ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (24 அக்டோபர் 2022) ஆசிரமத்திற்கு எண்ணெய் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (24 அக்டோபர் 2022) ஆசிரமத்திற்கு எண்ணெய் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | அக்டோபர் 24-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பண பரிவர்த்தனைகள் இன்று மிகுந்த சிரமம் கொண்டதாக இருக்கும். ஆகவே, உங்கள் மன தைரியத்தை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான சட்ட சிக்கல்கள் அல்லது அலுவலக சிக்கல்கள் ஆகியவற்றை தீர்த்து வைக்கக்கூடிய நபர் ஒருவரின் உதவி கிடைக்கும். ஆனால், அவரை முழுமையாக நம்பி விட வேண்டாம். நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் புதிய ப்ராஜெக்ட்களை ஏற்க வேண்டாம். இல்லையென்றால் பெயர் கெட்டுவிடும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஆசிரமங்களில் எண்ணெய் தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தனித்து மேற்கொள்ளும் தொழில்களை காட்டிலும், பார்ட்னர்ஷிப் அடிப்படையில் செய்யும் தொழில்களுக்கு வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றால் வீட்டில் உங்களுக்கான பொறுப்புகளை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் காதல் உணர்வுகள் நிரந்தர உறவுகளாக மாற இருக்கின்றன. பயணங்களை தவிர்க்கவும். அரசியல் கட்சியினர், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், நகை வியாபாரிகள் போன்றோர் ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனமுடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6

தானம் - கோவிலில் வெள்ளி காசு தானமாக கொடுக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் புதியதொரு தொடக்கத்தை இன்று எதிர்பார்க்கலாம். உங்கள் தனிப்பட்ட திறன்களை வெளிப்படுத்தும் போது, அவை எல்லோரையும் ஈர்க்கக் கூடியதாக அமையும். யோகா பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்கள், இசையமைப்பாளர்கள், மாணவர்கள், செய்தி வாசிப்பாளர்கள், எழுத்தாளர்கள் போன்றோருக்கு துறை சார்ந்த வளர்ச்சி கிடைக்கும். இன்றைய நாளின் தொடக்கத்தில் நெற்றியில் சந்தனம் பூசவும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - கோவிலில் சந்தனகட்டை வழங்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று புதிய ஆதாரங்கள் அல்லது புதிய சிந்தனை மூலமாக பணம் ஈட்டுவதற்கான நாளாகும். கண்களைத் திறந்து உங்கள் நண்பரை வரவேற்கவும். உங்கள் உடல் ஆரோக்கியம் மீது அக்கறை கொள்ளவும். இடைத்தரகர்கள், கட்டுமான தொழில் செய்பவர்கள், சாஃப்ட்வேர் பொறியாளர்கள், மருந்தாளுநர்கள் போன்றோர் இன்று ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம். உங்களுக்கான பண தேவைகள் அனைத்தையும் நீங்கள் சமாளித்துக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஆதரவற்றோர் இல்லத்தில் பருப்புகளை தானமாக வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பலமான சமூக தொடர்புகள் மூலமாக உங்களுக்கான புகழ் மற்றும் துறை சார்ந்த வளர்ச்சி கிடைக்கும். எந்த விஷயத்திலும் குழப்பம் அடைய வேண்டாம். சொத்து மற்றும் முதலீடு தொடர்பான முக்கிய முடிவுகளை உங்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கவும். விளையாட்டு வீரர்கள் மற்றும் பயண ஆர்வலர்களுக்கு நல்ல நேரம் வர காத்திருக்க வேண்டும். இன்று சோம்பேறித்தனத்தை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - குழந்தைகளுக்கு பேனாவை தானமாக கொடுக்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணம் வருவதற்கு நீங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், பலமான சமூக தொடர்புகள் மூலமாக பண பலன்கள் அதிகரிக்கும். உங்கள் நல்லெண்ணங்களை தவிர வேறு எதுவும் அமைதியை தர முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் தோள்களில் சுமக்கும் அதிகப்படியான பொறுப்புகளை இறக்கி வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய தந்தை என்ற முறையில் வழி காட்ட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஆசிரமங்களுக்கு பாத்திரங்களை தானமாக கொடுக்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கடந்த காலங்களில் உங்கள் மனதை புண்படுத்தியவர்கள் தொடர்ந்து உங்களுக்கு சிக்கலை தரக்கூடும். பணியிடத்தில் அதிகாரிகள் அல்லது மூத்த பணியாளர்களுடன் விவாதிப்பதை தவிர்க்கவும். தம்பதியர்களுக்கு இடையிலான உறவு சிறப்பாக அமையும். எந்தவொரு ஆவணங்கள் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டாம். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வணிக உறவுகள் சுமூகமாக இருக்கும். ஆகவே, நீங்கள் பதற்றம் அடைய வேண்டியதில்லை.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவிலில் பால் வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று பல ஏற்ற, இறக்கங்கள் காணப்படும். ஒற்றை இலக்கை அடைவதற்கு கூட நீங்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மூத்த பணியாளரின் ஆலோசனைகளை பின்பற்றி நடக்கவும். வணிகம் தொடர்பான பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக அமையும். ஒப்பந்தங்கள் அல்லது நேர்காணல் போன்றவற்றை ஒரு நாளைக்கு ஒத்தி வைக்கவும். இன்று பயணங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கால்நடைகளுக்கு பசுந்தீவனம் வைக்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கல்வி கற்பித்தல், சட்டம், நிதி போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இன்று புதிய வளர்ச்சி காணப்படும். வணிகம் அல்லது வேலைகளில் புதிய சக்தியை அடைய வேண்டும் என்றால் பழைய நண்பர்களின் உதவியை நாட வேண்டியிருக்கும். திருமண திட்டங்கள் தொடர்பாக உங்கள் குடும்பத்தினருடன் விவாதிப்பதற்கான நாள் இதுவாகும். கோபங்களை தவிர்க்கவும். உணவில் கீரை சேர்த்துக் கொள்ளவும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

தானம் - பெண்களுக்கு ஆரஞ்சு வண்ண துணி தானமாக கொடுக்கவும்.

அக்டோபர் 24 அன்று பிறந்த பிரபலங்கள் : நவ்ஜோத் சிங் சித்து, வீரேந்திர சேவா, கிரண் குமார், வி.எஸ்.அச்சுதானந்தன், லைலா சேத், கோவர்தன் திருப்பதி,

Published by:Selvi M
First published:

Tags: Numerology