Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (27 ஜூன் 2022) கோவிலில் சந்தனம் தானம் செய்யவும்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (27 ஜூன் 2022) கோவிலில் சந்தனம் தானம் செய்யவும்..!

Numerology

Numerology

Numerology | ஜூன் 27 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பொதுக்கூட்டம், மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நீங்கள் பங்கேற்கலாம். நீங்கள் மைக் பிடித்து பேசும்போது, சிந்தனை மிகுந்த உங்கள் பேச்சு மற்றும் உங்கள் முக பாவணை ஆகியவை மற்றவர்களை ஈர்க்கும். தம்பதியர்களுக்கு வளமான வாழ்க்கை அமையும். காதல் உறவுகள் மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 1 மற்றும் 9
தானம் - குழந்தைகளுக்கு சிவப்பு நிற பழங்களை தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உணர்ச்சிகரமான முடிவுகளைக் காட்டிலும் யதார்த்த சிந்தனை அடிப்படையில் தான் உலகம் இயங்குகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். தேவையற்ற விஷயங்களில் கோபம் கொள்ள வேண்டாம். பணியிடங்களில் மூத்தவர்களின் உதவியுடன் வெற்றி கிடைக்கும். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது மற்றும் ஏற்றுமதி தொழில்களில் லாபம் கிடைக்கும். காதலர்கள் மத்தியில் ரொமான்ஸ் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பிங்க்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2
தானம் - பிச்சைக்காரர்களுக்கு சர்க்கரை தானமாக கொடுக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

முயற்சி செய்தால் இன்று வெற்றி நிச்சயம். ஆகவே, சோம்பலை கைவிட்டு, உங்களால் முடிந்த வரை முயற்சி செய்யவும். இன்று உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும். திறமைக்கு ஏற்ற அங்கீகாரமும் உண்டு. உங்கள் திட்டங்களைப் பார்த்து முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படுவார்கள். பாடகர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர், வழக்கறிஞர் போன்றோருக்கு சிறப்பான நாள் ஆகும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9
தானம் - கோவிலில் சந்தனம் தானம் செய்யவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் சோர்வாக உணரும் பட்சத்தில், பால் கலந்த தண்ணீரில் குளிக்கவும். சிவ நாமத்தை தொடர்ந்து உச்சரிக்கவும். இது உங்களுக்கான சவால்களை குறைத்து, மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கும். நிதி சார்ந்து எடுக்கும் பெரிய முடிவுகளுக்கு வெற்றி கிடைக்கும். மெட்டல் மற்றும் ஜவுளி உற்பத்தியில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். பச்சை காய்கறி உணவை எடுத்துக் கொள்ளவும்.

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - குழந்தைகளுக்கு செடிகள் வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு உங்களை சிலர் அவமதிப்பு செய்யக் கூடும். எதையும் புறந்தள்ளிச் செல்வது தான் சிறந்த மருந்தாக இருக்கும். நீண்ட கால பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து முழுமையான ஆதரவு கிடைக்கும். உங்கள் குடும்பத்திற்கான நன்றிக்கடனை நீங்கள் வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இன்று உங்கள் பார்ட்னர் உங்களிடம் முழுமையான பாசத்துடன் இருப்பார்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் ஆரஞ்ச்
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - விலங்குகளுக்கு உணவு தானமாக கொடுக்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நிகழ்ச்சிகள், நேர்காணல், விளையாட்டுப் போட்டி, ஷாப்பிங், சுற்றுலா போன்ற பலதரப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான உத்வேகம் நிறைந்த நாள் ஆகும். இன்று உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும், மன நிறைவும் கிடைக்கும். ரொமாண்டிக் உறவு மூலமாக குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சி திரும்பும். மாணவர்களின் வளர்ச்சிக்கு தேவையான புதிய வாய்ப்பு தேடி வரும்.

அதிர்ஷ்ட நிறம் - வயலெட்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - கோவிலில் வெள்ளிக்காசு தானமாக வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் வாழ்க்கைத் துணையிடம் இருந்து ஆடம்பரமான பொருள் அல்லது பணப் பலனை நீங்கள் பெறக் கூடும். உங்களைச் சுற்றியிலும் சதி வலை பின்னப்படுகிறது என்பதால் யார் மீதும் நம்பிக்கை வைக்காதீர்கள். தானாக தேடி வரும் சவால்களை புத்திக்கூர்மையுடன் எதிர்கொண்டீர்கள் என்றால் வெற்றி கிடைக்கும். மிகப் பெரிய பிரச்சினை இன்று மாயமாக மறைந்துவிடும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7 மற்றும் 9
தானம் - பணியாளர்களுக்கு சிறிய பாத்திரம் ஒன்றை தானம் செய்ய வேண்டும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் சிந்தனை மற்றும் செயல் பெரியதாக இருக்கட்டும். அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். பெரிய நிறுவனங்களில் நீங்கள் கொண்டிருக்கும் தொடர்புகள் மூலமாக லாபம் கிடைக்கும். எனினும் அதிகமான பொறுப்புகள், சட்ட ரீதியான வழக்குகள் போன்றவற்றால் மன அழுத்தம் இருக்கக் கூடும். மருத்துவர்களின் சாதனைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - தேவை உள்ள நபர்களுக்கு குடை தானம் செய்யவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள், பங்குச் சந்தை முதலீடு போன்றவை ஏற்றம் பெறும் நாளாகும். இன்றைக்கு நீங்கள் தான் ஈர்ப்புக்கான மையப் பொருளாக இருப்பீர்கள். காதல் உறவில் இருப்பவர்களுக்கு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த சிறப்பான நாள் ஆகும். மீடியா துறையில் உள்ள நபர்களுக்கு புகழ் கிடைக்க இருக்கிறது. அரசியல் கட்சியினருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - சிவப்பு குங்குமம் தானம் செய்ய வேண்டும்.

ஜூன் 27-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: ஆர் டி பர்மன், பி டி உஷா, அகஸ்டஸ் டி மோர்கன், கங்காதர் சாஸ்திரி, நிதின் முகேஷ்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி