Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (7 ஜூலை 2022) கோவிலில் சந்தனம் தானம் செய்யுங்கள்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (7 ஜூலை 2022) கோவிலில் சந்தனம் தானம் செய்யுங்கள்..!

Numerology

Numerology

Numerology | ஜூலை 7-ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வர்த்தகம் சார்ந்த முடிவுகளை எடுப்பது தாமதம் ஆகலாம்; சமரசங்களை செய்ய வேண்டியிருக்கும். பார்ட்னர்ஷிப் செய்து கொள்ளும் முன்பாக ஒன்றுக்கு இருமுறை சிந்திக்கவும். சொத்து தொடர்பான உங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு தரக் கூடிய ஒருவரை சந்திப்பீர்கள். ஆசிரியர்கள், பொற்கொல்லர், வழக்கறிஞர், பாதுகாப்பு அதிகாரிகள் போன்றோருக்கு புதிய வாய்ப்பு காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 1 மற்றும் 3
தானம் - ஏழைகளுக்கு வாழைப்பழம் தானமாக வழங்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

லிக்விட் டிரேடிங் செய்யும் நபர்களுக்கு இன்று நல்ல வளர்ச்சி காணப்படும். அலுவலகத்தில் வளர்ச்சியை எட்டுவதற்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். குழப்பம் மற்றும் சந்தேகம் சூழ்ந்து இருப்பதால் காதல் உணர்வுகளை சற்று கட்டுப்படுத்தி வைக்கவும். வணிகம் சார்ந்த பொறுப்புகள் சுமூகமாக நிறைவடையும். சிறிய பிராண்டுகளுடன் பார்ட்னர்ஷிப் வைத்துக் கொள்ளலாம்.

அதிர்ஷ்ட நிறம் - பீச்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6
தானம் - ஏழைகளுக்கு தயிர் சாதம் தானமாக கொடுக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று உங்கள் பணிகளை தொடங்கவும். விற்பனைக்கான இலக்குகளை எட்டுவீர்கள். புதிய உறவு ஒன்று தேடி வரக் கூடும் என்றாலும் அதை ஏற்றுக் கொள்ள இது சரியான தருணம் அல்ல. அதிர்ஷ்டம் உங்களுக்கு துணையாக இருக்கும். ஆனால், உங்களின் தனிப்பட்ட விஷயங்கள் எதையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1
தானம் - கோவிலில் சந்தனம் தானம் செய்யவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சூழ்நிலை உங்களுக்கு விரோதமாக மாறும் வாய்ப்பு இருப்பதால் இன்று நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பயணம் செய்யவும், பெரும் திரளான கூட்டத்தை சந்திக்கவும் சாதகமான நாள் இது. உங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்வீர்கள். துணி அல்லது காலணி தானம் செய்வது மனநிறைவை தரும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - தேவையுள்ளவர்களுக்கு காலணி அல்லது போர்வை வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உறவுகளில் நீங்கள் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும். வெற்றிக்கு குறுக்கு வழி எதுவும் கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் திறமைக்கு ஏற்ற பாராட்டு மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். சொத்து அல்லது பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தீர்கள் என்றால் விரைவில் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - முதியோ இல்லங்களுக்கு மரச் செடிகளை தானமாக வழங்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

விளையாட்டு வீரர்கள் தங்கள் கனவை நனவாக்க இருக்கிறார்கள். எதிர் பாலினத்தவர் மற்றும் மூத்தவர்களின் அறிவுரை உங்களுக்கு பலனுள்ளதாக அமையும். ரொமான்ஸ் மற்றும் வாக்குறுதிகள் போன்றவை உங்கள் மனதில் நிறைந்திருக்கும். அதே சமயம் ஏமாற்றுக்காரர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் அறிவுத்திறன் மீது எல்லோருக்கும் மரியாதை இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - வெள்ளிக்காசு தானம் செய்யவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மற்றவர்களின் தவறுகளை புறந்தள்ளி அவர்களை மன்னிக்க வேண்டும். உங்கள் தலைமைத்துவம் மற்றும் ஆய்வு செய்யும் திறன் ஆகியவை தான் உங்களுடைய சொத்து. ஆனால், வணிகத்தில் பெரும் முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். சட்ட ரீதியான பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். ஆவணங்கள் எதன் மீதும் இன்று நம்பிக்கை கொள்ள வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - ஏழைகளுக்கு மஞ்சள் சாதம் தானமாக கொடுக்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களுக்கான பிராண்ட் ஒன்றை உருவாக்கி, லாபம் அடைய வேண்டிய நேரம் இது. உங்கள் செலவினங்கள் மற்றும் முதலீடுகள் குறித்து கவனம் கொள்ள வேண்டிய நேரம் இது. வர்த்தகம் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு பிற்பகலில் லாபம் கிடைக்கும். குடும்ப நிகழ்ச்சிகள், அரசு நிகழ்வுகள், நேர்காணல் போன்றவற்றில் பங்கேற்க வேண்டும். குடும்பத்துடன் நேரம் செலவிடும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - ஏழைகளுக்கு வாழைக்காய் தானம் செய்யவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் பொறுமையாகவும், கனிவாகவும் பேசினால் மட்டுமே உங்களுக்கான நல்ல காலம் பிறக்கும். மீடியா, விளையாட்டு, கட்டுமானம், மருத்துவம், அரசியல் துறைகளில் இருப்பவர்களுக்கு இன்று பெயரும், புகழும் கிடைக்கும். நாள் முழுவதும் சாதனைகள் மற்றும் பணப் பலன்கள் நிரம்பியிருக்கும். அரசு தொடர்புகளை அணுகி வர்த்தகம் அல்லது வேலைவாய்ப்பை உறுதி செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6
தானம் - ஆசிரமங்களில் ஆரஞ்சுப்பழம் தானம் செய்யவும்.

ஜூலை 7 அன்று பிறந்த பிரபலங்கள் :

எம்.எஸ்.தோனி, கைலாஷ் கேர், அக்பர் கான், ராய்கேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா, குரு ஹர் கிஷன்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி