள் திறனுக்கு ஏற்ற அங்கீகாரம் மற்றும் பலன்கள் கிடைக்கும். உங்கள் நண்பர் அல்லது உறவினர் உதவி கேட்டு வருவார்கள். அவர்களுக்கு ஆதரவு அளிக்கவும். விற்பனை மற்றும் விளையாட்டுத் துறைகளில் இருப்பவர்களுக்கு வேகமான வளர்ச்சி காணப்படும். மாணவர்கள் கல்வியில் சாதனை படைப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - பச்சைக் காய்கறிகளை தானம் செய்யவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சமூகத்துடன் கலந்து பழக, ஷாப்பிங் செய்ய, பெருந்திரள் கூட்டத்தை சந்திக்க இன்று சிறப்பான நாளாகும். உங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கலாம். விசாவுக்காக காத்திருப்பவர் என்றால் சாதகமான மாற்றம் தென்படும். தொழிற்சாலை அமைக்க நிலம் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும். நடிகர்கள் மற்றும் மீடியா துறையினருக்கு வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சட்ட வழக்குகளை எதிர்கொள்ள முறையான தகவல் தொடர்பு அவசியம். மூத்தவர்களின் ஆசி மற்றும் ஆதரவு மூலமாக தடகளப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். எதிர் பாலினத்தவர் மூலமாக உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்க இருப்பதால் உறவுகள் பலப்படும். அன்பாகவும், கனிவாகவும் பேசினால் வெற்றி நிச்சயம். அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவும், மூத்த தலைவர்களை ஈர்க்கவும் சிறப்பான நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவிலில் குங்குமம் தானம் செய்யவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் சமூக அந்தஸ்தை தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்திக் கொள்ளவும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது சுமூகமாக செயல்படவும். வெற்றி வேண்டும் என்றால் கடினமாக உழைக்க வேண்டும். இன்றைய நாளின் இறுதியில் உங்கள் நல்லெண்ணத்திற்கு பாராட்டு கிடைக்கும். அறிவை வளர்த்துக் கொள்ள அதிக நேரம் செலவிடுவீர்கள். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு பணப்பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - பிச்சைக்காரர்களுக்கு சிட்ரஸ் பழங்கள் வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் அன்பு, பாசம் காரணமாக உங்கள் வாழ்க்கை துணை மகிழ்ச்சி அடைவார்கள். எதிர்கால பந்தத்தை இது பலமானதாக மாற்றும். அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்கு அழகான நாள் இதுவாகும். விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள் ஆவண நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். நடிகர்கள், ஆசிரியர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கு பெரும் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - வீட்டுப் பணியாளருக்கு மாதுளம்பழம் வழங்கவும்.

நவம்பர் 03 அன்று பிறந்த பிரபலங்கள் :

அமர்தியா சென், பிரித்வி ராஜ் கபூர், ஔரங்கசீப், ஹெ.ஜே.கனியா, கரம்பீர் சிங், ஜெய் சிங்,

Published by:Selvi M
First published:

Tags: Numerology